Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 24, 2014

‘தமிழகத்தில் நியாயமாக தேர்தல் நடத்தப்படும்’: தேர்தல் ஆணையம் உறுதி!

தமிழகத்தில் மக்களவை தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆளும் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, தஞ்சாவூர் திமுக வேட்பாளர் டி.ஆர் பாலு தொடர்ந்த வழக்கு, உயர்நீதிமன்றத் தற்காலிகத் தலைமை நீதிபதி சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் ஆளும் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்து வருவதாகவும், இதற்கு காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாகவும் மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது. இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர், தேர்தலை நியாமாகவும் நேர்மையாகவும் நடத்த தேவையான நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும், பராபட்சமின்றி புகார் மீது நடவடிக்கை எடுத்து வருவதாகவும்
தெரிவிக்கப்பட்டது.

மேலும், முறைகேடுகளை தவிர்க்கவே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதாகவும் வாதிட்டார். வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளதால் வழக்கை முடித்து வைப்பதாகத் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...