Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 10, 2013

வீராணம் ஏரிக்கு 2500 கன அடி தண்ணீர் வருகிறது: புதன்கிழமை நிரம்பும்

கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வரப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 4 மாதமாக தண்ணீர் இல்லாததால் வீராணம் ஏரி வறண்டு கிடந்தது. இந்த நிலையில் மேட்டூர் அணை நிரம்பியதால் காவிரியில் அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது கல்லணை, அணைக் கரை வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு நேற்று முன்தினம் முதல் வரத் தொடங்கியது. வினாடிக்கு 2500 கன அடி தண்ணீர் வருவதால் வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

ஏரியின் மொத்த உயரம் 41 அடி. தற்போது 18 அடிக்கு தண்ணீர் வந்துள்ளது. தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் வருகிற புதன்கிழமைக்குள் வீராணம் ஏரி நிரம்பிவிடும். எனவே அடுத்த வாரம் முதல் வீராணத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் சப்ளை துவங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் மற்ற ஏரிகளான பூண்டியில் 188 மில்லியன் கன அடியும், புழல் ஏரியில் 360 மில்லியன் கன அடியும், செம்பரம்பாக்கத்தில் 466 மில்லியன் கன அடி என குறைந்த அளவு தண்ணீர் இருக்கும் சூழ்நிலையில் வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருவது சென்னை குடிநீர்
தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் என்று அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...