காட்டுமன்னற்குடியில் கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக மருத்துவ சேவை செய்துவந்த மருத்துவர் சம்பத் அவர்கள் இன்று அதிகாலை மரணம் அடைந்தார்கள்.காட்டுமன்னார்குடி மக்களின் நாடித்துடிப்பை அறிந்து அவர்களின் தொனியிலேயே பேசும் திறமைபெற்றவர்.அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
புதிய தொழினுட்பம் படித்துவிட்டோம் என்ற பெருமையில் இருபவர்கள் மத்தியில் இவரின் மருத்துவ சேவை என்பது அளவிட முடியாதது.மக்களுக்கு விளங்கும் வகையில் சின்ன மாத்திரை ஒன்னு பெரிய மாத்திரை ஒன்னு என்று சொல்லி விளங்க வைக்கும் திறன் மறக்க முடியாத ஒன்று.காட்டுமன்னார் குடி சுற்றுவட்டாரத்தில் பெரியவர் முதல் சிறியவர் வரை இவர் நாடிபாத்திராத ஒருவர் இருக்கமுடியாது என்பது நிதர்சனமான உண்மை.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...