Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 17, 2011

சூடான்:விருப்ப வாக்கெடுப்பில் பிரிவினைக்கு ஆதரவு

தெற்கு-வடக்கு என சூடானை பிரிப்பது தொடர்பாக நடத்தப்பட்ட மக்கள் விருப்ப வாக்கெடுப்பு பூர்த்தியானது. பெரும்பாலானோர் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்ததாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனவரி 9-ஆம் தேதி துவங்கிய வாக்கெடுப்பு கடந்த சனிக்கிழமை மாலையோடு முடிவுற்றது.

தெற்கு சூடானின் 10 மையங்களில் நடத்தப்பட்ட மாதிரி வாக்கெடுப்பில் 96 சதவீதம் பேர் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்ததாக அசோசியேட் பிரஸ் கூறுகிறது. மூன்று சதவீதம்பேர் ஐக்கியத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். மீதமுள்ளவை செல்லாதவை.
32 லட்சம் வாக்காளர்களில் மிகச்சிறிய சதவீதம் மக்களிடம் நடத்திய மாதிரி வாக்கெடுப்பில் கிடைத்த முடிவாகும் இது. ஆனால், விருப்பவாக்கெடுப்பு பிரிவினைக்கு ஆதரவாகத்தான் அமையும் என்பது சுதந்திர பார்வையாளர்களின் கருத்தாகும்.

60 சதவீதம் பேர் ஆதரவாக வாக்களித்தால் தெற்கு சூடான் சுதந்திர நாடாக மாறும். பிப்ரவரி துவக்கத்தில்தான் விருப்பவாக்கெடுப்பின் முடிவுகள் பூரணமாக வெளிவரும். நடவடிக்கைகள் நிச்சயிக்கப்பட்ட காலக்கட்டத்தில் முடிவுக்கு வந்தால் வருகிற ஜூலை மாதம் தெற்கு சூடான் தனி நாடாக மாறும்.

வடக்கு-தெற்கு சூடானிகளுக்கிடையே கடந்த இருபது ஆண்டுகளாக நடந்துவந்த உள்நாட்டுப் போரின் முடிவில் கடந்த 2005 ஆம் ஆண்டு உருவான சமாதான உடன்படிக்கையின் ஒருபகுதியாகத்தான் விருப்பவாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வடக்கு சூடானில் முஸ்லிம்களும், தெற்கு சூடானில் கிறிஸ்தவர்கள் மற்றும் உள்ளூர் மதப்பிரிவினரும் உள்ளனர்.
செய்தி:தேஜஸ்&பாலைவனத் தூது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...