Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 13, 2014

வருகிற 15–ந்தேதி முதல் 45 நாட்கள் கடலில் மீன்பிடிக்கத்தடை-கலெக்டர் அறிவிப்பு

வருகிற 15–ந்தேதி முதல் 45 நாட்கள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கிர்லோஷ்குமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், தமிழக கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள பகுதி முழுவதிலும்(திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15–ந்தேதி முதல் மே மாதம் 29–ந்தேதி முடிய 45 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவலைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை தடை செய்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 13 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இத்தடை ஆணையின் படி இந்த ஆண்டும் விசைப்படகுகள் மற்றும் இழுவலைப்படகுகள் மூலம் மேற்காணும் தடை செய்யப்பட்ட 45 நாட்களுக்கும் கடலில் சென்று மீன்பிடிக்க வேண்டாம் என கடலூர் மாவட்ட மீனவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கடலில் மீன்கள் இனவிருத்திக்கு ஏற்ற காலமான மேற்கண்ட 45 நாட்கள், மீனவர்கள் கடலில் மீன்பிடிப்பதை நிறுத்தி
வைப்பதன் மூலம் இடையூறு இல்லாத இனவிருத்தி மேம்பட்டு, மீன்வளம் பெருக வாய்ப்புள்ளதால், மீனவர்கள் நலன் கருதி அரசு வகுத்துள்ள இத்தடை ஆணையின்படி மேற்குறிப்பிட்டுள்ள 45 நாட்கள் முடியும் வரை இம்மாவட்ட மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவலைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...