Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 04, 2013

ஹஜ் குழுவுக்கு மானிய தொகை ரூ.30 லட்சமாக உயர்வு- முதல்வர் ஜெயலலிதா

சென்னை: ஹஜ் குழுவிற்கு வழங்கப்பட்ட மானியத் தொகை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாப்பதிலும், அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதிலும், தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஆதரவற்ற முஸ்லிம் சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் மூலம் திரட்டப்படும் நன்கொடைக்கு இணை மானியத் தொகை, கடந்த 1.4.2012 முதல் 1:2 விகிதத்தில் இருமடங்காக உயர்த்தப்பட்டது. இதன் அடிப்படையில், காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், தேனி, ராமநாதபுரம், கோயம்புத்தூர், திருப்பூர், நிலகிரி, திருவாரூர் மற்றும் நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களுக்கு ரூ.49 லட்சத்து 68 ஆயிரத்து 347 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து ஹஜ் யாத்திரைக்கு செல்லும் பயணிகளை தேர்வு செய்வது, மற்றும் ஹஜ் பயணிகள் மெக்கா சென்று பாதுகாப்பாக திரும்புவதற்கான அனைத்து
உதவிகளை மாநில ஹஜ் குழு செய்து வருகிறது. இக்குழுவிற்கு வழங்கப்பட்டு வரும் மானியம், ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக ஏற்கனவே உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு ஹஜ் குழுவிற்கு வழங்கப்படும் மானியம் ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...