Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 31, 2011

கெய்ரோ போராட்டக்காரர்களின் பிடியில்

எகிப்தில் சர்வாதிகார அரசுக்கெதிரான மக்கள் திரள் போராட்டம் அதன் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

ஆட்சிமாற்றத்தை கோரி ஊரடங்கு உத்தரவை மீறியும்,பாதுகாப்புப் படையினருக்கு சவால் விட்டும் ஆறாவது நாளாக களமிறங்கிய எகிப்து நாட்டு மக்கள் கெய்ரோவின் கட்டுப்பாட்டை தங்கள் வசம் கொண்டுவந்துள்ளனர்.

ராணுவ உடையை களைந்துவிட்டு ராணுவ வீரர்களும் மக்களோடு போராட்டத்தில் கலந்துகொண்டனர். போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த மோதலில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 150 ஐ தாண்டியுள்ளது. நான்காயிரத்திற்கும் அதிகமானோருக்கு காயமேற்பட்டுள்ளது. போலீஸ் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய வேளையிலும் மக்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை.

சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் 30 ஆண்டுகால கொடுங்கோல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பாமல் திரும்பமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரகடனப்படுத்தியுள்ளனர்.
எகிப்து வன்முறைக்காடாக மாறியுள்ளது. போலீஸ் பாதுகாப்பு இல்லாததன் காரணத்தினால் வங்கிகளும், நகைக்கடைகளும், பெரும் வியாபார நிறுவனங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

போராட்டம் வலுவடைந்த பொழுதிலும் பதவியை விட்டு விலக விரும்பாத ஹுஸ்னி முபாரக் ராணுவத்தின் சக்தியை காண்பிப்பதற்கான முடிவில் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கெய்ரோ நகரத்தில் ராணுவ விமானங்களும், ஹெலிகாப்டர்களும் தாழ்வாக பறக்கின்றன. போர் டாங்குகள் அணி வகுத்துள்ளன. ஆனால் இதுவரை தாக்குதல் துவங்கவில்லை.

நாட்டின் பல்வேறு சிறைகளை போராட்டக்காரர்கள் தகர்த்தனர். வாதினா ட்ரவுன் சிறையில் சிறை அதிகாரிகள் வேலையை ராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து இஃக்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தைச் சார்ந்த 34 தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

கெய்ரோவில் மூத்த போலீஸ் அதிகாரியை கொலைச் செய்துவிட்டு ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிறையிலிருந்து வெளியேறினர். நூற்றுக்கணக்கான நீதிபதிகள் போராட்டகாரர்களுடன் இணைந்துள்ளனர்.முபாரக் பதவி விலகவேண்டுமென நோபல் பரிசுப்பெற்ற முஹம்மது அல்பராதி வலியுறுத்தியுள்ளார்.

30 ஆண்டுகளாக மக்களின் உரிமைகளை அபகரித்த ஹுஸ்னி முபாரக்கை எகிப்து நாட்டு மக்கள் நீதியின் முன்னால் நிறுத்துவார்கள் இஃக்வானுல் முஸ்லிமூன் தலைவர் முஹம்மது கானேம் தெரிவித்துள்ளார். லண்டனில் பிரஸ் டிவிக்கு அளித்த பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.


சொந்த நாட்டின் முடிவை தீர்மானிக்கும் மக்களின் உரிமைகளை முபாரக் நீண்டகாலமாக அபகரித்துள்ளார். போக்கிரிகளின் துப்பாக்கி முனையில் அவர் எகிப்தை ஆட்சிபுரிந்தார். இதற்கெதிராகத்தான் எகிப்து நாட்டு மக்கள் எழுச்சிப் பெற்றுள்ளனர். இந்த சர்வாதிகாரியை ஆட்சியை விட்டு அகற்றாமல் மக்கள் அடங்கமாட்டார்கள் என முஹம்மது கானேம் தெரிவித்தார்.

இஸ்லாமியவாதிகள் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என பிரச்சாரம் செய்து எகிப்தில் ஏகாதிபத்திய ஆட்சியை நிலைநாட்ட மேற்கத்திய நாடுகள் முயலும் என்ற அச்சத்தில் ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிரான போராட்டத்தில் இஃவானுல் முஸ்லிமீன் என்ற முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் மிக கவனத்துடன் காய்களை நகர்த்தி வருகிறது.


போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு உணவும், மருந்தும் வழங்கி பின்னணியில் இஃவானுல் முஸ்லிமீன் இயக்கம் செயல்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

கடுமையான அடக்குமுறைகளை சந்தித்த பிறகும் இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் உள்கட்டமைப்பு மற்றும் போராட்ட வீரியம் வலுவாக உள்ளது. ஆதலால் தேர்தல் நடந்தால் இஃவான்களுக்கு போதுமான இடங்கள் கிடைக்கும் என கருதப்படுகிறது.
-பாலைவனத் தூது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...