Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 20, 2011

விழுப்புரம் மாவட்ட ஐக்கிய ஜமாஅத் சார்பில் பள்ளிவாசல் இமாம்கள் மற்றும் பணியாளர்களுக்கு இலவச மிதி வண்டிகள் அமைச்சர் பொன்முடி வழங்கினார்

வி ழு ப் பு ர த் தி ல் ,மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமா அத் பேரவை சார்பில்,பள்ளிவாசல் உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. தலைவர் அமீர் அப்பாஸ்தலைமை தாங்கினார். அமைச்சர் பொன்முடி, 60 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசிய தாவது:
.
சிறுபான்மையினருக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் முதல்வர் கலைஞர் தான். தேர்தல் நேரங்களில் மாநாடு, கூட்டம் என்றால் கோரிக்கைகள் இல்லாமல் இருக்காது.தற்போது முஸ்லிம் ஐக்கிய ஜமா அத் பேரவை சார்பில் கேட் டுள்ள கோரிக்கைகள் நியா யமானவை. முதல்வரிடம் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கிறேன்.
ஒரு நாள் இலவசங்கள் வழங்கிவிட்டு தம்பட்டம் அடிக்கின்றனர். ஆண்டுதோறும் இலவசங்கள் வழங்கும் முதல்வர் கலைஞரின் சாத
னைகளைச் சிந்தித்து பார்க்க வேண்டும். மக்கள் வரிப் பணத்தில் இலவசங் கள் தருவதாகக் கூறுகின்றனர்.
.
இதற்கு முன் காமராஜர், அண்ணா, எம்.ஜி ஆர்.,போன்றவர்களும் இலவசங் களை அரசு பணத்தில் தான் வழங்கினர். கடந்த நான்கரை ஆண்டு களில் வரியை உயர்த்தாமல் இருந்தது முதல்வர் கலைஞர் ஆட்சியில் தான். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மத்திய அரசு சார்பில் குறைந்த விலையில் அரிசி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் தான் ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. ஆத்திகம், நாத்திகம் என்பது வேறு. தி.மு.க., ஆட்சியில் தான் கோவில் பூசாரிகளுக்கு நல வாரியம் அமைத்து சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன.தி.மு.க.,விற்கு ஓட்டு போடுவது ரகசியமாக இருக்கலாம். ஆனால் தி.மு.க.,விற்கு ஆதரவாக பிரசாரம் செய்து வெளிப்படையாக இருக்க வேண்டும்.

முதல்வராக மீண்டும் கலைஞர் வந்தால் மட் டுமேகான்கிரீட் வீடு திட் டம் நிறைவேற்றப்படும். வேறு யார் ஆட்சிக்கு வந் தாலும் எந்தத் திட்டத்தை யும் செயல்படுத்த முடி யாது. மக்களுக்கு இவ் வளவு ந ல த் தி ட் ட ங் க ள் செய்துள்ளதால், முதல்வராக மீண்டும் கலைஞரை தவிர யாரும் வர முடி யாது.
வாய்ச்சொல் பேசுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தேர்தல் முடிவுகள் இருக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்
thanks:http://www.lalpet.com/

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...