Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 27, 2013

புத்தூர் காவல் நிலையத்தில் வாகன ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு முகாம்!

காட்டுமன்னார்கோவில் பகுதியில் சாலை விபத்துக்கள் அதிக எண்ணிக்கையில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் அதிகம் பேர் அதிவேகத்தில் சென்று விபத்துக்குள்ளாகின்றனர். தற்போது ஆட்டோக்களை விட மினிவேன் பயன்பாடு அதிக அளவு உள்ளது. இந்த வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை சரியாக பயன் படுத்துவது இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதை கருத்தில் கொண்டு புத்தூர் காவல் நிலையத்தில் வாகன ஓட்டிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு தலைமையில் நடந்தது.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பால கிருஷ்ணன், மூர்த்தி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வாகனங்களை அதிவேகமாக ஓட்டக் கூடாது. குடித்து விட்டு வாகனங்களை இயக்கக் கூடாது. பள்ளிகள் மற்றும் மருத்துவ மனைகளுக்கு அருகே மிக எச்சரிக்கையாக ஓட்ட வேண்டும். அளவுக்கு அதிகமாக பயணிகளை
ஏற்றிச் செல்ல கூடாது. போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. ஆட்டோ, மினிவேன் ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
-தினகரன் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...