புதுடெல்லி: பாஜக ஆட்சிக்கு வந்ததும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு ராமர் கோயில் கட்டுவது பற்றி முடிவெடுப்போம் என்று அக்கட்சி செய்தி தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவோம் என தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது,பொது சிவில் சட்டம், காஷ்மீர் மக்களின் சலுகைகளை பறிப்பது போன்ற திட்டங்கள் சிறுபான்மையினர் ஓட்டுகளை பாதிக்கும் என்பதால், அந்த விஷயத்தை பிரசாரத்தில் சொல்லாமல் அக்கட்சி தலைவர்கள் அடக்கி வாசித்தனர். அதே போல், சிறுபான்மையினருக்கு எதிராக பேசக் கூடாது என்றிருந்தனர். ஆனாலும், அக்கட்சியினர் யாராவது ஏதாவது பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர்.
பாஜ தேர்தல் ஒருங்கிணைப்பாளர் அமித்ஷா, உ.பி.யில் கலவரம் பாதித்த பகுதியில் பேசும் போது, பழிவாங்க விரும்பினால் பாஜவுக்கு ஓட்டு போடுங்கள் என்று பேசி சர்ச்சையில் சிக்கினார். அவரது பிரசாரத்திற்கு தடைவிதிக்கப்பட்டு தற்போது தடை நீக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மோடியை விமர்சிப்பவர்களுக்கு இந்தியாவில் இடம் கிடையாது, பாகிஸ்தானுக்கு ஓடுங்கள் என்று கிரிராஜ் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த சர்ச்சை அடங்குவதற்குள் பாஜ செய்தி தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், பாஜ ஆட்சிக்கு வந்ததும், அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு ராமர் கோயில் கட்டுவது
பற்றி முடிவெடுக்கப்படும். இந்த விவகாரம் பாரபட்சத்துடன் அணுகப்படுகிறது. எனவே, இப்பிரச்னையை விரைந்து தீர்க்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த பேச்சால் பாஜவுக்கு மீண்டும் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...