Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 13, 2011

கடலில் இருந்து மின்சாரம்!

உலகளவில் கடந்த இருபது ஆண்டுகளில் மின்சக்தியின் தேவை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. மக்கள் பெருக்கத்தின் காரணமாகவும், தொழில் முன்னேற்றத்தினாலும் மின்சக்திப் பயன்பாடு கூடிக்கொண்டே போகிறது.
சக்திக்கான இயற்கை மூலங்களான பெட்ரோலியம், எரி வாயுக்கள், நிலக்கரி போன்றவை தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. தற்போது பூமியில் புதைந்திருக்கும் நிலக்கரிப் படிவுகள், வரும் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று கணக் கிடப்பட்டுள்ளது.

நீர் மின்சார உற்பத்திக்கும் ஓர் அளவுண்டு என்பதை நாம் நடைமுறையில் பார்க்கிறோம். கோடைக் காலத்தில் அணைகளில் தண்ணீர் மட்டம் குறையும்போது நீர் மின்சார உற்பத்தியும் குறைந்துவிடுகிறது.
எனவே செலவு குறைவாக உள்ளதும், தொடர்ந்து மின்சக்தியைத் தருவதுமான புதிய ஆற்றல் மூலத்தை நாம் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.

அவ்வாறு அமைந்த புதிய வழிமுறைதான் கடலில் இருந்து மின்சக்தியை உற்பத்தி செய்வதாகும். அலை வீச்சு, கடலில் ஏற்படும் வெப்ப வேறுபாடுகள், ஆறுகள் கடலில் பாய்ந்து கலப்பது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ஆற்றலை நாம் இதுவரை பயன்படுத்திக் கொள்ளவில்லை. கடல் அலைகளில் இயங்கு ஆற்றலும், நிலை ஆற்றலும் அடங்கியிருக்கின்றன. அலை உயரும்போது நிலை ஆற்றலையும், விழுந்து பாயும்போது இயங்கு ஆற்றலையும் கொண்டிருக்கிறது.

அலைகள் எழும்பித் தாழ்ந்து பாயும் பாய்ச்சலைப் பயன் படுத்தி, 'டர்பைன்களை’ சுழலச் செய்து, ஜெனரேட்டர் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ட்பத்தை மின்சாரப் பொறியாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

இவ்வாறு கடல் அலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் பிரான்ஸ் நாடு முன்னணியில் திகழ்கிறது. நம் நாட்டிலும் கட்ச், காம்பே போன்ற கடல் பகுதிகளில் இம்முறையைப் பின்பற்றி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. தற்போது உள்ள கடல் மின்சார உற்பத்திச் சாதனங்களை விட செலவு குறைவான, செயலாற்றல் அதிகமுள்ள சாதனங்களை உருவாக்கும் தொழில்ட்ப ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
source:lankasri

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...