Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 31, 2011

கடலூர் மாவட்டத்தில் செங்கல் விலை வீழ்ச்சி

கடலூர் மாவட்டத்தில் செங்கல் உற்பத்தி அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது. மேலும் குறையும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் அங்குசெட்டிப்பாளையம், கொக்குப்பாளையம், சிறுவத்தூர், சேமக்கோட்டை, நத்தம், பணப்பாக்கம் உட்பட 50 கிராமங்களில் தினமும் ஒரு கோடி பச்சைக்கல் (செங்கல்) உற்பத்தி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்காக, செங்கல் தேவை அதிகரித்துள்ளதால் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் விறகு மூலம் கொளுத்தப்பட்ட 1,000 செங்கல் 6,500 ரூபாயும், மெலார் மூலம் கொளுத்தும் செங்கல் 6,000 ரூபாய் அளவில் கிடுகிடுவென விலை உயர்ந்தது.

கடும் விலை உயர்வு காரணமாக கான்ட்ராக்டர்கள், வீடு கட்டும் மக்கள் என அனைவரும் கடும் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் மழைக் காலம் முடிந்து, கடந்த 15 நாட்களாக செங்கல் உற்பத்தி பச்சைகல் தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தற்போது விறகு மூலம் கொளுத்தப்பட்ட செங்கல் 4,200 ரூபாய்க்கும், மெலார் மூலம் கொளுத்தப்பட்ட செங்கல் 4,000 ரூபாய்க்கும் கிடைக்கிறது. இதே நிலையில் உற்பத்தி அதிகரித்து விறகு, சவுக்கை மெலார் உயராமல் இருந்தால் இன்னும் 15 நாட்களில் செங்கல் 3,500 மற்றும் 3,300 ரூபாய்க்கு கிடைக்கும் என, செங்கல் சூளை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...