Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 20, 2014

ஒற்றுமையே இந்தியாவின் வலிமை! மோடி பிரித்தாள நினைக்கிறார்:ராகுல்காந்தி!

ஆங்கிலேயரைப் போன்று இந்தியாவை மோடி பிரித்தாள முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அஸ்ஸாம் மாநிலம், நகானில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

ஆங்கிலேயர் ஆட்சியைப் போன்று பாஜகவும், மோடியும் பிரித்தாளும் கொள்கையில் நம்பிக்கை கொண்டுள்ளனர். மகாராஷ்டிரத்துக்கு செல்லும் மோடி, அங்கு மக்களைத் தூண்டி விடும் வகையில் பேசி வருகிறார். கர்நாடகத்தில் அக்கட்சியினரால் பெண்கள் தாக்கப்படுகின்றனர். பா.ஜ.க.வினர் விமர்சனத்தை மட்டுமே முன்வைக்கின்றனர். ஆட்சியில் நிகழ்ந்த நல்ல விஷயங்களில் ஒன்றைக் கூட பேச மறுக்கிறார்கள். ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் உள்ளிட்டோரின் ஒற்றுமையே இந்தியாவின் வலிமை. குஜராத் மக்கள் தங்கள் கடின உழைப்பால் கைத்தறி ஆலைகள் மற்றும் பிற தொழிற்சாலைகளை நிறுவியுள்ளனர். இது மோடியின் அரசு வருவதற்கு முன்னரே ஏற்பட்ட வளர்ச்சி.

ஆனால், இந்த வளர்ச்சி அனைத்தும் தம்மால்எடுக்கப்பட்ட நடவடிக்கையால் வந்தது என அவர் உரிமை கொண்டாடுகிறார். இந்தியாவில் மாற்றம் கொண்டு வரப்போவதாக மோடி பேசி வருகிறார். ஒரு தனி மனிதனால் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. கோடிக்கணக்கான மக்களின் ஒன்றுபட்ட நடவடிக்கையால் தான் அதனை செய்ய முடியும். பெண்களுக்கான சேவை குறித்து பாஜக வெறும் வாய்ஜாலம் மட்டுமே காட்டுகிறது. பெண்களின் வலிமை பற்றி
பேசும் பாஜக, சுவரொட்டிகளில்கூட பெண்களின் படத்தை இடம்பெறச் செய்வதில்லை. உதாரணத்துக்குக்கூட சுஷ்மா ஸ்வராஜ் படத்தை பார்க்கவில்லை.

ஒரு தனி மனிதரின் (மோடி) புகைப்படம் மட்டுமே அவற்றில் உள்ளது. மங்களூரில் அக்கட்சியினர் பெண்களைத் தாக்கினர். மத்தியப்பிரதேசத்தில் 20,000 பெண்கள் காணாமல் போயுள்ளதாக சட்டப்பேரவையில் மாநில அமைச்சர் தெரிவித்தார். அந்தப் பெண்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்து அரசு ஒரு தகவலும் தரவில்லை. குஜராத்தில் ஒரு பெண்ணின் தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப்படுவதுடன், அவரது நடவடிக்கைகளை கண்காணிக்க அதிகாரிகள் பின்தொடரும் நிலை உள்ளது.இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
source:www.thoothuonline.com

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...