Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 26, 2014

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 73.67% வாக்குப்பதிவு! சிதம்பரம் தொகுதிவாரி 79.61

சென்னை: மக்களவை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 73.67 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் இத்தகவலை தெரிவித்தார்.

மக்களவை தேர்தலில் 6வது கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 24ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் உத்தேசமாக 72 சதவீதம் வாக்குகள் பதிவானதாக ஏப்ரல் 24ம் தேதி தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. மாவட்ட வாரியாக பதிவான வாக்குகளின் இறுதி நிலவரம் வர தாமதம் ஏற்பட்டதால் நேற்று வெளியிடப்படுவதாக இருந்த பதிவான வாக்குளில் இறுதி விபரம் இன்று (ஏப்ரல் 26) வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தொகுதிவாரியாக பதிவான வாக்குகளின் இறுதி பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன் விபரம் : * வடசென்னை 63.95 * மத்திய சென்னை 61.49* தென்சென்னை 60.04
* சிதம்பரம் 79.61
*  காஞ்சிபுரம் 75.91* திருவள்ளூர் 73.73* கடலூர் 78.63* கள்ளக்குறிச்சி 78.26* விழுப்புரம் 76.09* ஆரணி 80* திருவண்ணாமலை 78.08* தர்மபுரி 81.07* சேலம் 76.73* கிருஷ்ணகிரி
77.68
* நாகப்பட்டனம் 77.64* பெரம்பலூர் 80.02 மயிலாடுதுறை 75.87* அரக்கோணம் 77.08* வேலூர் 74.58* ஸ்ரீபெரும்புதூர் 66.21* திருப்பூர் 76.22* கோவை 68.28* பொள்ளாச்சி 73.11* நீலகிரி 73.43* திருநெல்வேலி 67.68* தென்காசி 73.06* தூத்துக்குடி 69.92* மதுரை 67.88* ராமநாதபுரம் 68.63* விருதுநகர் 74.96* சிவகங்கை 72.83* கன்னியாகுமரி 67.69* திருச்சி 70.55* தஞ்சாவூர் 75.49* நாமக்கல் 79.64* ஈரோடு 76.07* கரூர் 80.55* திண்டுக்கல் 77.36* தேனி 75.02 என்ற அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன.
மொத்தம் பதிவான வாக்குகள் 73.67%. இதில், ஆண்கள் 73.49%, பெண்கள் 73.85 %, மற்றவர்கள் 12.72 % என்ற அளவில் வாக்களித்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்களித்துள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.
-Dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...