உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 3 முஸ்லிம் இளைஞர்களை நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்து விடுதலைச் செய்துள்ளது.
தீவிரவாத குற்றம் சுமத்தி சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் நிரபராதிகள் என்பது தெளிவானதின் அடிப்படையில் லக்னோவில் உள்ளூர் நீதிமன்றம் இவர்களை விடுவித்துள்ளது.இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்தது. டாக்டர் ஸய்யித் அப்துல் முபீன், கலீம் அக்தர்,குல்சார் அஹ்மத் வானி ஆகிய 3 முஸ்லிம் இளைஞர்கள் நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிமி இயக்க உறுப்பினர் ஷிப்லி பேகை சாட்சியாக மாற்றி கட்டாய வாக்குமூலம் பெற்ற கைஸர்பாக் போலீஸ் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ், இவர்கள் மீது வழக்குப் பதிவுச் செய்தார். அலிகர் பல்கலைக் கழகத்தில் மருத்துவ மாணவராக பயின்றுக்கொண்டிருக்கும்போதுதான் ஸய்யித் முபீனை உ.பி போலீஸ் கைதுச் செய்தது.முதலில் ஆக்ரா குண்டுவெடிப்பு வழக்கில் முபீன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.பின்னர் அதில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
பாராபங்கி,கான்பூர், லக்னோ குண்டுவெடிப்புகளின் குற்றமும் முபீன் மீது சுமத்தப்பட்டது.கலீம் அக்தர்
லக்னோ குண்டுவெடிப்பு வழக்கில் மட்டும் குற்றம் சாட்டப்பட்டார்.2001-ஆம் ஆண்டு வெடிப்பொருட்களுடன் பிடிப்பட்ட தீவிரவாதி என்று குல்சார் அஹ்மத் வானியை உ.பி போலீஸ் கூறியது. 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி சுதந்திரத்தினத்தன்று லக்னோவில் உ.பி சட்டப்பேரவை தலைமையகம் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.இச்சம்பவத்தில் யாரும் காயமடையவோ, மரணிக்கவோ இல்லை. கார்கில் அருகே சங்கு என்ற கிராமத்தில் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்தபோது கலீம் அக்தர் கைதுச் செய்யப்பட்டார்.அப்பொழுது அவர் பணியில் சேர்ந்து 6 மாதமே முடிந்திருந்தது.
வகுப்பு நடத்திக்கொண்டிருக்கும்போது தலைமை ஆசிரியரின் அறைக்கு தன்னை அழைப்பதாகவும், சில போலீஸ் அதிகாரிகள் காத்திருப்பதாகவும் ப்யூன் தகவல் அளித்தபோது, அது தனது வாழ்க்கையை இவ்வளவு தூரத்துக்கு அழைத்துச் செல்லும் என கருதவில்லை என்று கலீம் ஒரு தீய கனவைப் போல தனது பழைய சம்பவங்களை நினைவுக் கூறுகிறார்.அப்பொழுது கலீமுக்கு 23 வயது.தலைமை ஆசிரியரின் அறையில் எஸ்.பி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். பின்னர் கலீம் போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டார்.விசாரனை, சித்திரவதை எல்லாம் நடந்தது.இதற்கெல்லாம் அவர்கள் ஒரு நியாயத்தை அவர்கள் வைத்திருந்தார்கள்.காரணம், கலீம் ஒரு சிமி இயக்க உறுப்பினர்.பல தினங்கள் கடந்தபோதும் கலீமுக்கு தன் மீது சுமத்தப்பட்ட குற்றம் என்ன? என்பதுக்குறித்து எதுவும் தெரியாது.பின்னர் கார்கில் முதன்மை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் முன்பாக ஆஜர்ப்படுத்தப்பட்டார்.அப்பொழுதுதான் தான் கைதுச் செய்யப்பட்டது லக்னோ குண்டுவெடிப்பு வழக்கில் என்பது கலீமுக்கு தெரியவந்தது.
ஆனால், அப்பொழுது கலீம் கைதுச் செய்யப்பட்டு பல மாதங்கள் கழிந்து விட்டது.சிமி உறுப்பினர் என்ற காரணத்தால் கலீம் போலீசால் வேட்டையாடப்பட்டார்.ஆனால், கலீம் கைதுச் செய்யப்பட்டு ஒரு ஆண்டு கழிந்த பிறகே சிமி இயக்கம் தடைச் செய்யப்பட்டது.ஒரு வருட சிறை வாசத்திற்கு பிறகு ஜாமீன் கிடைத்தது.ஆனால், இரண்டு வாரத்திற்கு ஒரு முறை நீதிமன்றம் கலீமை அழைத்தது.ஜாமீன் மனுவை திரும்பப் பெறக்கோரி அவரது குடும்பத்தினரை போலீஸ் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் கொடுமைப் படுத்துவது வழக்கமாக இருந்தது என்று கலீம் தெரிவித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...