பசிபிக் பெருங்கடலின் காற்றழுத்தம் மற்றும் காற்றின் போக்கைக் கணக்கில் கொண்டு 'எல் நினோ' உருவாகும் வாய்ப்பு காணப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
தெற்காசிய நாடுகள் ஒரு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள இருப்பதாக எச்சரிக்கை எழுப்பப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளும், வானிலை ஆய்வாளர்களும், பசிபிக் பெருங்கடலின் காற்றழுத்தம் மற்றும் காற்றின் போக்கைக் கணக்கில் கொண்டு 'எல் நினோ' உருவாகும் வாய்ப்பு காணப்படுவதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
ஆழ்கடலில் காற்றழுத்தம் ஏற்படும்போது பசிபிக் பெருங்கடலின் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும். அதன் விளைவுகள் தெற்கு ஆசிய நாடுகளின் விவசாயத்திற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. அது அடை மழையால் ஏற்படும் வெள்ளப் பெருக்கமாகவும் புயலாகவும் இருக்கலாம்;அல்லது மழையின்மையால் ஏற்படும் வறட்சியாகவும் மாறலாம்.
இதன் விளைவாக வடஇந்தியாவில் கடுமையான மழை பொழிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் கடுமையான வறட்சி ஏற்படலாம். இதனால் மக்களின் வாழ்வாரத்தைக் கடுமையாக பாதிக்கக்கூடும்.
கடந்த 2002 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் இதே போனறு 'எல் நினோ' எச்சரிக்கைகள் தரப்பட்டது. அதன் கடுமையான விளைவுகளை இந்தியா எதிர்கொள்ள வேண்டி வந்தது. இதேபோல 2009 ஆம் ஆண்டும் நிகழ்ந்தது.
இந்திய விவசாயம் மழையை நம்பித்தான் இருந்து வருகிறது. மழை பொய்த்தால் விளைச்சல் இல்லை என்கிற நிலையில்தான் பெருவாரியான விவசாயிகள் இருந்து வருகின்றனர்.
இந்திய அரசு 'எல் நினோ' பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அதை எதிர்கொள்ளத் தயாராக இருந்தாக வேண்டும் என்றும், இந்திய வானிலை ஆய்வாளர்கள் இந்த எச்சரிக்கையை சட்டை செய்வதாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
-வெப்துனியா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...