Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 23, 2011

சிதம்பரம் அருகே 3600 மெகாவாட் அனல் மின் நிலையம் - ஐ.எல்.எப்.எஸ்

சிதம்பரம் அருகே 3600 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்கப்படும் என்று ஐ.எல்.எப்.எஸ். நிறுவன அதிகாரி பேசினார். கிராமப்புற பெண்களுக்கான தொழில்திறனை ஊக்குவித்து அதன் மூலம் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் தொழிலில் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யும் ஒரு முயற்சியாக ஐ.எல்.எப்.எஸ். பவர் கம்பெனி மற்றும் இதன் கல்வி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரத்தில் தொழிற்பயிற்சி மையத்தை தொடங்கி உள்ளது.

இதில் மின்சாரத்தில் இயங்கும் 30 நவீன தையல் எந்திரங்களும் அதற்கு உண்டான ஏனைய உபகரணங்களும் நிறுவப்பட்டுள்ளன.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணை தலைவர் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிதம்பரம் அருகே உள்ள கொத்தட்டை மற்றும் வில்லியநல்லூருக்கு உட்பட்ட கிராமங்களான பஞ்சங்குப்பம், கரிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் இயங்கும் 20 மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள 60 பயனாளிகள் முதற்கட்ட தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தொழிற்பயிற்சி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேலும் பயிற்சி முடிந்த வுடன் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு 70 தையல் எந்திரங்கள் நிறுவி வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும். மேலும் அரியகோஷ்டி, கரிக்குப்பம், வி. பஞ்சங்குப்பம், கே. பஞ்சங்குப்பம், சின்னூர், இந்திராநகர் உள்ளிட்ட கிராமங்களில் பிட்டர் போன்ற தொழிற்கல்விகளை வழங்கிட எங்கள் நிறுவனம் புவனகிரி பகுதியில் உள்ள மங்களம், முருகன் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் கல்விக்கட்டணத்தை வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன் மூலம் நடப் பாண்டில் மட்டும் 5 மாணவர்கள் வேலை தகுதியை பெற முடியும். மேம் ஐ.எல்.எப்.எஸ். தமிழ்நாடு பவர் கம்பெனி கொத்தட்டை அருகில் 3600 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்க உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது நிறுவனத்தின் அலுவலர்கள் ரவிச்சந்திரன், பால கிருஷ்ணன், பொறியாளர் பாலமுரளி, சேகர், ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
Source: dinamani

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...