Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 29, 2011

தனியார் மின் நிலையத்துக்கு எதிர்ப்பு!!

சிதம்பரம், ஜன. 28: சிதம்பரம் அருகே பச்சங்குப்பத்தில் அமையவுள்ள ஐ.எஃப். எல்.எஸ் தமிழ்நாடு பவர் கார்பரேஷன் என்ற தனியார் மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் வெள்ளிக்கிழமை சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதிக்கூட்டத்தில் எவ்வித உடன்படிக்கை ஏற்படாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. வருகிற பிப்ரவரி 3-ம் தேதிக்கு மேல் மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் அமைதிக்கூட்டத்தை கூட்டுவது என முடிவு எடுக்கப்பட்டது.

சிதம்பரம் அருகே பச்சங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 1100 ஏக்கரில் ஐ.எஃப். எல்.எஸ். தமிழ்நாடு பவர் கார்பரேஷன் நிறுவனம் தனியார் அனல் மின் நிலையம் அமைக்கவுள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும்போது புரோக்கர்கள் மூலம் குறைந்தவிலையில் விவசாயிகளிடம் நிலங்களை பெற்றதால் கூடுதல் தொகை வழங்க வேண்டும். மேலும் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதால் அப்பகுதியில் மின்நிலையம் அமைக்கக்கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 3 முறை நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் உடன்படிக்கை ஏற்படவில்லை.

இந்நிலையில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மீண்டும் வெள்ளிக்கிழமை அமைதிக்கூட்டம் உதவிஆட்சியர் எம்.இந்துமதி தலைமையில் நடைபெற்றது.
வட்டாட்சியர் எம்.காமராஜ், டிஎஸ்பி ஆர்.மோகன், விவசாய சங்க பிரதிநிதிகள் சண்முகம், பரமானந்தம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் டி,மணிவாசகம், மாவட்டக்குழு உறுப்பினர் வி.எம்.சேகர், தனியார் நிறுவன அதிகாரிகள் மோனிஷ்அகுஜா, பாலமுரளி, முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்படாததால் வருகிற பிப்ரவரி 3-ம் தேதிக்கு மேல் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அமைதிக்கூட்டத்தை நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
-தினமணி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...