கடலூர்,ஏப்.17-
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஓட்டு போட என்னென்ன ஆவணங்களை பயன்படுத்தலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் கிர்லோஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வாக்காளர் அடையாள அட்டை பாராளுமன்ற தேர்தல் வருகிற 24-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள அனைவரும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, அனுமதி அளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்பட சீட்டு, மாற்று புகைப்பட அடையாள ஆவணங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவின் போது, வாக்காளர்கள் தங்களுடைய அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை பயன்படுத்த வேண்டும். அதனை அளிக்க இயலாத வாக்காளர்களும், புகைப்படம் பொருந்தாததால் வாக்காளரின் அடையாளத்தை மெய்ப்பிக்க இயலாதவர்களும், தங்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக 11 வகை யான ஆவணங்களை பயன்படுத்தலாம்.
ஆதார் அட்டை அதாவது கடவுச்சீட்டு,
ஓட்டுனர் உரிமம்,
மத்திய மற்றும் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால், வரையறுக்கப்பட்டுள்ள பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்,
வங்கி மற்றும் அஞ்சலக கணக்கு புத்தகங்கள்,
நிரந்தர கணக்கு எண் அட்டை (பேன் கார்டு),
ஆதார் அட்டை,
தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட
ஸ்மார்ட் அட்டை,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் பணி அட்டை,
தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் அட்டை,
புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் மற்றும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அனுமதி அளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்பட சீட்டு ஆகிய மாற்று ஆவணங்களில் ஏதாவது ஒன்றை அளிக்க வேண்டும்.
மேலும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையால் வாக்காளரின் அடையாளம் மெய்ப்படுகின்ற போது, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள அச்சுப்பிழைகள் மற்றும் எழுத்து பிழைகள் ஆகியவற்றை பொருட்படுத்த தேவையில்லை. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...