Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 18, 2011

கிரிக்கெட் உலகக் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு

இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து அடுத்த மாதம் நடத்தவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி திங்களன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹேந்திரசிங் தோனி தலைமையிலான இந்த அணியில் அவர் உள்ளிட்டு 15 பேர் இடம் பெற்றுள்ளனர்.
விரேந்தர் சேவாக், சச்சின் டெண்டூல்கர், கௌதம் கம்பீர், விராட் கோஹ்லி, யுவராஜ் சிங், சுரேஷ் ரைனா, யூசூஃப் பதான், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், அசீஷ் நெஹ்ரா, பர்வீண் குமார், முனாஃப் பட்டேல், ரவிசந்திரன் அஷ்வின், பியுஷ் சாவ்லா ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணியில் மூன்று சுழல் பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்த அம்சமாகும்.

ஒரே ஒரு தமிழக வீரர்:
கடந்த உலக கோப்பை தொடருக்கான (2007) அணியில் தமிழகம் சார்பில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றிருந்தார். இம்முறை முரளி விஜய், அஷ்வின் என 2 பேர் இடம்பெற வாய்ப்பு இருந்தது. ஆனால் சமீபத்திய சொதப்பல்களால் விஜய் வாய்ப்பு பறிபோனது. அஷ்வின் மட்டும் சுழற்பந்து வீச்சாளர் பிரிவில் இடம் பெற்றார்.
 கடந்த 12 மாதங்களில் இந்திய வீரர்களின் செயல்பாடு:


சச்சின்

வயது: 37

போட்டி: 4

ரன்: 235

சதம்: 1

அதிகபட்சம்: 200*

சேவக்

வயது: 32

போட்டி: 12

ரன்: 446

சதம்: 1

அதிகபட்சம்: 110

விக்கெட்: 4

காம்பிர்

வயது: 29

போட்டி: 14

ரன்: 670

சதம்: 2

அதிகபட்சம்: 138*

விராத் கோஹ்லி

வயது: 22

போட்டி: 27

ரன்: 1071

சதம்: 3

அதிகபட்சம்: 118

யுவராஜ் சிங்

வயது: 29

போட்டி: 17

ரன்: 404

சதம்: 0

அதிகபட்சம்: 74

விக்கெட்: 11
சுரேஷ் ரெய்னா

வயது: 24

போட்டி: 26

ரன்: 674

சதம்: 1

அதிகபட்சம்: 106

விக்கெட்: 1

தோனி

வயது: 29

போட்டி: 20

ரன்: 663

சதம்: 1

அதிகபட்சம்: 101*

யூசுப் பதான்

வயது: 28

போட்டி: 12

ரன்: 281

சதம்: 1

அதிகபட்சம்: 123*

விக்கெட்: 12

ஹர்பஜன் சிங்

வயது: 30

போட்டி: 8

விக்கெட்: 11

சிறந்த பந்துவீச்சு: 3/47

ரவிச்சந்திரன் அஷ்வின்

வயது: 24

போட்டி: 7

விக்கெட்: 14

சிறந்த பந்துவீச்சு: 3/24

பியுஸ் சாவ்லா

வயது: 22

போட்டி: 0

விக்கெட்: 0

சிறந்த பந்துவீச்சு: 0

ஜாகிர் கான்

வயது: 32

போட்டி: 12

விக்கெட்: 15

சிறந்த பந்துவீச்சு: 3/38

பிரவீண் குமார்

வயது: 24

போட்டி: 14

விக்கெட்: 19

சிறந்த பந்துவீச்சு: 3/34

ஆஷிஸ் நெஹ்ரா

வயது: 31

போட்டி: 22

விக்கெட்: 30

சிறந்த பந்துவீச்சு: 4/40

முனாப் படேல்

வயது: 27

போட்டி: 8

விக்கெட்: 13

சிறந்த பந்துவீச்சு: 4/௨௯
 
உலகக் கோப்பை போட்டி பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி தொடங்கவுள்ளது.முதல் போட்டி இந்திய வங்கதேச அணிகளுக்கு இடையே மிர்புர் நகரில் இடம்பெறவுள்ளது.
இறுதிப் போட்டி ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி இரவு-பகல் ஆட்டமாக மும்பையில் நடக்கவுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...