Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 11, 2013

மத்திய அரசின் 3,500 புள்ளி விவர தொகுப்புகள் ஒரே இணையதளத்தில்!

மத்திய அரசின் 3,500 புள்ளிவிவர தொகுப்புகளை இனி பொதுமக்கள் ஒரே இணைய தளத்தில் பெறலாம். சுகாதாரத்துறை தகவல்கள் முதல் பல்வேறு திட்டங் களில் பயனடைந்த பயனாளிகளின் எண்ணிக்கை வரையில் இதில் தெரிந்து கொள்ள முடியும். மத்திய அரசு சார்பில் www.data.gov.in என்ற புதிய இணைய தளம்  தொடங்கப்பட்டுள்ளது  மத்திய தொலைத் தொடர் புத்துறை அமைச்சர் கபில்சிபல் இந்த இணைய தளத்தை தொடங்கி வைத்து பேசிய தாவது:

மத்தியில் அய்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் புரட்சி ஏற்பட்டுள்ளது. நாட்டு மக்கள் அனை வருடனும் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகிறோம். ஆனால், புள்ளிவிவரங்கள் இல்லாமல் எந்த ஒரு சரியான முடிவையும் எடுக்க முடியாது. அதன் அடிப்படையில்தான் மத்திய அரசின் 3,500 புள்ளிவிவர தொகுப்புகள் கொண்ட புதிய இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. அரசில் உள்ளவர்கள் தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விஷயங்களை தவிர மற்றவற்றை பொதுமக்களுக்கு பகிர முன்வர வேண்டும்.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இணையதளத்தில் சுகாதாரத் தகவல்கள், பல்வேறு திட்டங்களின் பயனடைந்த பயனாளிகளின் எண் ணிக்கை, தொழிற்சாலை உற்பத்தி என்று வரையில் பல்வேறு புள்ளி விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு கபில்சிபல் பேசினார். பிரதமரின் ஆலோசகர் சாம் பிட் ரோடா பேசியதாவது: தற்போது 3,500 புள்ளிவிவர தொகுப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் 6 மாதத்தில் இது
10,000 புள்ளிவிவர தொகுப்பாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட் டுள்ளது. இந்த புள்ளிவிவரங்களை மேலும் திறம்பட பயன்படுத்தும் வகையில் 100 அப்ளிகேஷன்களை உருவாக்க உள்ளோம். அடுத்த மாதத்தில் இருந்து செயல்பாட்டுக்கு வரும். இதனால் பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் தங்கள் தேவையான புள்ளிவிவரங்களை சரியாக பெற முடியும். இவ்வாறு சாம் பிட்ரோடா கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...