Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 18, 2011

திமுக, முஸ்லீம்லீக் கூட்டணி தொடரும்! அப்துல்ரஹ்மான்

வேலூர்: எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.,வுடன் உள்ள எங்கள் கூட்டணி தொடரும், என, வேலூர் எம்.பி., அப்துல்ரகுமான் கூறினார். இது தொடர்பாக வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடரும் என்றார்.

கட்டமாய திருமண பதிவு சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இதனால், முஸ்லிம் சமுதாயத்தினருக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்து அரசுக்கு தெரிவித்தோம். அதன்படி, காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் ஜமாத்தில், திருமணம் பதிவு செய்து தரும் சான்றிதழ் முறையாக எடுத்துக் கொள்ளப்படும். விருப்பம் இருந்தால், இந்த சான்றிதழை பதிவு அலுவலகத்தில் பதிவும் செய்து கொள்ளலாம் என, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.
கட்டாய மத மாற்ற தடை சட்டத்தை, தானே நீக்கியதாக ஜெயலலிதா கூறுகின்றார். 2004 பார்லிமென்ட் தேர்தலில் தோல்வியை தழுவிய பின், ஒரு அவசர சட்டம் மூலம் அச்சட்டத்தை நீக்கினார். ஆனால், அடுத்த சட்டசபை கூட்டத் தொடரில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றாததால், அச்சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வந்தது. அது தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் தான், முழுமையாக நீக்குவதற்கான நிலைப்பாட்டை எடுத்தது என்றார்.

1 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இட ஒதுக்கீடு தந்த திமுக வை முஸ்லிம்கள் மறக்க கூடாது

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...