Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 29, 2013

இட்லி சாம்பார் தான் மிகச்சிறந்த காலை உணவு!

மும்பை : தமிழகவாசிகளை வட இந்தியர்கள் கிண்டல் செய்ய உபயோகப்படுத்தும் சொல்லான இட்லி சாம்பார் தான் உண்மையிலேயே மிகச் சிறந்த காலை உணவு என ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள மக்களின் காலை உணவு பழக்கம் குறித்து மும்பையில் உள்ள நிர்மலா நிகேதன் அறிவியல் கல்லூரி ஆய்வு நடத்தியது. இவ்வாய்வில் தமிழகத்தில் இட்லி , சாம்பார் தான் சத்தான உணவு என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவ்வாய்வில் 8 முதல் 40 வயது வரை உள்ள 3600 நபர்களின் உணவு பழக்கவழக்கங்கள் ஆரயாப்பட்டது. ஆராய்ச்சியின் முடிவில் நிறைய பேர் காலை உணவை தவிர்ப்பதும் சத்தற்ற உணவை சாப்பிடுவதும் தெரிய வந்துள்ளது. மும்பை, டெல்லி, கொல்கத்தாவில் முறையே 79%, 76%, 75% மக்கள் சத்தற்ற உணவை சாப்பிடுகின்றனர் என்றும் சென்னையில் 60% மக்கள் சத்தற்ற உணவை சாப்பிடுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மும்பையில் காலை உணவாக வெறும் கார்போஹைடிரேடுகள் நிறைந்த ரொட்டி மட்டுமே சாப்பிடுகின்றனர் என்றும் கொல்கத்தாவில் காலை உணவிலும் கார்போஹைடிரேடுகள் அதிகம் நிறைந்த மைதாவே முக்கிய உணவு பொருளாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவ்வுணவில் நார்சத்து அறவே இல்லை என்றும் புரோட்டின் குறைந்த அளவே உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தில்லி மக்கள் பயன்படுத்தும் காலை உணவில் எண்ணைய் கூடுதலாக
சேர்க்கப்படுவதாகவும் அவ்வாய்வு தெரிவிக்கிறது.

ஆனால் சென்னை மக்கள் பயன்படுத்தும் காலை உணவான இட்லி சாம்பார் சத்துக்கள் அடங்கிய உணவு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இட்லியில் உள்ள அரிசி மற்றும் உளுத்தம் பருப்பில் முழுமையான சத்துக்கள் இருப்பதாகவும் சாம்பாரில் காய்கறிகள் மற்றும் பருப்பு சரியான அளவில் உள்ளதால் இட்லி சாம்பார் தான் பிற காலை உணவுகளை விட சிறந்த ஒன்றாக உள்ளதாக அவ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 கருத்துகள்:

சனாதனன் சொன்னது…

உழுத்தம்பருப்பில் உள்ள சத்துகளை நம் முன்னோர்கள் எந்தளவு அறிந்துவைத்திருந்தார்கள் என்பதற்கு நல்ல சான்று.. எப்போதும் தமிழர்களாகவே இருப்போம்.. அருமையான பகிர்வு

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...