சமீபத்தைய பொருளாதார நெருக்கடியால் அமெரிக்காவின் வேலை இழந்தோர் எண்ணிக்கை மிக அதிகமாகி இரட்டை இலக்கத்தை நெருங்குகிறது. அரசின் எந்த நடவடிக்கையும் வேலை வாய்ப்பை பெருக்க முடியவில்லை. வேலை வாய்ப்பை பெருக்க அமெரிக்கா முன் இரண்டு வழிமுறைகள் இருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் கணிக்கின்றனர். ஒன்று கீனிசியன் (Keynesian)பொருளாதார முறைப்படி அரசின் செலவீனங்களை அதிகரிக்க வேண்டும். அதாவது அரசு உள் கட்டமைப்பு வளர்ச்சிக்கு என்ற பெயரில் ரோடுகள் போடுவது, பாலம் அமைப்பது, அரசு அலுவலங்களில் மரபு சாரா சக்தி முறைப்படி அனைத்து மின் பொருட்களையும் மாற்றி அமைப்பது போன்ற செயல்களை செய்வதன் மூலம் வேலை வாய்ப்பை பெருக்குவது. ஆனால் இது அமெரிக்காவின் முதலாளித்துவ சித்தாந்தத்திற்கு எதிரானது.
மேலும் அரசு வேலை செய்ய ஒதுக்கும் நிதி, அதற்கான வேலையை சென்றடையும் போது பாதி கரைந்து போயிருக்கும் என்று கருதபடுகிறது.ஆனாலும் ஒபாமா பெரிய தொகையை அரசு செலவினத்துக்கு ஒதுக்கியும் வேலை வாய்ப்பை உயர்த்த முடியவில்லை.
அமெரிக்க அரசுக்கு அடுத்து இருக்கும் வழிமுறை தனியார் துறைகளில் வேலை வாய்ப்பை அதிகபடுத்த முயற்சி செய்வது. முதலாளித்துவ நாடான அமெரிக்காவிற்கு இது சிறந்த வழிமுறை.தனியார் துறையில் வேலை வாய்ப்பை பெருக்க தனியார் நிறுவனங்களுக்கு பெருமளவு கடன் வசதி போய் சேர வேண்டும். தற்போதைய பொருளாதார வீழ்ச்சியால் பண புழக்கம் குறைவானதால் கம்பெனிகளின் பண தேவையை பூர்த்தி செய்வதும் கடினமானது.தனியார் துறைக்கு கடன் வங்கிகள் மூலமாக தான் வர வேண்டும். அங்கு தான் பிரச்ச்னையே ஆரம்பிக்கறது!.
நாட்டின் வேலை வாய்ப்பை பெருக்க சிறிய மற்றும் நடுத்தர கம்பெனிகளின் வளர்ச்சியால் தான் முடியும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளது அமெரிக்கா. மிக பெரிய பன்னாட்டு கம்பெனிகளின் வளர்ச்சியின் மூலம் மிக பெரிய அளவில் வேலை வாய்ப்பை உருவாக்க முடியாது. அது மட்டுமன்றி பன்னாட்டு கம்பெனிகள் வேலையை குறைவான சம்பளம் உள்ள நாடுகளுக்கு அனுப்பி, லாபத்தை அதிகரித்து வளர்ச்சியை அதிகரிப்பது வழக்கம்.
தற்போது அமெரிக்காவின் முக்கிய பிரச்ச்னையாக இருப்பது அமெரிக்க வங்கி துறைதான்.
1.அமெரிக்க வங்கி துறையில் பெரும்பான்மையான விழுக்காடு விரல் விட்டு எண்ண கூடிய மிக பெரிய வங்கிகளின் கையில் உள்ளது.அந்த வங்கிகளின் வளர்ச்சி மிக பெரியதாக இருப்பதால் எதாவது ஒரு வங்கி வீழ்ந்தாலும் அதன் விளைவு அமெரிக்க பொருளாதாரம் மட்டுமின்றி உலக பொருளாதாரத்தையே பாதிக்க கூடியதாக உள்ளது. வங்கிகள் அதிக லாபம் பெற அளவுக்கு அதிகமான அபாயகரமான வழிமுறைகளை கையாள ஆரம்பித்தன. தங்களின் அபாயகரமான முதலீட்டினால் நட்டம் அடையும் போது அரசை மிரட்டி(too big to fail) பணம் வாங்கி தங்களை காத்து கொள்ள ஆரம்பித்தது.
2. பெடரல் வங்கி தற்போது கிட்ட திட்ட வட்டியில்லா கடனாக வங்கிகளுக்கு பணத்தை அள்ளி இறைக்கிறது. அது மட்டுமின்றி தற்போது பெரும்பான்மை மதிப்பிழந்த வீட்டு கடன் பத்திரங்களை அதிக விலை கொடுத்து வங்கிகளிடமிருந்து வாங்குகிறது.இதற்காக செலவிடபட்டுள்ள( அச்சடிக்க பட்டுள்ள) பணத்தின் மதிப்பு சில டிரில்லியன் டாலர்களை தாண்டி விட்டது. இதற்கெல்லாம் கை மாறாக அரசு எதிர் பார்ப்பது வங்கிகள் சிறு மற்றும் நடுத்தர வங்கிகளுக்கு கடன் கொடுத்து நாட்டின் வேளைவாய்ப்பின்மையை குறைக்கும் என்ற நம்பிக்கை தான்.ஆனால் லாபம் ஒன்றே குறிக்கோளாக இருக்கும் பெரிய வங்கிகள் தற்போதைய பொருளாதார சூழ்நிலையை காரணம் காட்டி சிறு மற்றும் நடுத்தர வங்கிகளுக்கு கடன் கொடுக்கவில்லை. நாட்டின் ஒட்டு மொத்த வங்கி துறையும் தனியாரிடமும், அதுவும் ஒரு சிலரின் கையில் இருப்பதால் அமெரிக்க அரசால் எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. சிறு மற்றும் நடுத்தர கம்பெனிகளுக்கு உதவி செய்ய அரசால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது..
3.அமெரிக்க பெடரல் வங்கி அள்ளி கொடுக்கும் பணத்தை இந்த வங்கிகள் யூக வணிகத்திற்கும், பங்கு சந்தையிலும், வளரும் நாடுகளின் பொருளாதாரத்திற்கும் வெள்ளமாக அள்ளி விடுவதால் அந்த பணம் செல்லுமிடம் எல்லாம் ஒரு ஸ்திரமற்ற நிலை ஏற்படுகிறது.விளை பொருட்கள் மற்றும் தாது பொருட்களின் விலை யூக வணிகத்தால் ஏறவும் செய்கிறது.
4.வங்கிகள் பெரியதாக வளர்ந்து உள்ளதால் அவர்களின் பணபலத்தால் வங்கிகள் மீதுள்ள அரசின் கட்டுபாடு அனைத்தையும்(Glass–Steagall Act etc) கிளிண்டன் மற்றும் புஷ் காலத்தில் விளக்க பட்டு விட்டன. கட்டுபாடு இல்லாததால் வங்கிகள் எடுக்கும் அபயகரமான முடிவகளும்(risk) அதிகமாகி வீழ்ச்சியும் தவிர்க்க முடியாதது ஆனது
இதற்கெல்லாம் முக்கிய காரணம் ஒரு சில வங்கிகள் மிக மிக பெரியதாக இருப்பதும், அவை லாபம் ஒன்றே குறிக்கோளாக இருக்கும் தனியாரிடம் இருப்பதும் தான். இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று பலவாறாக அமெரிக்கா யோசித்து வருகிறது.
இனி இந்தியா கதைக்கு வருவோம். கடந்த பொருளாதார சரிவின் போது குறைவான பாதிப்பில் தப்பியதற்கு காரணம் இந்தியவின் பொது துறையின் வங்கியின் வலிமை தான் என்பது பலராலும் ஏற்று கொள்ள பட்ட உண்மை.சிறு மற்றும் நடுத்தர கம்பெனிகளுக்கு கடனுதவி செய்வது மற்றும் விவசாயிகளுக்கு கடனுதவி செய்வது போன்றவற்றில் இந்த பொது துறை வங்கிகளின் பங்கு மகத்தானது.ஆனால் கடந்த சில வருடங்களாக மன்மோகன் அரசு( மற்றும் பா.ஜ.க அரசு) வங்கிகளை சிறிது சிறிதாக தனியாரிடம் விற்றுவிட துடிப்போடு செயல்படுகின்றது. அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி அவர்களின் வேகத்திற்கு ஒரு வேக தடையாக இருந்தாலும் அவர்கள் தங்கள் நோக்கத்தை கை விடுவதாக தெரியவில்லை.
வங்கிகளை தனியார் மயபடுத்துவது மட்டுமன்றி பல பொது துறை வங்கிகளை இணைத்து ஒரு சில வங்கிகளாக மாற்றவும் முயற்சி செய்கிறது. அமெரிக்காவில் வங்கியின் அளவு பெரியதாக இருப்பதன் பிரச்ச்னையை பற்றி பார்த்தோம். தற்போது தனக்கே ஆப்பு வைத்து கொள்வது போல் அரசு செயல்படுகிறது.வங்கிகளை இணைத்து ஒரு சில வங்கிகளாக்குவதன் நோக்கம் பிற்காலத்தில் அவற்றை தனியார் மயமாக்குவது எளிதாக இருப்பது கூட இருக்கலாம்.பொது துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதன் விளைவு குறித்து விளக்கமாக இந்த பதிவில் எழுதி உள்ளேன்.
தற்போது RBI வெளியிட்டிருக்கும் கொள்கை குறிப்பின் படி நீரா ராடியா டேப்பில் சிக்கிய கம்பெனிகள் மற்றும் தனியார் வங்கிகளை பெரிய அளவில் இந்தியாவில் வங்கி துறையில் அனுமதித்து இந்திய வங்கி துறையை வளர்க்க முடிவிட்டுள்ளதாக தெரிகிறது. அதுவும் இந்த தனியார் வங்கிகளை கொண்டு கிராமபுற ஏழைகளுக்கு கடன் அளிக்க வழி செய்ய போவதாக கூறியுள்ளது. ஏழை மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு இந்த தனியார் வங்கிகள் செயல் பட போகிறது என்பதை போக போக தான் தெரியும்
வங்கிகளை தனியார் மயமாக்குவதன் மூலம் அரசியல்வாதிகளுக்கு நிச்சயம் ஒரு ஜாக்பாட் அடிக்கும். ஆனால் மக்களுக்கு?
ஆக மொத்தம் பிரச்ச்னைக்கு தீர்வை சிந்திக்கிறது அமெரிக்கா. இந்தியாவோ தீர்வை விலக்கி பிரச்சனையை நோக்கி செல்ல நினைக்கிறது.
source:

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...