Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 30, 2011

கருப்பு பணத்தை கொண்டு வர நடவடிக்கை: மொய்லி

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளதாக சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த அவர், கருப்பு பண பிரச்சனையில் மத்திய அரசு எதுவும் மறைக்கவில்லை என்றும், கருப்பு பணம் வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றமே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் கூறினார்.
எங்களிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை.வெளிநாடுகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களின் பெயர் பட்டியல் அடங்கிய சீலிட்ட உறையை உச்ச நீதிமன்றத்திடம் அளித்துவிட்டோம். அந்த பெயர்களை வெளியிடுவதா வேண்டாமா என்பதை உச்ச நீதிமன்றமே முடிவு செய்துகொள்ளட்டும்.

மற்ற நாடுகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி கருப்பு பணத்தை போட்டுவைத்துள்ளவர்களை பற்றிய விவரங்கள்,வரி ஏய்ப்பு மற்றும் அன்னிய செலவாணி சட்டங்களை மீறினால் மட்டுமே அந்நாடுகளிடமிருந்து கிடைக்கும்.இந்த ஒப்பந்த நிபந்தனைகள் நாட்டுக்கு நாடு மாறுபடும் என்று மொய்லி மேலும் கூறினார்.
-webdunia

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...