Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 07, 2010

எச்சரிக்கை! தேவை ஒற்றுமை

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருவிடைச்சேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதாங்கலாக் ரமழான் இரவுத் தொழுகை அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் வழக்கம் போல் நடந்து வருகின்றது.

தொழுகை நடைப்பெறும் இடம் சம்பந்தமாக இரு பிரிவினருக்கும் ஏற்பட்ட சிறிய சலசலப்பு, துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யும் அளவுக்கு போனது மிகவும் வேதனையான செய்தி. தொழும் இடம் தொடர்பாக நம்மவர்கள் அடித்துக்கொண்டு கொலை செய்துக்கொண்டார்கள் என்று ஒவ்வொரு வினாடியும் எண்ணும் போது கண்ணீர் வராமல் இல்லை.

இந்த துப்பாக்கிச்சூட்டில் ஜமாத் தலைவர் முகமது இஸ்மாயில், கமிட்டி உறுப்பினர் ஹச்முகமது ஆகிய இருவர் இறந்துள்ளார்கள்.

5 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த ஐந்து பேரில் 3 பேர் சமாதானத்திற்கு சென்ற இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது இணையதளங்களில் பரபரப்பு செய்தியாக இருந்தது, இந்த துப்பாக்கி சூட்டிற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ததஜ தலைவர் அவர்களின் விளக்கம் தமிழக முஸ்லீம்கள் மத்தியில் கொஞ்சம் பதட்டதை தனித்திருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை.

முஸ்லீம்களின் சம்பவங்களை வழக்கம் போல் நம் தமிழ் செய்தி ஊடகங்கள் உண்மை செய்தியை போடாமல் மேலோட்டமான செய்தியை போட்டு நம்மவர்களிடம் குழப்பத்தையும், கலவரத்தையும் தூண்ட முயன்று வருகிறார்கள். நாம் நம்முடைய கலிமாவால் முஸ்லீம்கள் என்பதை அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும்.

ரமழான் மாதத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் என்பதால் உயிரழந்த அச்சகோதரர்களின் குடும்பங்கள் நிச்சயம் எல்லையற்ற கவலையில் மூழ்கி இருப்பார்கள். அல்லாஹ் அக்குடும்பங்களுக்கு மன நிம்மதியையும், பொருமையையும் தந்தருள்வானாக. ஆமீன். காயம் பட்ட சகோதரர்கள் விரைவில் குணமடைய செய்ய அல்லாஹ்விடம் நாம் அனைவரும் துஆ செய்வோமாக

தமிழகத்தில் அனைத்து முஸ்லீம் ஊர்களிலும் தொழுகை நடத்துவதில் பிரச்சினைகள் இருந்து வருகிறது. கவுரவத்தையும், பிடிவாதத்தையும் விட்டுக்கொடுத்து ஒருவருக்கு ஒருவர் சகோதரத்துவத்தை பேணி வாழ இப்புனித ரமழானின் கடைசி நாட்களின் அல்லாஹ்விடம் அழுது அழுது துஆ செய்வோமாக.

இயக்க பேதம் அறவே மறப்போம், நாம் எல்லோரும் முஸ்லீம்கள் என்ற சிந்தனையுடன் இனிய உறவு வளர்ப்போம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...