Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 29, 2013

ஏடிஎம், மொபைல் பேங்கிங் வசதிகளுடன் கலக்கப் போகுது போஸ்ட் ஆபீஸ்!

வங்கிகளை போலவே போஸ்ட் ஆபீஸ்களிலும் சேமிப்பு கணக்கு தொடங்க முடியும். வங்கிகளை காட்டிலும் போஸ்ட் ஆபீசில் கணக்கு தொடங்கினால், டெபாசிட் செய்யும் தொகைக்கு அதிக வட்டி தருகிறார்கள். ஆனாலும் போஸ்ட் ஆபீசில் சேமிப்பு கணக்கு தொடங்க பெரும்பாலானோர் முன்வருவதில்லை. 

காரணம்... இன்னும் ஹைதர் அலி, காலத்தை போல எந்த போஸ்ட் ஆபீசில் கணக்கு வைத்திருக்கிறோமோ அங்கு மட்டுமே நமது கணக்கில் பணத்தை போடவும் எடுக்கவும் முடியும் என்பதுதான். ஏடிஎம், இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் என எந்த மாடர்ன் வசதியும் கிடையாது. நீண்ட வரிசையில் நின்றுதான் பணத்தை கட்டவும் எடுக்கவும் வேண்டும். பென்சன் வாங்கும் சீனியர் சிட்டிசன்கள் மட்டும்தான் பெரும்பாலும் போஸ்ட் ஆபீசில் கணக்கு வைத்திருக்கிறார்கள். இதுதான் தற்போதைய போஸ்ட் ஆபீசின் நிலை. ஆனால் இது அடுத்த மாதம் முதல் தலைகீழாக மாற இருக்கிறது. ஆம்... தனியார் வங்கிகளுக்கு இணையாக போஸ்ட் ஆபீஸ்களும் ஹைடெக் ஆக மாற இருக்கிறது.

கோர் பேங்கிங் சிஸ்டம் எனப்படும் அனைத்து போஸ்ட் ஆபீஸ்களும் கம்ப்யூட்டர் மூலம் இணைக்கும் விதமான நெட்வொர்க் வசதி கொண்டு வரப் போகிறார்கள். முதல் கட்டமாக இந்த வசதி சென்னையில் அண்ணாசாலை தலைமை தபால் நிலையம், மயிலாப்பூர், தி.நகர், தாம்பரம் ஆகிய 4 போஸ்ட் ஆபீசில் கொண்டு வரப்படுகிறது. அதாவது, 4 போஸ்ட் ஆபீசில் எந்த இடத்தில் கணக்கு வைத்திருந்தாலும், அதை 4 போஸ்ட் ஆபீசில் எங்கு வேண்டுமானாலும் சரி பார்க்கலாம், பணம் கட்டலாம். அதோடு, அக்டோபர் மாதம் முதல் இந்த 4 போஸ்ட் ஆபீஸ்களிலும் ஏடிஎம் வசதியும் அமைக்கப்பட உள்ளது.போஸ்ட் ஆபீஸ்களில் கணக்கு வைத்திருப்போருக்கு விரைவில் ஏடிஎம் கார்டு வழங்கப்படும் இதன் மூலம் 2.5 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன் அடைவார்கள்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘4 போஸ்ட் ஆபீஸ்கள் தவிர மற்ற போஸ்ட் ஆபீஸ்களிலும் கோர் பேங்கிங் சிஸ்டமை (சிபிஎஸ்) சென்னை மற்றும் அதன் புறநகர்களில் உள்ள 110 போஸ்ட் ஆபீஸ்களில் இன்போசிஸ் நிறுவனத்துடன் இணைந்து
விரிவுப்படுத்த உள்ளோம். இதற்கான சாப்ட்வேர் டெஸ்ட்டிங் நடந்து வருகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் சிபிஎஸ் அனைத்து போஸ்ட் ஆபீஸ்களிலும் படிப்படியாக செயல்முறைக்கு வரும். இதனுடன் இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்ற வசதிகளும் கொண்டுவரப்படும். இதற்காக போஸ்ட் ஆபீஸ் ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படு வருகிறது’ என்றனர்.
-source:Dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...