Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 20, 2013

மத்திய அரசு பள்ளியில் 4043 ஆசிரியர் பணியிடங்கள் : பி.எட்., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசுப் பள்ளிகளான கேந்திர வித்யாலயாவில் காலியாக உள்ள 4043 முதுநிலை பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் நூலகர், இசை ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங் களுக்கு முதுநிலை பட்டத்துடன் பி.எட் அல்லது பட்டப்படிப்புடன் பி.எட்., படித்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள்: மொத்தம் 4043 இடங்கள். இவற்றில்
793 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும்,
1059 பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களும்,
2191 நூலகர், இசை ஆசிரியர், தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடம் உள்ளன.

1.முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்:

793. பாட வாரியாக காலியிடங்கள் விவரம்: ஆங்கிலம்85, இந்தி69, இயற்பியல்85, வேதியி யல்82, பொருளியல்56, வணிக வியல்94, கணிதம்91, உயிரியல்75, வரலாறு34, புவியியல்39, கம்ப் யூட்டர் சயின்ஸ்80. பயோ டெக்னா லஜி3. (இதில் 404 இடங்கள் பொதுப் பிரிவினருக்கும், எஸ்சி பிரிவுக்கு 118 இடங்களும், எஸ்டியினருக்கு 58 இடங்களும், ஓபிசியினருக்கு 213 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.). தகுதி: தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் மண்டல கல்லூரியில் சம்பந்தப்பட்ட பாடத்தில் இரண்டாண்டு எம்.எஸ்சி படிப்பு அல்லது சம்பந்தப்பட்ட பாடத்தில் 50 சதவீத தேர்ச்சியுடன் எம்.எஸ்சி பட்டம் மற்றும் பி.எட்., முடித்திருப்பதோடு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கற்றுத்தரும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

அ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முது நிலை ஆசிரியர்: தகுதி குறைந்தபட் சம் 50 சதவீத தேர்ச்சியுடன் கம்ப்யூட் டர் சயின்ஸ் அல்லது தகவல் தொழில்நுட்பவியல் பாடங்களில் பி.இ., அல்லது பி.டெக்., அல்லது டிப்ளமோ அல்லது ஏதேனும் ஒரு பி.இ., அல்லது பி.டெக் தகுதியுடன்
கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் முதுநிலை டிப்ளமோ அல்லது கம்ப் யூட்டர் சயின்ஸ் பாடத்தில் எம்எஸ்சி அல்லது எம்சிஏ அல்லது ஏதேனும் ஒரு முதுநிலை பட்டத்துடன் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது பிசிஏ அல்லது ஏதேனும் ஒரு முதுநிலை பட்டத்துடன் கம்ப்யூட்டரில் முதுநிலை டிப்ளமோ அல்லது ஏதேனும் ஒரு முதுநிலை பட்டத்துடன் கம்ப்யூட்டர் பாடத்தில் பி லெவல் அல்லது ஏதே னும் ஒரு டிகிரியுடன் கம்ப்யூட்டரில் சி லெவல்.

ஆ. பயோ டெக்னாலஜி: தகுதி: 50 சதவீத தேர்ச்சியுடன் பயோ டெக் னாலஜி/ஜெனிடிக்ஸ்/ நுண்ணுயிரி யல்/ வாழ்வியல் அறிவியல்/ உயிர் அறிவியல்/ உயிர் வேதியியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை பட்டம். வயது: மேற்கண்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 28.8.2013ன்படி 40க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.9,30034,800 தர ஊதியம் ரூ.4,800. 2.

பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்: 1059. பாட வாரியாக காலியிடங்கள் விவரம்: ஆங்கிலம்86, இந்தி130, எஸ்.எஸ்டி168, அறிவியல்105, சமஸ் கிருதம்38, கணிதம்112. உடற்கல்வி யியல்181, கலை115, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் 124. (இவற்றில் பொதுப்பிரிவினருக்கு 539 இடங்களும், எஸ்சியினருக்கு 158 இடங்களும், எஸ்டியினருக்கு 78 இடங்களும், ஓபிசியினருக்கு 284 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.) தகுதி: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் கீழ் இயங்கும் மண்டல கல்லூரியில் 50 சதவீத தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பாடத்தில் 4 ஆண்டு பட்டப்படிப்பு அல்லது 50 சதவீத தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பாடத்தில் பட்டப் படிப்பு. மற்றும் மத்திய கல்வி வாரியத்தால் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கற்பிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அறிவு விரும்பத்தக்கது.
 உடற்கல்வி ஆசிரியர்: தகுதி உடற்கல்வியியல் பாடத்தில் பட்டப்படிப்பு. ஆ. கலை ஆசிரியர்: தகுதி ஓவியம் மற்றும் வர்ணம் தீட்டுதல்/சிற்பக்கலை/ கிராபிக் ஆர்ட் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 5 ஆண்டு டிப்ளமோ அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அறிவு விரும்பத்தக்கது.

எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட் ரானிக்ஸ் ஆசிரியர்: தகுதி பிளஸ் 2க்குப் பின் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் 3 ஆண்டு டிப்ளமோ அல்லது எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பாடத்தில் பி.இ., அல்லது எலக்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பாடத்தில் பட்டப் படிப்பு. ஓராண்டு முன்அனுபவம் மற்றும் இந்தி, ஆங்கிலத்தில் கற்பிக்கும் தகுதியை பெற்றிருக்க வேண்டும். வயது: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 28.8.2013 அன்று 35க்குள் இருக்க வேண்டும்.

3. நூலகர்: மொத்த இடங்கள்: 112 (பொது57, எஸ்சி17, எஸ்டி8, ஓபிசி30). சம்பளம்: ரூ.9,30034,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600. வயது: 28.8.2013 அன்று 35க்குள் இருக்க வேண்டும். தகுதி: நூலக அறிவியலில் பட்டம் அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் நூலக அறிவியலில் ஓராண்டு டிப்ளமோ மற்றும் இந்தி, ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அறிவு விரும்பத்தக்கது.

4. ஆசிரியர்: மொத்த இடங்கள்: 1979 (பொது998, எஸ்சி297, எஸ்டி149, ஓபிசி535). சம்பளம்: ரூ.9,30034,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. வயது: 28.8.2013 அன்று 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: 50 சதவீத மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் மத்திய கல்வி வாரியத்தால் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தி, ஆங்கிலத்தில் கற்பிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அறிவு விரும்பத்தக்கது.

5. இசை ஆசிரியர்: மொத்த இடங்கள்: 100 (பொது50, எஸ்சி15, எஸ்டி8, ஓபிசி27). சம்பளம்: ரூ.9,30034,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. வயது: 28.8.2013 அன்று 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் இசையில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இந்தி, ஆங்கிலத்தில் கற்பிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அறிவு விரும்பத்தக்கது. எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படு வர். தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் எழுத்துத்தேர்வு நடைபெறும்.

தேர்வு கட்டணம்: ரூ.750/ இதை இந்தியன் வங்கி கணக்கு எண்: 935020934ல் செலான் மூலமாகவோ நெட் பேங்கிங் மூலமாகவோ செலுத்தலாம். விண்ணப்பதாரர்கள்: www.kvsangathan.nic.in என்ற இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். சாதாரண தபாலில் பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:

 Post Box.No: 3076,
 Lodi Road,
NEWDELHI 110 003.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.8.2013. பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 12.9.2013.

நன்றி:தினகரன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...