இந்தியாவின் பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம், வாடிக்கையாளர்களின் குறைகளை விரைவில் தீர்க்கும் பொருட்டு கால்சென்டர்களை அமைக்கிறது. ராஜஸ்தானில், முதல் கால்சென்டரை திறந்து வைத்தபின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த
மத்திய தொலைதொடர்பு இணையமைச்சர் சச்சின் பைலட் கூறியதாவது : இந்த கால்சென்டர், தொலைபேசி மற்றும் மொபைல்போன் சேவையில் ஏற்படும் குறைகளை களைவதோடு மட்டுமல்லாமல், பிஎஸ்என்எல் வழங்கும் அனைத்து சேவைகளுக்கும் பொருந்தும். இந்த கால்சென்டர் மூலம், வாடிக்கையாளர்களின் குறைகள் விரைவில் தீர்க்கப்படும், . நாட்டின் வடக்குப்பகுதியில் வசிக்கும் தங்களது வாடிக்கையாளர்களுக்காக, குர்கானில் கால்சென்டர் திறக்கப்பட உள்ளது. ராஜஸ்தான் சர்க்கிளிலிருந்து தினமும் 60 ஆயிரம் அழைப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கால்சென்டர்கள், நாட்டின் பிறபகுதிகளில் விரைவில் அமைக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
thanks:DM
ஜனவரி 18, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...