அகமதாபாத்: குஜராத்தில் லோக் ஆயுக்தாவும், தகவல் பெறும் உரிமை சட்டமும் அமைக்கப்பட்டு இருந்தால் அம்மாநில முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி சிறையில் தான் இருப்பார் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
16வது லோக்சபா தேர்தலின் 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்து விட்ட நிலையில், மீதமுள்ள 3 கட்டங்களுக்கான தேர்தல் பிரச்சாரம் சூடு பறக்க நடந்து வருகிறது. அந்தவகையில், நேற்று குஜராத் மாநிலம் பாவனார் லோக்சபா தொகுதிக்குட்பட்பட்ட போதாத் நகரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு மோடியை விமர்சித்து கடுமையாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
10 ஆணையர்கள் இருக்க வேண்டும்.ஆனால் இங்கு எவரும் இல்லை.பிற மாநிலங்களில் லோக் அயுக்தா உள்ளது. ஆனால் குஜராத்தில் லோக் ஆயுக்தா இல்லை. ஊழலை பிடிக்கும் அதிகாரம் கொண்ட ஆணையத்திற்கு இங்கு இடம் கொடுக்க வில்லை.லோக் அயுக்தா, தகவல் பெறும் உரிமை ஆணையர் இங்கு நியமிக்கப்படும் நாளில் உங்கள் காவலாளி உள்ளே (ஜெயில்) செல்வார்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.மேலும், மகாத்மா காந்தி போன்று வாழ்நாள் முழுவதும் உண்மையே பேசிய தலைவர்களை தந்த குஜராத்தில் மோடி எப்போதுமே பொய்களை
பேசுவதற்கு முயற்சி செய்து வருகிறார்' என அவர் குற்றம் சாட்டினார்.
-thatstamil

1 கருத்துகள்:
பொய்யின் மொத்த உருவமாக திகழ்கிறார் இந்த நரபலி மோடி..அதிகாரத்தை பெறுவதற்காக எந்த ஒரு நிலைக்கும் போகும் குணம் கொண்டவர்கதான் இந்த மோடி...ஒரு வேலை இவர் வெற்றி பெற்றால் நாட்டில் வளம் பெரும் முதலாளிகளின் கையில் சென்றுவிடும்...
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...