Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 26, 2011

செல்போன் வழியாக சான்றிதழ் படிப்பு

சிதம்பரம், ஜன.24: அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் புதிய முயற்சியாக செல்போன் மூலமாக சான்றிதழ் படிப்பின் பாடங்களை வழங்க பெங்களூர் மொபிசர் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

அண்ணாமலைப் பல்கலை. துணை வேந்தர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் முன்னிலையில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, மொபிசர் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் நிர்வாக இயக்குநர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்ச்சியில் தொலைதூரக் கல்வி மைய இயக்குநர் முனைவர் எஸ்.பி.நாகேஸ்வரராவ், மொபிசர் டெக்னாலஜிஸ் நிறுவன முதன்மை அதிகாரி எம்.குருமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.இதுகுறித்து துணை வேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்தது:

அண்ணாமலைப் பல்கலை. தொழில்நுட்பக் கூட்டு முயற்சியில் சர்டிபிகேட் புரோகிராம் இன் பண்டமெண்டல் ஆப் மியூட்சுவல் பண்ட்ஸ் (இங்ழ்ற்ண்ச்ண்ஸ்ரீஹற்ங் டழ்ர்ஞ்ழ்ஹம்ம்ங் ண்ய் ஊன்ய்க்ஹம்ங்ய்ற்ஹப்ள் ர்ச் ஙன்ற்ன்ஹப் ஊன்ய்க்ள்) என்ற பாடத்தினை வரும் கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு செல்போன் மூலமாக வழங்க திட்டமிட்டுள்ளது.பாட திட்டம், வழிமுறைகள், பாடங்கள் குறிப்பேடுகள் மற்றும் செயல்முறை பயிற்சி ஏடுகள் ஆகிய அனைத்தையும் செல்போன் மூலமாக வழங்கப்படுவது இதன் முக்கிய அம்சமாகும் என தெரிவித்தார்.
source:Dinamani

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...