Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 26, 2012

“அம்மா” “அப்பா” எனும் வார்த்தைகளுக்கு இனி ப்ரான்சிஸ் தடை !

பாரீஸ் : ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு பிரான்ஸ் அரசாங்கம் அனைத்து விதமான அரசு ஆவணங்களிலிருந்தும் “அம்மா” “ அப்பா” எனும் வார்த்தைகளை நீக்க முடிவு செய்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. வழமையாக ஆணும் பெண்ணும் திருமணம் செய்வது மரபு. சமீப காலமாக அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் முன்னேற்றம் எனும் பெயரில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளும் போக்குக்கு ஆதரவு பெருகி வருகிறது. இச்சூழலில் இப்படிப்பட்ட கலாசார பெருமைக்கு? தலைநகராக கருதப்படும் ப்ரான்ஸில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதை அரசு ஆதரிக்க தொடங்கியது.

ஆனால் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்தால் தந்தை மற்றும் தாய் என யார் பெயரை போடுவது என குழப்பம் ஏற்படும் நிலை இருந்தது. இச்சங்கடத்தை நீக்கும் பொருட்டு இனி அரசு ஆவணங்களில் அம்மா, அப்பா என்ற பெயர்கள் நீக்கப்படும் என்றும் அதற்கு பதில் பெற்றோர்கள் 1, 2 என்று இடம் பெறும் என்று ப்ரான்ஸ் அரசு புதிய வரைவு சட்டம் இயற்றியுள்ளது. மேலும் திருமணம் என்பது ஓரே பாலினம் அல்லது வெவ்வேறு பாலினத்தை சார்ந்த இருவரின் சங்கமம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் ஒரே பாலினத்தை சார்ந்தவர்களுக்கு குழந்தைகளை தத்தெடுக்கும் விஷயத்தில் வழமையாக திருமணம் செய்யும் வெவ்வேறு பாலினத்தை சேர்ந்தவர்களை போன்றே சம உரிமை கொடுக்கப்படும் என்றும் அவ்வறிக்கையில்

காட்டுமன்னார்கோவில் பகுதியில் பிளாஸ்டிக் குடம் விற்பனை அமோகம்

காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள கிராமங்களில் மும்முனை மின்சாரம் வழங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளதால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள கிராமங்களில் காலை நேரத்தில் பொதுமக்கள் தண்ணீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர். மின் மோட்டார்கள் அமைத்துள்ள பகுதிகளுக்கு சென்று குடிநீர் பெற வேண்டிய நிலையில் உள்ளனர். வீடுகளுக்கு அருகே ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் தண்ணீர் வரும் நேரத்தில் குழாய்களில் தண்ணீரை பிடிக்கின்றனர்.

 இந்நிலையில் மும்முனை மின்சாரத்தின் நேரம் குறைக்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று வயல்கள், கொல்லைகளில் உள்ள ஆழ்குழாய் கிணற்றின் மூலம் தண்ணீர் பிடித்து வருகின்றனர். வீடுகளில் சில்வர், பித்தளை குடங்களிலேயே தண்ணீர் பிடித்து வந்தனர். தற்போது நீண்ட தூரம் நடந்து சென்று குடிநீர் பிடிக்க வேண்டிய நிலையில் உள்ளதால் பிளாஸ்டிக் குடங்களை அதிக அளவில் கிராமங்களில் வாங்கி வருகின்றனர். இதனால் பிளாஸ் டிக் குடங்கள் விற்பவர்கள் கிராமங்களை நோக்கி அதிகம் பேர் செல்கின்றனர். இதுபற்றி பழஞ்சநல்லூரில் பிளாஸ்டிக் குடம் வாங்கும் பெண்களை கேட்ட போது தற்போது அதிக தூரம் நடந்து செல்கிறோம். இதனால் சில்வர் பித்தளை குடங்களில் தண்ணீரை நிரப்பி தூக்கி கொண்டு வர இயலவில்லை. ஆகையால் பிளாஸ்டிக் குடங்களை வாங்கி வருகிறோம்.

பிளாஸ்டிக் குடத்தின் விலையும் தற்போது அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ரூ.50க்கு வாங்கிய குடங்கள் ரூ. 80க்கு

செப்டம்பர் 25, 2012

இறைத்தூதருக்கு அவமதிப்பு: ஈரானில் ஜி மெயிலுக்கு தடை!

டெஹ்ரான்:இறைத்தூதரை அவமதிக்கும் அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து மின்னஞ்சல் சேவை இணையதளமான ஜிமெயிலுக்கு ஈரான் தடை விதித்துள்ளது. ஈரான் செய்தி நிறுவனமான மெஹர் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் ஈரானில் ஜிமெயில் முடக்கப்பட்டது.

கூகிளின் வீடியோ பகிர்வு இணையதளமான யூ ட்யூப் இஸ்லாத்தின் இறுதித் தூதரும், முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்)அவர்களை இழிவுப்படுத்தும் அமெரிக்க திரைப்படத்தின் காட்சிகளை வெளியிட்டது. யூ ட்யூபிற்கு ஏற்கனவே ஈரான் தடைவிதித்துள்ளது. இந்நிலையில், ஆஸ்கர் விருது அமைப்பாளர்கள் இத்திரைப்படத்தை கண்டிக்காவிட்டால் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாக ஈரான் அறிவித்துள்ளது. மிகச்சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவில் ஈரானின் ரிஸா மிர்கராமியின் வன் பீஸ் ஆஃப் க்யூப் ஷுகர் என்ற திரைப்படம் பரிந்துரைச் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே க்ரீஸ் நாட்டில் இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய 40 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. ஏதன்ஸில் போராட்டத்தின் போது போலீசாருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கைது நடந்துள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் சட்டப்பேரவை இத்திரைப்படத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இஸ்லாம் மற்றும் இறைத்தூதருக்கு எதிரான அவமதிப்புகளை கட்டுப்படுத்த அமெரிக்கா தயாராகவேண்டும் என்று அத்தீர்மானத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையிலும் இறைத்தூதரை

இறைத்தூதர் அவமதிப்பு திரைப்படம் – அமெரிக்காவில் கண்டனப் பேரணி

இறைவனின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்)அவர்களை இழிவுப் படுத்தும் அமெரிக்க திரைப்படத்திற்கு எதிராக அந்நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கண்டனப் பேரணி நடைபெற்றது. அமெரிக்க முஸ்லிம் காங்கிரஸ் இந்த பேரணிக்கு ஏற்பாடுச் செய்தது. மதங்களை நிந்திப்பதை அங்கீகரிக்க இயலாது என்றும், அன்பும், அமைதியும் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பேரணியில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நன்றி:பெருநியூஸ் 

செப்டம்பர் 24, 2012

மாமனிதர் நபி(ஸல்) (சுயமரியாதையை போதித்தவர்)

எழுதியவர்: சகோதரர் மௌலவி. பி.ஜெயினுல் ஆபிதீன் அவர்கள். 

மனிதன் சுய மரியாதையை விட்டு விடக் கூடாது என்று அழுத்தமாகக் கூறிய அவர்கள் தமக்காகக் கூட மற்றவர்கள் சுயமரியாதையை இழக்கக் கூடாது என்று கூறினார்கள்.

சிலைகளுக்கு எந்தச் சக்தியும் இல்லை என்று பிரச்சாரம் செய்த பலர் தமது தலைவரின் சிலைகளுக்கு இன்று மாலை மரியாதை செய்து தங்கள் சுயமரியாதையை இழப்பதைக் காண்கிறோம். தமது தலைவர் அடக்கம் செய்யப்பட்ட திசை நோக்கி வணங்குவதாக வெளிப்படையாக அறிவிப்பதைக் காண்கிறோம். இறந்து போனவர் உணர மாட்டார் என்பது நன்றாகத் தெரிந்தும் அவரது நினைவிடத்தில் மலர் தூவுவதைப் பார்க்கிறோம்.

இவையெல்லாம் பகுத்தறிவுக்கும், சுயமரியாதைக்கும் அப்பாற்பட்டது என்று நன்றாகத் தெரிந்திருந்தும் அதைச் செய்வதைப் பார்க்கிறோம்.நபிகள் நாயகத்தையும் பார்க்கிறோம்.
ஐம்பது வருடத்துக்குள் பகுத்தறிவு, மூட நம்பிக்கையாக இங்கே மாறியது போல் அந்த மாமனிதரின் சமுதாயம் மாறவில்லை.  நபி(ஸல்) அவர்கள் மீது உயிரையே வைத்திருக்கும் முஸ்லிம் சமுதாயம், 

*அவருக்காகச் சிலை வடிக்கவில்லை.
* அவரது சமாதியில் விழுந்து கும்பிடவில்லை.
* அவருக்காக எந்த நினைவு விழாவும் நடத்தவில்லை.
* அவரது அடக்கத் தலத்தில் மலர் தூவுதலும் இல்லை. மலர்ப் போர்வையும் சாத்தப்படுவதில்லை.
* எந்த முஸ்லிமுடைய சுயமரியாதைக்கும் அவரால் எள்ளளவும் பங்கம் ஏற்படவில்லை.
* காலில் விழுந்து கும்பிடுவது கிடக்கட்டும்! அதற்கும் குறைவான மரியாதையைக் கூட நபிகள் நாயகம் ஏற்கவில்லை.


வயதில் பெரியவர், ஆசிரியர், தலைவர்கள், முதலாளிகள், நிர்வாகிகள், மேலதிகாரிகள் போன்றோருக்காக மற்றவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்வதை உலகமெங்கும் காண்கிறோம்.

மேல் நிலையில் உள்ளவர்கள் இந்த மரியாதையை உளமாற விரும்புவதையும் நாம் காண்கிறோம். எழுந்து நிற்பவனும் நம்மைப் போன்ற மனிதன் தானே! நமக்காக எழுந்து நின்றால் அவரது சுயமரியாதைக்கு அது இழுக்கு அல்லவா? என்று ஒரு தலைவரும் சிந்தித்ததாக உலக வரலாற்றில் நாம் அறியவில்லை.

மேடையில் பல தலைவர்கள் முன்கூட்டியே வந்து அமர்ந்திருப்பார்கள். கடைசியாக சுயமரியாதையைப் பேசும் தலைவர் மேடைக்கு வருவார். உடனே மேடையில் அமர்ந்திருக்கும் குட்டித் தலைவர்கள் அனைவரும் எழுந்து நிற்பதை நாம் பார்க்கிறோம். 'நானும் உங்களைப் போன்ற மனிதன் தானே! எனக்காக எழுந்து நிற்பது உங்களுக்கு இருக்க வேண்டிய சுய மரியாதைக்கு இழுக்கு அல்லவா?' என்ற எந்தத் தலைவரும் அறிவுரை கூறியதாக நாம் காணவில்லை.

அரசியல் தலைவர்களும் இவ்வாறு கூறியதில்லை. சுய மரியாதைத் தலைவர்களும் இவ்வாறு கூறியதில்லை. ஆன்மீகத் தலைவர்களும் கூறியதில்லை.

இந்த மாமனிதரோ எந்த மனிதரும் எந்த மனிதருக்காகவும் மரியாதை செய்யும் விதமாக எழுந்து நிற்கக் கூடாது என்று கட்டளை பிறப்பித்தார்கள்.

நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களும், இப்னு சப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) 'அமருங்கள்' என்றார். 'தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றும் முஆவியா (ரலி) கூறினார். நூல்கள் : திர்மிதி 2769 அபூதாவூத் 4552

மன்னருக்காகக் கூட மக்கள் எழக் கூடாது. அவ்வாறு எழ வேண்டும் என்று எந்த முஸ்லிமும் எதிர்பார்க்கக் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

செப்டம்பர் 22, 2012

உண்மையை உலகுக்கு உரக்க சொல்லும் நேரம் வந்துவிட்டது!

உண்மையை உலகுக்கு உரக்க சொல்லும் நேரம் வந்துவிட்டது - உணர்வலைகள்
     முஸ்லிம்கள் தங்களது உயிரை விட மேலாக மதிக்கக்கூடிய உத்தம தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை தீவிரவாதியாககாமுகராக சித்தரித்து படமெடுத்ததன் மூலம் இஸ்லாத்தை அழித்து விடலாம் என்று நினைத்து திட்டம் தீட்டினர் அயோக்கிய யூதனும்கேவலப்பட்ட பாதிரியும்.
     ஆனால் எப்போதெல்லாம் இஸ்லாம் தாக்கப்படுகின்றதோ அப்போதெல்லாம் இஸ்லாம் அபரிமிதமான வளர்ச்சியடைந்து வரும் நிகழ்வுகளை நாம் கண்கூடாகக் கண்டு வருகின்றோம்.
     இதற்கு முன்பாக 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டன. தகர்த்தது இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று கூறி ஆஃப்கானிஸ்தான் மீது தாக்குதல் தொடுத்தது அமெரிக்கா.
     அமெரிக்கா தாக்குதல் தொடுத்தது ஆஃப்கானிஸ்தான் மீது மட்டுமல்லஇஸ்லாத்தின் மீதும்தான்.
     இஸ்லாம்தான் இத்தகைய தீவிரவாத செயல்களைத் தூண்டுகின்றது. அவர்களது வேதம்தான் உலகத்தின் நிம்மதிக்கு குண்டு வைக்கின்றது. அவர்களது இறைத்தூதரின் வழிகாட்டுதல்கள்தான் அவர்களை தீவிரவாதிகளாக்குகின்றன என்று இஸ்லாத்தின் மீது அபாண்டமான அவதூறுகளும்பொய்யான குற்றச்சாட்டுகளும் பரப்பிவிடப்பட்டன.
    இவர்களது இந்த பொய்ப்பிரச்சாரம்தான் 2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகமெங்கும் குறிப்பாக அமெரிக்கா முழுவதும் இஸ்லாம் அபரிமிதமான வளர்ச்சி பெறுவதற்கு அடிகோலியது.
இவர்களது இந்த கேடுகெட்ட பிரச்சாரத்தினால் ஏற்பட்ட எதிர்விளைவுகள் என்ன தெரியுமா?
    திருக்குர்ஆன் விற்பனை அதிகமானது: அமெரிக்காவிலுள்ள அனைத்து மகாணங்களிலும்அத்தனை புத்தக நிலையங்களிலும் திருக்குர்-ஆன் அதிக அளவு விற்பனையானது. இவர்கள் இஸ்லாத்தின் மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளைச் சொல்கின்றார்களே! இஸ்லாம் என்னதான் சொல்ல வருகின்றது என்று இஸ்லாமியரல்லாதவர்களை ஆய்வு செய்ய அவர்களது பொய்ப்பிரச்சாரம் தூண்டியது.
இணைய தளம் மூலம் எகிறிய அழைப்புப்பணி:
    இணைய தளம் மூலமாக திருக்குர்-ஆன் ஆங்கிலம் மற்றும் பல மொழிகளில் அதிக அளவு  பதிவிறக்கம் செய்யப்பட்டது. மனித இனத்தின் நேர்வழிக்காக அருளப்பட்ட திருக்குர்-குர்ஆனை மக்கள் சிந்திக்க அது வாய்ப்பை ஏற்படுத்தித்தந்தது.
பள்ளிவாயில்களை நோக்கி படையெடுத்த பிறமதத்தவர்கள்:
    அமெரிக்க அயோக்கிய அரசோ மற்ற இஸ்லாமிய நாடுகள் மீது தீவிரவாத முத்திரை குத்தி படையெடுத்த நேரத்தில்பிறமத மக்கள்  பள்ளிவாயில்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். பல தேவாலயங்களும்,கேளிக்கை பார்களும் மூடப்பட்டு அவைகள் பள்ளிவாசல்களாக உருமாறின.
இஸ்லாமிய அழைப்பு நிலையங்களின் ஹாட்லைன்கள் பிஸியானது :
     இஸ்லாமிய அழைப்பு நிலையங்களின் ஹாட்லைன் மற்றும் தொலைபேசிகள் இஸ்லாத்தை அறிய விரும்புவோரின் அழைப்புகளால் பிஸியாக இருந்தன.
கூகுளில் குர்-ஆன் மற்றும் இஸ்லாம் தேடப்பட்டன :
     இஸ்லாமிய எதிரிகள் குர்-ஆனைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் விமர்சனம் செய்ய செய்ய கூகுளில் இஸ்லாம் மற்றும் குர்-ஆன் குறித்து தேடுவோர்மற்றும் இஸ்லாத்தை குறித்து இணையதளங்களில் தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.
நூலகங்களில் குர்-ஆன் காணாமல் போயின :
     எத்தணை பிரதிகள் வாங்கி வைத்த போதும் ஐரோப்பாகனடாஅமெரிக்காவில் உள்ள நூலகங்களில் குர்-ஆனையே குறிவைத்து அனைவரும் படிப்பதற்கு எடுத்துக் கொண்டு போவதால் குர்-ஆன் ஸ்டாக் இல்லாமல் போனது.
முஸ்லிம்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் மிச்சம் :
     மில்லியன் கணக்கான டாலர்கள் செலவழித்து செய்ய வேண்டிய தஃவா பணி இவர்களது அவதூறுப் பிரச்சாரத்தால் மிச்சமானது. முஸ்லிம்கள் செலவழிக்க வேண்டிய மில்லியன் கணக்கான டாலர்கள் மிச்சமாயின.
அணி அணியாய் மக்கள் இஸ்லாத்தை ஏற்றனர் :
     முன்பைக் காட்டிலும் இஸ்லாத்தை ஆராய்வதன் மூலம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது.
     இப்படி இவர்கள் இஸ்லாத்தை இழிவுபடுத்த நினைத்தபோதெல்லாம் இஸ்லாம் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அதுபோல இப்போது இவர்கள் எடுத்துள்ள இந்தத் திரைப்படமும்,அதனால் முஸ்லிம்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பும்முஸ்லிம்காளின் போராட்டமும் கோடிக்கணக்கான இஸ்லாமியரல்லாத பிறமத மக்களை இஸ்லாத்தைப் பற்றி ஆய்வு செய்யத் தூண்டியுள்ளது.
    அந்த மானம்கெட்டவர்கள்

செவ்வாய் கிரகத்தில் பிரமிடு

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் பிரமிடு வடிவ பாறை ஒன்று இருப்பதை கண்டுபிடித்துத் தெரிவித்துள்ளது அமெரிக்காவின் கியூரியாசிட்டி விண்கலம். கிளன்லெக் என்ற இடத்தை நோக்கிப் போகும் பாதையில் இந்த பிரமிடு வடிவ பாறை உள்ளது. இந்தப் பாறையானது கியூரியாசிட்டி விண்கலத்திற்கு முன்பாக 2.5 மீட்டர் தூரத்தில் உள்ளது. இதன் உயரம் 25 சென்டிமீட்டராக உள்ளது. 40 சென்டி மீட்டர் அகலம் கொண்டதாக உள்ளது. இதை கியூரியாசிட்டியில் உள்ள ரோபோட் ஆய்வு செய்யவுள்ளது.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாறைக்கு ஜேக் மெடிஜெவிக் என்று பெயரிட்டுள்ளது நாசா. ஜேக் மெடிஜெவிக் என்பவர், நாசாவின் செவ்வாய் அறிவியல் ஆய்வகத்தில் பணியாற்றிய முதன்மைப் பொறியாளர் ஆவார். கியூரியாசிட்டி விண்கலத்தின் முக்கியப் பணிகளில் இவரது பங்கும் உண்டு. 64 வயதான இந்தப் பொறியாளர், கியூரியாசிட்டி விண்கலம், செவ்வாய் கிரகத்தில் கால் பதித்த அடுத்த நாள் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்து. இந்த பிரமிடு வடிவ பாறையானது அதிசயமானதல்ல என்று கூறியுள்ள நாசா, இது காற்றின் அரிப்பால் இந்த வடிவத்தை அடைந்திருக்கலாம் என்று கருதுவதாக கூறியுள்ளது. கியூரியாசிட்டி விண்கலம் இறங்கிய கேல் கிரேட்டர் பகுதியில் உள்ள மலையிலிருந்து இந்தப் பாறையானது தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என்றும்

செப்டம்பர் 17, 2012

வீர சகோதரியின் பேச்சை கேளுங்கள்!



சென்னை, செப் 17: சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 15.09.2012அன்று  அமெரிக்க தூதரகம் முற்றுகை நடந்த போது ஒரு சகோதரி நாங்கள் சுமையா (ரலி) அன்ஹாவின் வாரிசுடா என்று உலகுக்கே நிரூபித்த வீர சகோதரியின் பேச்சை கேளுங்கள்!




source:pnotntj.com

நபிகளுக்கு எதிரான படம் என்று கூறாமல் ஏமாற்றி விட்டனர் நடிகை

வாஷிங்டன்: இஸ்லாம் மதம் மற்றும் நபிகள் நாயகத்திற்கு எதிரான படம் என்று கூறாமல் தன்னை இயக்குனர் ஏமாற்றிவிட்டதாக இன்னசனஸ் ஆப் முஸ்லிம்ஸ் படத்தில் நடித்த அன்னா குர்ஜி தெரிவித்துள்ளார். இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்ட படம் இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ். இதை இயக்கியவர் எகிப்தில் பிறந்து கலிபோர்னியாவில் வாழும் கிறிஸ்தவரான நகோலா. அவர் போதை மருந்து வியாபாரம் செய்து சிறைக்கு சென்று வந்தவர். அவரின் படத்தை எதிர்த்து உலக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதில் அந்நாட்டுக்கான அமெரிக்க தூதர் உள்பட 4 அதிகாரிகள் பலியாகினர். மேலும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த போராட்டம் கலவரமானதில் 7 பேர் பலியாகினர், ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் அந்த படத்தில் நபிகள் நாயகத்தின் இளைய மனைவியாக நடிக்க வைக்கப்பட்ட அன்னா குர்ஜி(21) கூறுகையில், இந்த படம் இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகத்திற்கு எதிரானது என்று கூறாமல் நகோலா என்னை ஏமாற்றிவி்ட்டார். படத்தில் ஜார்ஜ் என்ற கதாபாத்திரத்தின் இளைய மனைவியாக நடித்தேன். ஆனால் ஜார்ஜ் கதாபாத்திரத்தின் பெயர் முகம்மது என்று மாற்றப்படும் என்று எனக்கு தெரியாது. நான் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறேன்.

மத்திய கிழக்கு நாட்டு மக்கள் என் மீது குற்றம் சுமத்துவார்கள் என்று பயமாக உள்ளது. நான் ஒரு கத்தோலிக்கர் என்பதால் நான் வேண்டும் என்றே முஸ்லிம்களுக்கு எதிராக நடந்ததாக அவர்கள் நினைக்கலாம். நான் தூங்குவதற்கு தூக்க மாத்திரை எடுத்துக் கொள்கிறேன். பல நாட்களாக அழுது கொண்டிருக்கிறேன். அந்த படத்தில் எனது முகம் தெளிவாக உள்ளது. படத்தைப் பார்ப்பவர்கள்

செப்டம்பர் 16, 2012

அமெரிக்காவை கண்டித்து சிதம்பரத்தில் எழுச்சி மிகு ஆர்ப்பாட்டம்!






சிதம்பரம், செப் 15: நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து சிதம்பரத்தில் இன்று (15.09.2012) மாலை 4:30 மணியளவில் கஞ்சி தொட்டி அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது. இதில் சிதம்பரம் தவ்ஹீத் பள்ளி இமாம் சகோ.முஹம்மது ஹனீப் அவர்கள் கண்டன உரையை நிகழ்த்தினார்கள்...
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள்  உட்பட ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டு அமெரிக்க அரசையும்,  திரைப்படத்தை தயாரித்தவனையும் அதை இன்னமும் நீக்காமல் வைத்துள்ள Youtube-ஐ  கண்டித்தும் கொழுத்தும் வெயிலில் கோசங்களை எழுப்பினர்.

இதில் முஸ்லிம்களின் உயிர்யினும் மேலாக நினைக்கும் நபிகள் நாயகத்தை கொஞ்சைப்படுத்திய அமெரிக்க கயவர்களை கண்டித்து ஆக்கோரஷமான கோஷங்களை எழுப்பினர்.
ஒரு கட்டத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா, திரைப்படம் எடுத்த கயவனின் உருவ பேணர்களை நமது சகோதரர்கள் கொளுத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
எழுச்சி மிகு இந்த ஆர்பாட்டத்தில் ஏரளமான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!


செப்டம்பர் 15, 2012

கதிகலங்கி நிற்கும் அமெரிக்கா !உலகம் முழுவதும் போராட்டங்கள் !

பண்பாடு கற்றுத்தந்த பாசமிகு நபியை விமர்சித்த அமெரிக்க திரைப்படத்தை எதிர்த்து உலகம் முழுவதும் ஆர்ர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் தொடர்கின்றன...இதோ அந்த காட்சிகள்

சென்னை ஆர்ப்பாட்டம் 




தமிழ்நாடு சென்னை 

பற்றி எரியும் அமெரிக்க  தூதரகம் -துனிசியா 






எகிப்து தூதர முற்றுகை  

செப்டம்பர் 14, 2012

இனி வருடத்துக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே -மத்திய அரசு

டெல்லி: இனி வருடத்துக்கு ஒரு வீட்டுக்கு இப்போதைய விலையான ரூ.386.50க்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து வாங்கப்படும் ஒவ்வொரு கூடுதல் கேஸ் சிலிண்டரின் விலையும் ரூ.733.50 ஆக இருக்கும். இந்தக் கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வருகிறது.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இக் கூட்டத்தில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதே போல சமையல் கேசுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

கேஸ் விலையை மத்திய அரசு உயர்த்தாவிட்டாலும், அதன் சப்ளை'யில் மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளது. இப்போது 14.2 கிலோ எடை கொண்ட சமையல் ஒரு கேஸ் சிலிண்டரின் உண்மையான விலை ரூ.733.50 ஆகும். ஆனால், ஒவ்வொரு கேஸ் சிலிண்டருக்கும் மத்திய அரசு ரூ.347 ரூபாய் மானியமாக வழங்குகிறது. இதனால் நமக்கு சிலிண்டர் ரூ.386.50க்கு விற்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் இந்த மானியத்தை ஒரு வருடத்துக்கு முதல் 6 சிலிண்டர்களுக்கு மட்டுமே வழங்குவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மேல் வாங்கப்படும் சிலிண்டர்களுக்கு மக்கள் உண்மையான விலையைத் தர வேண்டும். இதனால் இனி வருடத்துக்கு ஒரு வீட்டுக்கு இப்போதைய விலையான ரூ.386.50க்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும். இதையடுத்து வாங்கப்படும் ஒவ்வொரு கூடுதல் கேஸ் சிலிண்டரின் விலையும் ரூ.733.50 ஆக இருக்கும்.
இந்தக் கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வருகிறது.

சந்தை விலையான ரூ.733.50 கொடுத்து ஆண்டுக்கு எத்தனை சிலிண்டர்கள் வேண்டுமானாலும் வாங்கிக்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அறிவிப்போம்- தலைமை நீதிபதி இக்பால் அதிரடி எச்சரிக்கை !


சென்னை: கடலூர் மாவட்ட மாஜிஸ்திரேட் புகழேந்தியை அவரது சேம்பருக்குள் புகுந்து கடுமையாக மிரட்டிய இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அறிவிக்க நேரிடும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் தலைமையிலான முதன்மை பெஞ்ச் இன்று கடும் எச்சரிக்கை விடுத்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது
ஆண்டு விழாவுக்கு முதல்வர் ஜெயலலிதாவை நேரில் போய் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அழைத்தபோதே கடும் சர்ச்சை எழுந்தது. இதனால் நீதித்துறையில் ஆட்சி அதிகார துஷ்பிரயோகம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று வக்கீல்கள் பலரும் குமுறினர். அதற்கேற்ப அடுத்த சில நாட்களிலேயே கடலூர் மாவட்ட கோர்ட்டில் ஒரு பெரும் சர்ச்சை வெடித்தது.
மாஜிஸ்திரேட் புகழேந்தி என்பவரிடம், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் என்பவர் மிரட்டும் தொணியில் பேசியதால் கடும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வக்கீல்களும், கோர்ட் ஊழியர்களும் இன்ஸ்பெக்டரை சிறை பிடித்தனர். இதையடுத்து மாவட்ட எஸ்.பி.யே நேரில் வந்து அந்த இன்ஸ்பெக்டரை மீட்டுச் சென்றார்.
குற்றவியல் இன்ஸ்பெக்டராக இருப்பவர்தான் இந்த கார்த்திகேயன். இவர் திருட்டுப் போன பொருட்களை மீட்டது தொடர்பாக மாஜிஸ்திரேட் புகழேந்தியிடம் ஒரு விண்ணப்பம் அளித்தார். ஆனால் அது சரியில்லை என்று மாஜிஸ்திரேட் நிராகரித்து விட்டார். இதனால் கோபமடைந்த கார்த்திகேயன் மாஜிஸ்திரேட்டை கடுமையாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால்தான் அவரை வக்கீல்கள் சிறை பிடித்தனர்.
இந்த விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து மாவட்ட செஷன்ஸ் நீதிபதி தலையிட்டு வக்கீல்களை அமைதிப்படுத்தினார். அதேசமயம், மாவட்ட மாஜிஸ்திரேட் புகழேந்தி நடந்த விவரங்களை விளக்கிசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பாலுக்கு விரிவான புகார் ஒன்றை அனுப்பினார்.
இதையடுத்து தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று அரசு தலைமை வக்கீல் நவநீதகிருஷ்ணனை அழைத்து இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் மீது என்ன நடவடிக்கை

செப்டம்பர் 13, 2012

நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தும் அமெரிக்க திரைப்படம்: அமெரிக்க தூதரகம் முற்றுகை!

இறைவனின் இறுதித் தூதரான, முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களை மிகக் கேவலமாக விமர்சிக்கும் திரைப்படத்திற்கு எதிராக உலகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த அவதூறான திரைப்படம் லிபியாவில் முஸ்லிம்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்பே அங்குள்ள அமெரிக்க தூதர் உள்பட நான்குபேரின் படுகொலைக்கு வழிவகுத்தது. அமெரிக்காவின் அடாவடித்தனத்தை கண்டித்து தமிழகத்திலும் பல்வேறு  சார்பில் கண்டன  ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நபிகள் நாயகத்தைக் காமூகராகச் சித்தரித்து சினிமா எடுத்துள்ள அமெரிக்க கிறித்தவப் பாதிரியாரையும் அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசையும் கண்டித்து அமெரிக்கத் தூதரகம் முற்றுகை! என்றும் தமிழகம் எங்கும் பரவலாக கண்டன ஆர்ப்பாட்டம நடத்த வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் அறிவிக்கின்றது. பொது செயலார் தனது அறிக்கையில் குறிப்பிடும் போது சென்னையில் 15-9-2012 சனிக்கிழமை காலை 11 மணிக்கு அமெரிக்க தூரகம் முற்றுகையாகவும் சென்னை அல்லாத மற்ற பகுதிகளில் மாவட்ட தலைநகரங்களிலும் முக்கிய நகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 முஸ்லிம் சமூகத்தின் உயிர் மூச்சானமுஹம்மது நபியவர்களை இழிவுபடுத்தும் செயல்கள் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளில்உள்ளவர்கள் செய்துவருகிறார்கள். இவ்வாறு செய்பவர்களை அந்நாட்டு அரசாங்கங்கள்தண்டிப்பதாக தெரியவில்லை. இத்தகைய செயலை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்இந்தியாவின் சார்பாக

லால்பேட்டையில் பயங்கர தீ விபத்து!!

தோப்புத் தெருவில் பயங்கர தீ விபத்து கேஸ் சிலின்டர் வெடித்தது பல குடிசைகள் நாசம்….

மனித “மலம்” கலந்து தயாராகும் சிகரெட்டுகள்

முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் எலக்ட்ரானிக் பொருட்கள் உட்பட சகலத்தையும் பிரதி எடுத்ததுபோல போலி தயாரிப்புகளை உற்பத்தி செய்வது சீனாவுக்கு கைவந்த கலை ஆகும். இந்நிலையில் பிரிட்டன் மக்கள் விரும்பி புகைக்கும் சிகரெட்களில் மனித மலம், இறந்த பூச்சிகள், புழுதி மண் போன்றவை கலக்கப்பட்டிருக்கும் பகீர் தகவல் சோதனையில் தெரியவந்துள்ளது.

 இதுபோல தரக்குறைவான, ஆரோக்கியத்துக்கு கேடுவிளைவிக்கும் போலி சிகரெட்கள் சீனாவில் தயாராகி முறைகேடான வகையில் பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டதும் அம்பலமானது. பிரிட்டனில் போலி சிகரெட் புழக்கம் பற்றி அறிய பர்மிங்காம் நகரில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த எம்.எஸ். இன்டலிஜென்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஆய்வு செய்தது. இதில் 30.9 சதவீத சிகரெட்கள் போலி மற்றும் வெளிநாடுகளிலிருந்து முறைகேடாக எடுத்து வரப்படுகின்றன என்று தெரியவந்தது. கடந்த ஆண்டில் இது 14.1 சதவீதம் மட்டுமே இருந்தது. ஒரே ஆண்டில் இரட்டிப்பாக உயர்ந்தது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தீவிர சோதனை நடத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் முதல் மே வரை 13 ஆயிரம் போலி சிகரெட், வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை சீனாவில் தயாராகி முறைகேடான வகையில், பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டவை ஆகும். அச்சு அசலாக ஒரிஜினல் சிகரெட் பாக்கெட் போலவே மிக நேர்த்தியாக இந்த போலி பாக்கெட்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து பல ஆண்டுகள் புகைப்பவர்களால்கூட வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத வகையில் அவை இருந்தன.

 இதற்கிடையில், டெர்பிஷயர் உட்பட சில இடங்களில் கைப்பற்றப்பட்ட போலி, வெளிநாட்டு சிகரெட்களை எல்லை பாதுகாப்பு மற்றும் குடியேற்ற துறையான பார்டர் ஏஜென்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். உடலுக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய ஆஸ்பெஸ்டாஸ் ரசாயன பொருள், புழுதி மண், மனித மலம், இறந்த பூச்சிகள் போன்ற கழிவுகள் அந்த சிகரெட்களில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பொது இடத்தில் அள்ளிய குப்பையை புகையிலையுடன் கலந்து சிகரெட்களை உருவாக்கியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. சீனா உள்ளிட்ட கிழக்கு நாடுகளில் இருந்து போலி சிகரெட்கள் அதிகளவில் பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டதும் அம்பலமாகியுள்ளது. இது போன்ற போலி சிகரெட்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். உடல்நலத்தை கெடுக்கும். உயிருக்கு

வக்பு வாரியத்தின் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு!

வக்பு வாரியத்தின் தலைவராக தமிழ்மகன் உசேன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறையின் சார்பில், வக்பு வாரியத்தின் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் குறித்த அறிவிப்பு, சமீபத்தில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, தேர்தலில் ஓட்டளிப்பவர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. அடுத்ததாக, சமீபத்தில் தேர்தல் நடந்து உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். உறுப்பினர்களில் இருந்து, வாரியத்தின் தலைவரை தேர்வு செய்வதற்காக, கடந்த 10ம் தேதி வக்பு வாரியத்தின் கூட்டம் நடந்தது. வாரிய தலைமை செயல் அதிகாரி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், உறுப்பினரான தமிழ்மகன் உசேன், வாரியத்தின் தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற மாநில செயலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

செப்டம்பர் 12, 2012

உச்சநீதிமன்றத்தின் நெருக்கடி பணிந்தது கர்நாடகம் காவிரி நதிநீரை திறந்துவிட ஒப்புதல்!

தமிழகம் கோரியபடி காவிரி நதிநீரை திறந்துவிட கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று ஒப்புக் கொண்டிருக்கிறது.தமிழகத்தில் சம்பா சாகுபடியைத் தொடங்க கர்நாடக அரசு தினந்தோறும் 2 டிஎம்சி நீரைத் திறந்து விட வேண்டும். பிரதமர் தலைமையில் காவிரி ஆணையக் கூட்டம் நடைபெறும் செப்டம்பர் 19-ம் தேதிக்கு முன்பாக இது தொடர்பான இடைக்கால உத்தரவைக் கர்நாடகத்துக்குப் பிறப்பிக்க வேண்டும் என்று கடந்த வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது.இந்த மனு மீது கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது கர்நாடக அரசின் வழக்குரைஞர், ஒரு டிஎம்சி தண்ணீர் வழங்கினால்கூட கர்நாடகத்தில் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதியின்றி பாதிக்கப்படும். அதனால் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றார்.

இதைத் தொடர்ந்து தமிழகத்துக்கு மாதந்தோறும் கர்நாடகம் வழங்கிய நீரின் அளவு அடங்கிய பட்டியலை தமிழகம் தாக்கல் செய்தது. இதையடுத்து நீதிபதிகள் டி.கே. ஜெயின், மதன் பி. லோகுர் அடங்கிய அமர்வு, கர்நாடக எல்லையில் அமைந்துள்ள பிலிகுண்டலு நீர்த்தேக்கத்திலிருந்து தமிழகத்துக்கு இந்த ஆண்டு திறந்து விடப்பட்ட நீரின் அளவு தொடர்பான ஆவணங்களை கர்நாடகம் தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டது, இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது

இன்றைய விசாரணையின் போது கர்நாடக அரசு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு 2,500 கன அடி நீரைத் திறந்துவிட

லேப்டாப் "நாயகன்"!

"பெரியது, சிறியது ஆவதும், சிறியது பெரியது ஆவதும், விஞ்ஞான வளர்ச்சியின் அடையாளங்கள். கம்ப்யூட்டரும் இதற்கு தப்பவில்லை. 1940களில் கண்டுபிடிக்கப்பட்ட "கம்ப்யூட்டர்', வீட்டின் அறை முழுவதையும் அடைத்துக்கொண்டு இருந்தது. நாளடைவில், இது "சுருங்க'த் துவங்கியது. இதன் தொடர்ச்சியாக, 1979ம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த "பில் மாக்ரிட்ஜ்', கம்ப்யூட்டரின் தனித்தனி பாகங்களை ஒன்று சேர்த்தால் என்ன என சிந்தித்து, முதல் "லேப்டாப்' கம்ப்யூட்டரை வடிவமைத்தார்.

 மாற்றி யோசித்த பில்: 
இவர் வடிவமைத்த "கம்ப்யூட்டரில்' கீ போர்டும், மானிட்டரும் ஒன்றாக இணைக்கப்பட்டு, கையில் எடுத்துச் செல்லும் வகையில் இருந்தது. மானிட்டர் சிறிதாக இருந்ததால், அதை மடக்கி, கீ போர்டில் உள்ள இடைவெளியில் வைக்கும் வகையில் வடிவமைத்திருந்தார் பில். இதை கையடக்க கம்ப்யூட்டர் என்றே முதலில் அழைத்தனர். ஆரம்ப காலத்தில் இதை அமெரிக்க ராணுவ மையத்திலும், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவிலும் பயன்படுத்தினர். இதை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு நிறுவனங்கள், தொடர்ச்சியான ஆய்வுகளில் ஈடுபட்டன.

 1983ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மேனி பெர்னான்டஸ் என்பவர், தான் கண்டுபிடித்த கையடக்க கம்ப்யூட்டரை, "லேப்டாப்' என அறிமுகப்படுத்தினர். இன்று நோட்புக் வடிவத்தில் லேப்டாப் வந்துவிட்டது. லேப்டாப்பை முதலாக வடிவமைத்த பில், சமீப காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். செப்.8ம் தேதி அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.ஆனால், சதா "பிசி'யாக இருக்கும் கம்ப்யூட்டர் உலகம் என்னவோ, இவரை மறந்து விட்டது. இவர் இறந்ததே,

செப்டம்பர் 11, 2012

வரும் 15-ந்தேதிக்குள் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் உபயோகபடுத்த தடை !

காட்டுமன்னார் கோவில், லால்பேட்டை பகுதிகளில் உள்ள கடை களில் தடை செய்ய ப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். பிளாஸ்டிக் பொருட்கள் தடை கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் பேரூராட் சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்து கிறார்களா? என பேரூராட்சி செயல் அலுவலர் பால சுப்பிர மணியன் மற்றும் அலுவலர்கள் அனைத்து கடை களிலும் ஆய்வு செய்த னர்.

அப்போது கடை உரிமையாளர்கள் பிளாஸ்டிக் பொருட்களை மாவட்ட நிர்வாகம் தடை செய்த பின்னர் நாங்கள் பொருட்களை விற்பனை செய்யும் போது பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்துவது இல்லை. மேலும் பொருட்கள் வாங்க வருகின்ற பொதுமக்களிடம் துணி பைகள் எடுத்து வருவது இல்லை. பிளாஸ்டிக் பைகள் கேட்கிறார்கள். தடை செய்யப்பட்ட பொருள் என்று கூறினாலும் ஏற்க மறுப்ப தில்லை.தாங்கள் வாங்கும் பொருட்களை கேரி பேக்கில் கொடுங்கள் என்று கூறுகின்றனர்.இதனால் விற்பனை குறைந்து விடுகிறது.அதனால் பொதுமக்களிடம் பிளாஸ் டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படு த்த வேண்டும்.என செயல் அலுவலரிடம் கடை உரிமை யாளர்கள் கூறினர்.

அதையடுத்து டீ கடைகளில் ஆய்வு செய்த அவர்கள் பிளாஸ்டிக் கப்புகள் உபயோகப்படுத்தக் கூடாது.அறிவுரை கூறி னர். மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு அதேபோல் லால்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் திருஞானசம்பந்தம் மற்றும் அதிகாரிகள் லால்பேட்டை பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா? என ஆய்வு செய்தார். மேலும் வரும் 15-ந்தேதிக்குள் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் உபயோகபடுத்த தடை செய்யப் படுகிறது என மாவட்ட

வந்தேறிகளான தாக்கரேக்கள் வெளியேற வேண்டும் : லாலு !

பால் தாக்கரே, உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் பீகாரைச் சார்ந்தவர்கள். அவர்கள் மகாராஷ்டிராவின் வந்தேறிகள். அவர்கள் உடனே அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று ராஷ்டிரீய ஜனதா தள் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். பீகாரி வந்தேறிகள் என்று ராஜ் தாக்கரே கூறியது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த லாலு பிரசாத், தாக்கரே குடும்பம் பீகார் மாநிலத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். தற்போது அவர்கள் மகாராஷ்டிராவில் வசித்து வருகின்றனர். அவர்கள் மும்பையின் வந்தேறிகள் ஆவர்.

எனவே, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அவர்கள் மகாராஷ்டிராவைவிட்டு வெளியேற வேண்டும் என்று லாலு கூறினார். இந்தியா இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தமானதாகும். அவர்கள் மும்பை, டெல்லி, சென்னை அல்லது பெங்களூர் என இந்தியா முழுவதும் சென்று தங்குவதற்கோ அல்லது வேலை செய்வதற்கோ உரிமை பெற்றவர்கள் என்றும் லாலு கூறினார். மகாராஷ்டிர மாநிலத்தைக் கட்டியெழுப்புவதற்காக பீகாரிகள் தங்கள் கடுமையான உழைப்பை வழங்கியுள்ளனர். அம்மாநிலத்தின் நலனுக்கு அவர்கள் எப்பொழுதும் கேடு விளைவித்ததில்லை. அவர்கள் அங்கே தங்கியிருக்க முழு உரிமை

ஜேர்மனியில் சுன்னத் செய்வதற்கான தடையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

ஜெர்மனியில், சுன்னத் செய்வதற்கு, கோர்ட் விதித்துள்ள தடையை எதிர்த்து, முஸ்லிம் மற்றும் யூதர்கள் கூட்டாக போராட்டம் நடத்தினர். ஜெர்மனியின், கோலோன், நகர கோர்ட், சிறுவர்களுக்கு சுன்னத் செய்யும் நடைமுறைக்கு தடை விதித்துள்ளது. “பெரியவர்கள் சம்மதித்தால், அவர்களுக்கு சுன்னத் செய்யலாம்’ என, கோர்ட் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கோலோன் நகர கோர்ட்டின், இந்த உத்தரவால், மற்ற நகரங்களில் உள்ள டாக்டர்களும், சுன்னத் செய்வதற்குரிய சிகிச்சை மேற்கொள்ள மறுக்கின்றனர். சுன்னத் செய்வதற்குரிய தடையை நீக்கக்கோரி, யூதர்களும், முஸ்லிம்களும் கூட்டாக இணைந்து, பெர்லின் நகரில் நேற்று, போராட்டம் நடத்தினர். மத சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கும் படி, இவர்கள் கோஷம் எழுப்பினர். முஸ்லிம்களில், வழக்கத்திற்கு ஏற்றபடி, தகுந்த வயதில், சுன்னத் செய்வது வழக்கமாக உள்ளது.யூத சமுதாயத்தில், குழந்தை பிறந்த எட்டாவது நாளில், சுன்னத்

செப்டம்பர் 09, 2012

தபால் உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள்

தமிழக தபால் வட்டத்தில், தபால் உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தமிழக தபால் வட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழக தபால் வட்டத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளில் உதவியாளர் பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி உள்ள தேர்வர்கள் இதற்கான விண்ணப்பத்தை தலைமை தபால் நிலையத்தில், நேரடியாகவோ அல்லது," www.indiapost.gov.in, www.tamilnadupost.nic.in' ஆகிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாக, 50 ரூபாயும், தேர்வு கட்டணமாக, 200 ரூபாயும் செலுத்த வேண்டும்.

மேலும் எஸ்.சி., எஸ்.டி., மகளிர், ஊனமுற்றோர் பிரிவு தேர்வர்களுக்கு, தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே போல், பணம் செலுத்தியதற்கான ரசீதை, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள, ஏழு இலக்க எண்ணை, ரசீதின் பின்புறம் குறிப்பிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முக்கிய தேதிகள் விண்ணப்பம் வழங்கப்படும் நாள் : 11.08.2012 முதல் 25.09.2012 வரை விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள் : 01.10.2012 விண்ணபங்களை அனுப்ப வேண்டிய முகவரி : 'Direct Recruitment Cell, New Delhi HO, New Delhi 110001' குறிப்பு : விண்ணப்பங்களை Speed Post/ Register Post மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு http://tamilnadupost.nic.in/rec/notif2010.htm

செப்டம்பர் 08, 2012

சவூதிக்கே பெட்ரோலா என்ற கேள்வி கடலுக்கே உப்பா? என்பது போன்று அதீத முரணாகத் தற்போது தோன்றுகிறது. ஆனால், சவூதியில் ஆண்டொன்றுக்கு 8 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துவரும் மின் தேவை தொடர்ந்தால், 2030 ஆம் ஆண்டுவாக்கில் அந்நாடு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்படும் என்று சிட்டி குழுமத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

தற்போது, உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாகத் திகழும் சவூதி அரேபியா,மொத்த எண்ணெய் உற்பத்தியில் 25 சதவிகிதத்தை தானே பயன்படுத்தி வருகிறது. அந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 50 சதவிகிதம் எண்ணெய் மற்றும் அதிலிருந்து கிடைக்கும் பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்றன. சவூதி அரேபியாவில் மின்தேவை ஆண்டுக்கு 8 சதவிகிதம் அதிகரித்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால், 2030ம் ஆண்டில் அந்நாடு எண்ணெய் ஏற்றுமதியாளர் என்ற நிலையை இழந்து இறக்குமதியாளராக மாறக்கூடும் என்கிறது அந்த ஆய்வறிக்கை.

ஐ.நா உறுப்பு நாடு:ஃபலஸ்தீனுக்கு ஆதரவு – அரபு லீக்!

கெய்ரோ:இம்மாத இறுதியில் ஐ.நாவில் உறுப்பினர் இல்லாத நாடு என்ற பதவியை பெற முயற்சிக்கும் ஃபலஸ்தீனுக்கு ஆதரவளிப்போம் என்று அரபு லீக் பொதுச்செயலாளர் ஜெனரல் நபீல் அல் அரபி தெரிவித்துள்ளார். பூரண உறுப்பினர் பதவியை பெறுவதில் உள்ள சிக்கல்களை கவனத்தில் கொண்டு உறுப்பினர் அல்லாத பதவியை பெறுவதற்கான ஃபலஸ்தீனின் முயற்சிகளை ஆதரிக்க முடிவுச் செய்துள்ளதாக நபீல் அல் அரபி கூறினார்.

 ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் அனுமதி கிடைத்தால் தான் ஃபலஸ்தீனுக்கு ஐ.நா உறுப்பினர் நாடு பதவி வழங்கப்படும். ஐ.நா பொது அவையில் இம்மாதம் 27-ஆம் தேதி ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் விண்ணப்ப மனுவை அளிப்பார். தற்பொழுது ஃபலஸ்தீனுக்கு பார்வையாளர் பதவி மட்டுமே ஐ.நாவில் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பூரண உறுப்பினர் பதவிக்கான மஹ்மூத் அப்பாஸின் மனுவை அமெரிக்கா வீட்டோச் செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தது. இதனைத் தொடர்ந்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வாக்கெடுப்பிற்கு மனு அளிக்கப்படவில்லை.

உலக மக்களால் வெறுக்கப்படும் நகரங்கள் !

உலக மக்களால் வெறுக்கப்படும் நகரங்கள் பட்டியலில், தலைநகர் டில்லி, எட்டாவது இடம் பிடித்துள்ளது. நகரங்கள் குறித்த கருத்துக்கணிப்பை, "சி.என்.என்.ஜி.ஓ.,' என்ற, இணையதளம் நடத்தியது. கணிப்பின் முடிவுகளை, இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

உலக மக்களால் வெறுக்கப்படும் நகரங்கள் பட்டியலில், மெக்சிகோவின், டிஜுவானா நகரம், முதலிடம் பிடித்துள்ளது. இந்நகருக்கு வரும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, 10 ஆண்டுகளில், 90 சதவீதம் குறைந்து உள்ளது. இரண்டாமிடம், ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களுக்கும், மூன்றாமிடம், பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கும் கிடைத்துள்ளன. மாலியில் உள்ள, டிம்புக்டு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்கள், நான்காம், ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில், தலைநகர் டில்லிக்கு, எட்டாமிடம் கிடைத்துள்ளது. "வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கண்டால் போதும்; அவர்களை ஏமாற்றி பணம் பிடுங்குவதற்காகவே, ஏராளமான நபர்கள், டில்லியில் நடமாடுகின்றனர்' என்பதே, மக்கள் வெறுப்பிற்கு காரணம்.

பெரு நாட்டின், லிமா, இந்தோனேசிய தலைநகர், ஜகார்த்தா,

செப்டம்பர் 06, 2012

கண்ணியம் காத்த ஈரான் விளையாட்டு வீரர்!

லண்டன்: லண்டனில் பாராலிம்பிக் போட்டி பரிசளிப்பு விழாவில் மாற்றுத் திறன் வீரர் ஒருவர் இளவரசி கேத் மிடில்டனுடன் கைகுலுக்க மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் மாற்றுத் திறன் வீரர்களுக்கான பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் சாதனை படைத்த வீரர்களுக்கு பரிசளிக்கும் விழா கடந்த ஞாயிறன்று நடந்தது. பிரிட்டிஷ் அரச குடும்பம் சார்பில் ஜூனியர் இளவரசர் வில்லியமின் மனைவி கேத் மிடில்டன் கலந்து கொண்டார். வீரர்களுக்கு பரிசுகளையும் பதக்கங்களையும் வழங்கினார். வீரர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் வீரர்களுடன் கைகுலுக்கி பாராட்டுகளையும் தெரிவித்தார். தடகள போட்டியில் ஈரான் வீரர் மெர்டாட் கரம் சேத் (40) என்பவர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

அவரை பாராட்டி பதக்கத்தை அணிவித்த மிடில்டன், அவருக்கு கைகொடுத்தார். ஆனால் ஈரான் வீரர் கைகுலுக்க மறுத்து பதக்கத்தை பெற்றுக் கொண்டு சென்று விட்டார். விழா மேடையில் நடைபெற்ற இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இதுகுறித்து அரண்மனை வட்டாரங்கள் கூறுகையில், ‘இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த ஆண்கள் பொது இடங்களில் பெண்களுடன் கைகுலுக்குவதில்லை’ என்றனர்.
-தினகரன் 

செப்டம்பர் 05, 2012

ஓட்டுனர் உரிமம் பெற உடல் உறுப்பு தானம் செய்வதாக விருப்பம் தெரிவிக்க வேண்டும்-விரைவில் புதிய கட்டுப்பாடு

சென்னை- வாகனங்கள் பெருக்கத்துக்கு ஏற்ப விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு புள்ளி விவரப்படி இந்தியா முழுவதும் மணிக்கு 17 பேர் வீதம் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். தினமும் 390 பேர் உயிரிழப்பதாக ஆவணங்களில் பதிவாகி உள்ளன. விபத்தில் படுகாயம் அடைபவர்களின் உறுப்புகள் பாதிக்கப்படுபவர்கள் உரிய நேரத்தில் சம்பந்தப்பட்ட உறுப்புகள் தானமாகவோ அல்லது விலைக்கோ கிடைக்காமல் அதன் மூலம் மரணம் அடைபவர்களும் உண்டு. உடல் உறுப்பு தானம் குறித்து எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. உடல் உறுப்பு தானத்தை ஊக்கப்படுத்தும் வகையில், புதிய வழிமுறைகளை கையாள மத்திய சுகாதார அமைச்சகம் தீர்மானித்தது.

       ஓட்டுனர் உரிமம் கேட்டு விண்ணப்பம் செய்வோர்களிடம் விபத்து ஏற்பட்டால் உடல் உறுப்பு தானம் செய்வதாக விருப்பம் தெரிவிக்கும் வகையில், விண்ணப்பங்களில் கூடுதல் விவரங்கள் சேர்க்கப்பட உள்ளன. இதற்கு வசதியாக மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விதிகள் குறித்த புதிய மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வல்லுனர்களுடன் சுகாதார துணை அமைச்சக அதிகாரிகள் கடந்த மாதம் 30-ஆம் தேதி விரிவாக ஆலோசனை நடத்தினர். ஓட்டுனர் உரிமம் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். ஆனால், விண்ணப்பத்தில் அதற்கான பகுதியில் ஆம் அல்லது இல்லை என்று கட்டாயம் தங்களது விருப்பத்தை குறிப்பிட்டு ஆக வேண்டும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 இந்த மசோதா நகல் போக்குவரத்து அமைச்சகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த செயல் திட்டத்துக்கு போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்தால், மோட்டார் வாகன சட்டத்திலும் திருத்தம் மேற்கொள்ளப்படும். இதுபற்றி போக்குவரத்து துறை அமைச்சக

மோடியின் கரங்களில் விலங்கிடும் துணிச்சல் யாருக்கு?


மோடியின் வலது கை அமித் ஷா மீது குற்றப்பத்திரிகை !

அஹ்மதாபாத் : குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும் முன்னாள் அமைச்சருமான அமித் ஷா மீது துளசி பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கில் சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது மோடிக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது.இந்தியாவில் நடந்த மோசமான இனக்கலவரங்களில் ஒன்றான குஜராத் கலவரத்தில் சமீபத்தில் மோடியின் நம்பிக்கைகுரிய அமைச்சராக இருந்த மாயா கோத்னானிக்கும் பாபு பஜ்ரங்கிக்கும் 28 ஆண்டுகள் தண்டனை கொடுக்கப்பட்டது நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. குஜராத் கலவரத்தின் போது மாயா அமைச்சராக இல்லையென்றாலும் குஜராத் கலவரத்தில் அவரின் பங்களிப்பை பாராட்டியே கலவரத்திற்கு பிறகு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. அச்செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் நீதிமன்றம் மோடி மாயாவை காப்பாற்ற முயற்சி செய்ததாகவும் கூறியது. 



மோடியை அடுத்த பிரதமராக முன்னிறுத்த பாஜக முயலும் நேரத்தில் இது மோடிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இன்னும் நெருக்கடியை அதிகரிக்கும் விதமாக துளசி பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கில் குற்றச் சதியில் ஈடுபட்டதாகவும் ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும் மோடியின் வலது கையாக கருதப்படும் முன்னாள் அமைச்சர் அமித் ஷா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அமித் ஷாவுடன் முன்னாள் குஜராத் காவல்துறை தலைவர் பி.சி.பாண்டே, ஐபிஎஸ் அதிகாரிகள் மாத்தூர், டி.ஜி.வன்ஜரா, கீதா ஜொஹ்ரி மற்றும் துணை சூப்பிரடண்ட படேல் ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குஜராத் காவல்துறையால் போலி எண்கவுண்டரில் கொல்லப்பட்ட சொஹ்ராபுதீன் ஷேக் வழக்கில் காவல்துறைக்கு எதிராக சாட்சி சொன்னவர் பிரஜாபதி என்பது குறிப்பிடத்தக்கது.

மோடியின் கரங்களில் விலங்கிடும் துணிச்சல் யாருக்கு?




கருப்பையில் இருந்து பாதுகாப்பாக சிசுவை வெளியே எடுக்கவேண்டிய ஒரு கைனோகாலஜிஸ்ட்,  கர்ப்பிணியின் வயிற்றைக் கீறி சிசுவை திரிசூலத்தில் குத்தியெடுத்து ஆனந்த நடனம் ஆடும் இரத்த வெறிப்பிடித்த கும்பலுக்கு தலைமை வகிக்கிறார். அந்த கொலைக்கார பெண்மணிக்கு மாநில மகளிர் மற்றும் சிசு நலத்துறை அமைச்சர் பதவி பரிசாக வழங்கப்படுகிறது. மாநில முதல்வரும், அமைச்சர் பரிவாரங்களும், மத வெறிப்பிடித்த அதிகாரிகளும் இணைந்து கூட்டுப் படுகொலைகளுக்கு
தலைமையேற்கின்றனர். கூட்டாக நடக்கும் பாலியல் வன்புணர்வுகளை போலீசார் கண்டு ரசிக்கின்றனர். ஆதாரங்களை எல்லாம் அழிக்கின்றனர். ஆவணங்களை மறைக்கின்றனர். சாட்சிகளை கொலைச் செய்கின்றனர். பணத்தை வாரியிறைத்து தங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குகின்றனர். தங்களது கரங்களால் புரிந்த கர்ண கொடூரங்களை வாய் கூசாமல் பெருமையாக பகிரங்கமாக கூறுகின்றனர்.
சிலருக்கு மேலும் 500 முஸ்லிம்களை கொலைச் செய்வது பொழுதுபோக்கு. வேறு சிலருக்கோ முஸ்லிம் இளம் பெண்கள் வேண்டுமாம். இவர்கள் அனைவரும் நரேந்திர மோடி என்ற நரமாமிச உண்ணியின் சீடர்கள். குற்றங்களை புரிந்தது மட்டுமல்ல, கொடூரங்களின் ஆதாரங்களையெல்லாம் குழி தோண்டி புதைக்கவும் தங்களது கரங்களை பரிசுத்தமாக காட்டவும் இவர்கள் தயங்கவில்லை.
நான் குஜராத்தின் சர்வாதிகாரி மட்டுமல்ல, மத்திய அரசையும் ஆட்டிவைக்கும் மோசடி வித்தைக்காரன் என கூறி என்ன பலன்?சத்தியத்திற்கும், நீதிக்கும் சில அடிப்படைகள் உள்ளன. இறைவனின் நீதியை எவராலும் தடுக்க முடியாது. தர்மம் எப்பொழுதெல்லாம் தோல்வியை சந்திக்கும் சூழல் உருவாகிறதோ அப்பொழுதெல்லாம் மரண வியாபாரிகளுக்கு விலங்கிட சிலர் இவ்வுலகில் பிறக்கத்தான்
செய்வார்கள்.
பாசிசத்தின் காரிருள் இந்நாட்டின் ஆட்சி, அதிகார,  நீதி, ஊடக துறைகளையெல்லாம் சூறையாடி வரும் வேளையிலும் நீதியை நிலைநாட்டும் உறுதியுடன் சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களில் ஒருவர் தாம் குஜராத் கூடுதல் முதன்மை நீதிபதி ஜோல்ஸ்னா யக்னிக். மற்றொருவர், முன்னாள் குஜராத் மாநில டி.ஜி.பி ஸ்ரீகுமார்.
அமைச்சர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்களை பதிவுச் செய்து பாதுகாத்த நேர்மையான ஐ.பி.எஸ் அதிகாரி ராகுல்சர்மா கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார், 10 வருடங்கள் கழித்து நீதி நிலைநாட்டப்படும் என்று.
தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அம்பலப்படுத்த டெஹல்கா இதழ்

எகிப்தின் வரலாற்றில் புதிய மைல் கல்! ஸ்கார்ஃபை அணிந்து செய்தி வாசித்தார் ஃபாத்திமா

கெய்ரோ:இளம் நிறம் கொண்ட ஸ்கார்ஃபை அணிந்து ஃபாத்திமா நபீல் வாசித்த மதியச் செய்தி எகிப்தின் வரலாற்றில் புதிய மைல் கல்லாக அமைந்தது. எகிப்தை பீடையாக பீடித்திருந்த முந்தைய சர்வாதிகார ஆட்சிகளில் பெண்கள் தலையை மறைக்கும் ஸ்கார்ஃப் அணிவதற்கு எழுதப்படாத சட்டம் நடைமுறையில் இருந்து வந்தது. பெண்களுக்கு தலையை மறைக்காத உரிமை வழங்குகிறோம் என்ற போலி சுதந்திரத்தை காட்டி தங்களது மேற்கத்திய எஜமானர்களை திருப்திப்படுத்தும் நோக்கிலேயே எகிப்திய சர்வாதிகாரிகளின் போக்கு அமைந்திருந்தது.

இந்நிலையில் எகிப்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சியின் விளைவாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார் இஃவானுல் முஸ்லிமீனின் முஹம்மது முர்ஸி. பெண்கள் சுதந்திரமாக தாங்கள் விரும்புm ஆடையை அணியலாம் என அனுமதி வழங்கப்பட்டது. இதனால் உண்மையான சுதந்திரம் என்பது என்ன என்பதை புரிந்துகொண்ட ஃபாத்திமா நபீல் தனக்கு கண்ணியத்தை வழங்கும் ஆடையை தேர்வுச் செய்தார். தலையை மறைத்து தொலைக்காட்சியில் தோன்றுவது முபாரக் ஆட்சி காலத்தில் இயலாத ஒன்றாக மாறியது. ஹிஜாப் அணிய தடையில்லை என்றாலும் தொலைக்காட்சியில் இது ஒரு நடைமுறையாக இருந்து வந்தது. ஸ்கார்ஃப் அணிந்த செய்தி வாசிப்போரையும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களையும் தொலைக்காட்சியில் காட்டுவதை தடுப்பதில் தொலைக்காட்சி நிலைய அதிகாரிகள் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தனர்.

அவ்வாறு ஹிஜாப் அணிந்த பெண்களுக்கும் கேமராவுக்கு பின்னிலும், ரேடியோவிலும் மட்டுமே வேலை வழங்கப்பட்டது. ஹிஜாப் அணிவதற்கானஉரிமையை கோரி நீதிமன்றத்தை அணுகி தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பல பெண்களும் பெற்றபோதும் ஹுஸ்னி முபாரக்கின் ஏகாதிபத்திய அரசு அவற்றையெல்லாம் பொருட்படுத்தவில்லை. சேனல் ஒன் என்ற தேசிய தொலைக்காட்சி சானில் ஸ்கார்ஃப் அணிந்து தோன்றிய ஃபாத்திமா மதிய செய்திகளை வாசித்துவிட்டு, செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘இறுதியில் புரட்சி வந்தடைந்துவிட்டது’ என கூறினார். இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கூறுகையில், “எகிப்தில் 70 சதவீத பெண்களும் தலையை மறைப்பவர்கள்ஆவர். ஆகவே இந்த மாற்றத்தில் ஆச்சரியமான

செப்டம்பர் 03, 2012

புஷ், டோனி ப்ளேயர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தவேண்டும் -ஆர்ச் பிஷப்

லண்டன்:ஈராக்கின் மீது போரை திணித்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் w புஷ் மற்றும் பிரிட்டீஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் ஆகியோரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றி விசாரணை நடத்தவேண்டும் என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், பிரபல சமூக ஆர்வலருமான ஆர்ச் பிஷப் டெஸ்மண்ட் டுட்டூ கோரிக்கை விடுத்துள்ளார். பிரிட்டனில் இருந்து வெளியாகும் அப்ஸர்வர் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் புஷ் மற்றும் பிளேயர் மீது கடுமையாக விமர்சித்துள்ளார்.

 அவர் கட்டுரையில் கூறியிருப்பது: “ஈராக்கில் மனித பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக ஜார்ஜ் புஷ்சும் , டோனி பிளேரும் பொய் கூறி ஈராக் மீது போர் தொடுத்துவிட்டனர். உலகை தவறாக புரிய வைத்தனர். இதற்கு முன்னர் வரலாற்றில் நிகழ்ந்த மற்ற போர்களை விட ஈராக் போர்தான் உலகை மிகவும் மோசமாக ஸ்திரமற்ற நிலைக்கு தள்ளியது. சிரியாவில் ஏற்பட்டிருக்கும் உள்நாட்டு போர், மற்றும் ஈரானை மையமாகக் கொண்டு மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதட்டம் ஆகியவையும் கூட ஈராக் மீது அமெரிக்கா, பிரிட்டன் போர் தொடுத்தது தான் காரணம். இந்த குற்றங்களை செய்த ஜார்ஜ் புஷ், டோனிபிளேர் இருவரையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றி விசாரிக்க வேண்டும். இரு தலைவர்களும் தாங்கள் அடாவடித் தனங்களை செய்வதற்காக பொய்யான காரணங்களை தாங்களே உருவாக்கி சொன்னார்கள்.

 மக்கள் பிளவுபடவும் வழிசெய்து விட்டார்கள். சதாம் ஹுஸைனை தண்டிப்பதற்கான அதிகாரம் இவர்களிடம் இல்லை. ஈராக்கில் ஆயிரக்கணக்கான மக்களை கொலைச் செய்த குற்றத்திற்கான பொறுப்பை இந்த இரண்டு தலைவர்கள் மீதே சாட்டவேண்டும்” என்று டுட்டூ கூறியுள்ளார். கடந்த வாரம் ஜொகனாஸ் பர்கில் நடந்த ஒரு உச்சி மாநாட்டில் ப்ளேயருடன் மேடையில் கலந்துகொள்ள டுட்டூ மறுத்துவிட்டார். 1984-ஆம் ஆண்டு டுட்டூவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவில்

செப்டம்பர் 01, 2012

ஏவுகணை தாக்குதல் காபூல் நகரில் ஊர்வலம்

பாகிஸ்தான் எல்லையிலிருந்து அடிக்கடி சிறிய ரக ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து, ஏராளமான ஆப்கானியர்கள், காபூல் நகரில் ஊர்வலம் நடத்தினர். பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் அஷ்ரப் ஆகியோரது படங்களை அவமதிக்கும் விதத்தில் பதாகை களை சுமந்து சென்றனர்.

நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை: பாஜக எம்.எல்.ஏவுக்கு 28 ஆண்டு சிறை! வி.எச்.பி பயங்கரவாதிக்கு ஆயுட்கால சிறை !

அஹமதாபாத்: குஜராத்-நரோடா பாட்டியா இனக் கலவர வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. மாயா கோட்னானிக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனையும், வி.ஹெச்.பி பயங்கரவாதி பாபு பஜ்ரங்கிக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோத்ராவில் நடந்த ரயில் எரிப்பு சம்பவத்தின் பழியை முஸ்லிம்கள் மீது சுமத்தி குஜராத் மாநிலத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் இந்திய வரலாறு காணாதா மாபெரும் இனப்படுகொலையில் ஈடுபட்டனர். ஊர் ஊராக முஸ்லீம்களைக் குறி வைத்து கொலை வெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த கொடும் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். பலரை உயிருடன் தீயில் போட்டுக் கொடூரமாகக் கொன்றனர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.

கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் நடந்த மறுநாள் அதாவது 2002 பிப்ரவரி 29-ஆம்தேதி குஜராத் மாநிலத்தின் நரோடா பாடியா என்ற இடத்தில் நடந்த கூட்டுப் படுகொலையில் 97 முஸ்லிம்கள் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டனர். இந்த நிலையில் அவ்வழக்கின் மீது கடந்த ஆகஸ்ட் 29 ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், முன்னாள் விஎச்பி அமைப்பைச் சார்ந்த ஹிந்துத்துவா பயங்கரவாதி பாபு பஜ்ரங்கி, நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னானி உள்ளிட்ட 32 பேர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். அதேசமயம், 29 பேரை விடுவித்து அவர் உத்தரவிட்டார். மாயா கோட்னானி தற்போதும் பாஜக எம்.எல்.ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விசாரணை தொடங்கியது. மொத்தம் 70 பேர் மீது குற்றம சாட்டப்பட்டது. அதில் விஜய் ஷெட்டி உள்ளிட்ட 7 பேர் விசாரணைக் காலத்திலேயே இறந்து விட்டனர். மொத்தம் 327 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அதில் முக்கியமானவர் பத்திரிக்கையாளர் ஆசிஷ் கேதான் ஆவார்.

 முதலில் 46 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். பின்னர் மேலும் 24 பேரை எஸ்ஐடி சிறப்புப் படையினர் கைது செய்தனர். இவர்களில் ஜாமீனில் வெளிவந்த மோகன் நேபாளி மற்றும் தேஜாஸ் பதக் ஆகிய இருவரும் தப்பி விட்டனர். இன்னும் இவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 32 பேருக்கு என்ன தண்டனை என்பதை நீதிமன்றம்

பல்கலைகழக விரிவுரையாளருக்கான செட் தேர்வு தேதி அறிவிப்பு


பல்கலைகழக விரிவுரையாளருக்கான செட் தேர்வு தேதி அறிவிப்பு

பாரதியார் பல்கலை கழகம் சார்பில் மாநில அரசின் கீழ் இயங்கும் அரசு கல்லூரிகள் மற்றும்பல்கலைகழகங்களில் விரிவுரையாளர்உதவி பேராசிரியர்களை நியமிப்பதற்கு நடத்தப்படும் செட்தேர்வு வரும் அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளதுபல்கலை கழக மானியகுழுவின் அனுமதியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 முதன்மை தேர்வு மையங்களின் மூலம், 53தேர்வு மையங்களில் இத்தேர்வு நடத்தப்பட உள்ளதுபல்கலைகழக மானியக் குழு அனுமதித்துள்ளதமிழ்ஆங்கிலம்சட்டம் உள்ளிட்ட 27 பாடப்பிரிவுகளில் இத்தேர்வு நடத்தப்பட உள்ளது.
தேர்வு எழுத தகுதிகள்

இத்தேர்வுக்கு பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு இறுதியாண்டு படிக்கும்மாணவர்கள் மட்டுமே பங்குபெற முடியும்முதுகலை பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களும், (SC,STமற்றும் மாற்றுத்திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண்களும்பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்
பொதுப்பிரிவினருக்கு 1000 ரூபாயும்பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு(பிற்படுத்தப்பட் மு்லிம்உட்பட) 750 ரூபாயும், SC,ST மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு 250 ரூபாயாகவும் தேர்வுக் கட்டணம்நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

இத்தேர்வுக்கு ஆன்லைனில் மட்டுமே முடியும்விண்ணபிக்க வேண்டிய இணையதளமுகவரி http://www.b-u.ac.in/set2012/index.php.

இணையதளம் மூலம் விண்ணப்பதை பூர்த்தி செய்துஅதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் படி,தேவையான விண்ணப்ப நகல்தேர்வு வருகை பற்றிய தாள்தேர்வு அனுமதிச் சீட்டுதேர்வுக் கட்டணம்செலுத்திய வங்கி சலான் மற்றும் சான்றிதழ்களின் நகல்கள் போன்றவற்றை இணைத்துசெயலர்,விரிவுரையாளர் மாநில தகுதிக்கான தேர்வு -2012, பாரதியார் பல்கலைகழகம்கோவை - 641046 என்றமுகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தின் மீதுவிரிவுரையாளர் மாநில தகுதிக்கான தேர்வு- 2012 என்று கண்டிப்பாக குறிப்பிடவேண்டும்பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், செப்.14ம் தேதி மாலைக்குள்பல்கலை வந்து சேரவேண்டும்இணையதளம் வழி விண்ணப்பம் சமர்ப்பிக்க, செப்.7ம் தேதி கடைசி நாள்விண்ணபங்களைகேட்கப்பட்டுள்ள இணைப்புகளோடு மேற்கண்ட முகவரிக்கு செப்., 14ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மூன்று தாள்கள் கொண்ட இத்தேர்வில்முதல் தாள் அக்டோபர் 7ம் தேதி காலை, 9.30 முதல், 10:45 மணிவரையும் இரண்டாம் தாள், 10:45 முதல், 12 மணி வரையும்மூன்றாம் தாள் மதியம், 1.30 முதல், 4 மணிவரையும் நடைபெறும்
 
தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண்   
பிரிவு
முதல் மற்றும் இரண்டாம்தாள்
மூன்றாம்தாள் 
பொது பிரிவினர்
40
50
பிற்படுத்தப்பட்டோர்
35
45
தாழ்த்தப்பட்டோர்பழங்குடியினர்,மாற்றுத் திறனாளிகள்
35
40

இத்தேர்வு பற்றிய கூடுதல் தகவல்களுக்கு