Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 24, 2011

அமெரிக்காவிடம் லாபி செய்ய 1.5 மில்லியன் டாலரை வாரியிறைத்த இந்தியா

டெல்லி: அமெரிக்க அதிகாரவர்க்கத்தை தங்களுக்கு சாதகமாக திருப்புவதற்காக இந்திய அரசும், பல்வேறு இந்திய நிறுவனங்களும் சேர்ந்து 1.5 மில்லியன் டாலர் பணத்தை வாரியிறைத்துள்ளன.

இருப்பினும் கடந்த 2009ம் ஆண்டை விட 2010ம் ஆண்டு இந்திய அரசு செலவு செய்த தொகை குறைந்துள்ளது. 2009ம் ஆண்டு இந்திய அரசு செலவிட்ட தொகை 2.2 மில்லியன் டாலராகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் இந்திய தொழில்துறையைப் பாதிக்கும் பல விஷயங்கள் அமெரிக்கா வின் கைப்பிடியில் உள்ளதால், தங்களுக்கு பாதகமாக நடந்து கொள்ளக் கூடாது என்று அமெரிக்காவை கெஞ்சுவதற்காக இந்த செலவுகளை செய்துள்ளன இந்திய அரசும், இந்திய நிறுவனங்களும்.
அமெரிக்காவை தாஜா செய்ய இந்த அளவுக்கு இந்தியா பணத்தை வாரியிறைப்பது சமீப காலமாக கடும் கண்டனத்துக்குள்ளாகி வருகிறது. குறிப்பாக நீரா ராடியா டேப் விவகாரம் வெளியானபோதுதான் இது கடும் கண்டனத்துக்குள்ளாக ஆரம்பித்தது.

இதையடுத்து அமெரிக்கா உள்ளிட்டநாடுகளை தாஜா செய்வதற்காக செலவிடும் தொகை தொடர்பாகவும், தாஜா செய்யும் முறைகளை முறைப்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...