Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 12, 2011

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

கடலூர் மாவட்ட 2011-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்களர் பட்டியலை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை வெளியிட்டார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:2011-ம் ஆண்டுக்கான சுருக்க முறை திருத்தப் புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல், 9 சட்டப்பேவைத் தொகுதிகளுக்கும் 10-1-2011-ல் வெளியிடப்பட்டது.9 தொகுதிகளுக்கும் சேர்த்து ஆண் 8,36,633, பெண் 8,08,501, மொத்தம் 16,45,134
கடலூர் மாவட்டத்தில் 1-1-2011-ஐ தகுதி நாளாகக் கொண்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் தொடர்பாக படிவங்கள் 25-11-2010 முதல் 13-11-2010 வரை வழங்கப்பட்டது. அதில் 56,534 மனுக்கள் பெறப்பட்டன.

அவற்றைக் கள ஆய்வு செய்ததில், 49,976 மனுக்கள் தகுதி உள்ளவைகளாக கண்டறியப்பட்டன.அதன்படி கடலூர் மாவட்டத்தில் 9தொகுதிகளிலும் தற்போதுள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை வருமாறு:

திட்டக்குடி (தனி) ஆண் 87,542, பெண் 86,065, மொத்தம் 1,73,607. விருத்தாசலம் ஆண் 98,630, பெண் 94,490, மொத்தம் 1,93,120.

நெய்வேலி ஆண் 83,277, பெண் 78,530, மொத்தம் 1,61,807. பண்ருட்டி ஆண் 95,037, பெண் 94,331, மொத்தம் 1,89,368.

கடலூர் ஆண் 88,650, பெண் 88,716, மொத்தம் 1,78,350.
குறிஞ்சிப்பாடி ஆண் 91,543, பெண் 86,807, மொத்தம் 1,78,350.

புவனகிரி ஆண் 1,04,753, பெண் 1,00,511, மொத்தம் 2,05,264.

சிதம்பரம் ஆண் 94,192,பெண்92,427, மொத்தம் 1,86,619.
காட்டுமன்னார்கோவில் (தனி) ஆண் 93,009, பெண் 86,624, மொத்தம் 1,79,633.

9 தொகுதிகளுக்கும் சேர்த்து ஆண் 8,36,633, பெண் 8,08,501, மொத்தம் 16,45,134.

இந்த வாக்காளர் பட்டியலின் நகல்கள் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி ஆணையர் அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்கள்,அனைத்து வாக்குச்சாவடி நிலையங்கள் நிலை அலுவலர்களிடம் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று உள்ளதா? என்பதை மேற்காணும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
source: dinamani

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...