சிதம்பரத்தில் மக்களுக்காக குறைந்த கட்டணத்தில் இயங்கும் ஜமா அத் ஆம்புலன்ஸ்களை தடையின்றி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கை கொடுக்கும் கை அமைப்பின் நிறுவனர் முகமதுரபீக், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே நோயாளிகளை அவசர உதவிக்கு ஏற்றிச் செல்ல தனியார் ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகிறது. இவர்களில் ஒரு சிலர் நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.
ஆனால் சில முஸ்லிம் ஜமாத்துகளுக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் நோயாளிகளின் வசதிக்கேற்ப குறைந்த வாடகையில் இயக்கப்படுகிறது. இந்த ஆம்புலன்ஸ்களை இயக்க தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் தடுத்து தகராறு செய்கின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஏழை எளிய மக்கள் பயன்பெற ஜமா அத் ஆம்புலன்ஸ்கள் தடையின்றி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
source: dinamalar
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...