Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 16, 2011

20% இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை!

தமிழ் வழியில் படித்தவர்-களுக்கு, அரசு வேலை-வாய்ப்பில் 20% முன்னுரிமை அளிக்கப்படுவதாக தமிழக அரசு பிறப்பித்திருந்த ஆணைக்கு, ஜனவரி 19&ம் தேதிவரை இடைக்கால தடை விதித்-திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

தமிழில் படித்தவர்-களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று செம்மொழி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்-பட்டது. இதையடுத்து, மாநில அரசுப் பணியில் 20% ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டம், ஆளுநரால் கொண்டு வரப்பட்டது. அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தன.

மேலும் இந்த 20% ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தன எதிர்க்கட்சிகள்.சட்டப்பேரவையில் இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன்,
‘‘தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் மற்றும் கல்லூரி பாடங்கள் தமிழ் வழியிலேயே நடத்தப்படுகின்றன. எனவே, மாநில அரசுப் பணிகளில் அவர்களுக்கு முன்னுரிமை தேவைப்படுகிறது. இதற்காகவே இந்தச் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். எதிர்காலத்தில் நிச்சயம் இது 100% ஆக உயரும். யார் ஆட்சிக்கு வந்தாலும் இதை மாற்ற முடியாது’’ என்றார்.

ஆனால்... சென்னையைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர், ‘ஆங்கில வழியில் பயின்ற என்னைப் போன்றவர்களின் வேலைவாய்ப்புக்கு இச்சட்டம் தடையாக இருக்கிறது’ என்று சொல்லி வழக்குப் போட்டு இச்சட்டத்திற்கு இடைக்காலத் தடை வாங்கியிருக்கிறார்.

நாம் விஜயலட்சுமியின் வழக்கறிஞர் கிருஷ்ண-மூர்த்தியிடம் பேசினோம்.

“கட்டடமே இல்லாமல் வெறும் போர்டு வைத்தால் போதும். தமிழ்நாட்டில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளை நடத்திக் கொள்ளலாம். இப்படி புற்றீசல்போல மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பெருகக் காரணம் தமிழக அரசுதான். இது, தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற அரசாக இருந்தால், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இந்தளவுக்கு வந்திருக்கக்கூடாது.

அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம், தமிழ் வழியில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளை நடத்த முயன்றார். இதற்கான பாடத்திட்டங்களை தயார் செய்து, இரண்டு பேட்ச்கள் வரை நடத்தினார். ஆனால், கடைசிவரை தமிழக அரசு அதற்கு ஒத்துழைப்பு கொடுக்காததால், தமிழ்வழியை மூடிவிட்டு அவரே ஆங்கிலப் பள்ளிக்கு மாற வேண்டியதாகிவிட்டது.

இன்றைக்கு ஆங்கிலோ இண்டியன் பள்ளிகளை மானியத்தோடு நடத்தச் சொல்வதும், கார்ப்பரேஷன் பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவை செயல்படுத்தி வருவதும் தமிழக அரசுதான். கல்லூரிகளில் எல்லா டிகிரிகளும் தமிழ் வழியில் போதிக்கப்படுகிறதா என்றால், அதுவும் பூஜ்யம்தான். இந்த ஆட்சியில்தான் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கென்று தனி இயக்குனரகமே செயல்பட்டு வருகிறது. இப்படியாக, தமிழில் தரமாகப் படிக்க வாய்ப்பே அளிக்காமல் தமிழ் வழிக்கு 20% ஒதுக்கீடு கொடுப்பது எந்த வகையில் நியாயம்?’’ என்று கேள்வியெழுப்பியவர்,

‘‘1981&ல் ஆந்திர முதல்வராக நரசிம்மராவ் இருந்தபோது தெலுங்கு வழி மாணவர்களுக்கு 5% ஒதுக்கீடு வழங்கினார். இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தபோது, ‘மொழி அடிப்படையிலும், பாலின அடிப்படையிலும் மக்களை வேறுபடுத்திப் பார்ப்பது அரசியல் சட்டத்துகே எதிரானது’ என்று கூறி நிராகரித்து விட்டது. அதன் அடிப்படையில்தான் நான் வழக்கு தொடுத்திருக்கிறேன்.

நாங்கள் தமிழுக்கு எதிரானவர்கள் அல்லர். வெறும் புகழுக்காக இப்படி சட்டம் கொண்டு வருவதை நிறுத்திவிட்டு, பள்ளிகளில் தமிழை வளர்க்கும்படி தமிழக அரசை கேட்கிறோம்’’ என்றார்.

கல்வி சம்பந்தப்பட்ட பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வரும் பா.ம.க. வழக்கறிஞர் கே.பாலுவிடம் இது குறித்துப் பேசினோம்.

‘‘தாய் மொழி தவிர, வேறெந்த மொழியாலும் தரமான கல்வியைக் கொடுக்க முடியாது’ என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதுதான் நடைமுறையில் இருக்கிறது. ஆனால், இதே தி.மு.க. அரசு கொண்டுவந்த இருமொழிக் கொள்கைதான் ஆங்கில மோகத்துக்கே அடிப்படை. தமிழகம் முழுவதும் ஆங்கிலக் கல்வி நிறுவனங்கள் உருவாக காரணமாக இருந்ததும், இந்தக் கொள்கைதான். அந்த நிறுவனங்கள்தான் விஜயலட்சுமி போன்றவர்களை பின்னால் இருந்து இயக்குகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை சுமார் 15% மாணவர்கள் மட்டுமே ஆங்கில வழியில் படிக்கிறார்கள். மீதி 85% மாணவர்கள் அரசுப் பள்ளிகளில், அதுவும் தமிழ்வழியில் படிக்கிறார்கள். அப்படிப் பார்த்தால், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இன்னும் கூடுதலாக இடஒதுக்கீடு கொடுப்பதுதான் நியாயம்.

அதுமட்டுமின்றி, இனி ஒவ்வொரு தேர்விலும் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை மட்டுமே மாநில அளவிலான தரப்பட்டியலுக்கு தேர்ந்தெடுத்து அங்கீகரிக்க வேண்டும். மேலும், பணக்கார மாணவர்களுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களையும் உருவாக்க வேண்டும். இதற்கு, மாநிலம் முழுவதும் சமச்சீரான கல்வியைக் கொண்டு வந்து, அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் அரசுடமையாக்குவதுதான் ஒரே தீர்வு. டாஸ்மாக் மதுக்கூடங்களை அரசுடமையாக்கும் அரசால் கல்விக் கூடங்களை அரசுடைமையாக்குவது சுலபம்தான்’’ என்றார் பாலு.

இந்த பிரச்னை சட்டப்பேரவையிலும் எதிரொலித்துள்ள நிலையில்... அரசின் நிலைப்-பாட்டை அறிய அனைத்து தரப்பினரும் காத்திருக்கிறார்கள்
thanks:tamilagaarasiyal

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...