Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 29, 2010

வீராணம் பாசன பகுதிகளில் சம்பா நடவு பணி துவங்கியது

காட்டுமன்னார்கோவில் :காட்டுமன்னார்கோவில் வடவாறு மற்றும் வீராணம் பாசன பகுதிகளில் சம்பா நெல் நடவு பணி துவங்கியது.காவிரி கடைமடையான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகள் மேட்டூர் தண்ணீரை நம்பியே பயிர் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த ஆண்டு மேட் டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் குறைந்த அளவே தண்ணீர் வந்தது.எப்போதும் 8 அடி நிரம்பும் கீழணை 5 அடி மட்டுமே நிரம்பியது. விவசாயிகளின் தேவை கருதி ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி கீழணையில் இருந்து வீராணத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

ஆரம்பத்தில் குறைவாக திறக்கப்பட்ட தண்ணீர் வடவாறு விவசாயிகளுக்கே போதாத நிலையில் வீராணம் வந்து சேர்வதில் சிக்கல் ஏற்பட்டது.அடுத்த சில நாட்களில் பெய்த மழையால் வடவாற்றின் வழியாக விராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அதற்குள்ளாகவே மோட்டார் வசதி உள்ள வடவாற்றங் கரை, வீராணம் பாசன விவசாயிகள் உழவு ஓட்டி தயார் நிலையில் இருந்தனர். வீராணம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்தவுடன் 3ம் தேதி பாசனத் திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற் போதைய நிலையில் 669 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக வழங்கப் பட்டு வருகிறது.அதனைத்தொடர்ந்து வடவாறு மற்றும் வீராணம் பாசன விவசாயிகள் சம்பா நடவு பணியில் தீவிரம் காட்டி வந்தனர். உழவு பணிகள் முடிந்த நிலையில் தற்போது நாற்று நடும் பணியை துவங்கியுள்ளனர்.

குறிப்பாக வடவாற்றங்கரை பகுதிகளான கஞ்சங்கொல்லை, ஷண் டன், ஈச்சம்பூண்டி, சிறுகாட்டூர், பூவிழந்தநல்லூர், ரங்கநாதபுரம், கண்டமங்கலம் உள்ளிட்ட 20க்கும் மேற் பட்ட கிராமங்களிலும், வீராணம் பாசன பகுதிகளான குமராட்சி, திருநாரையூர், சிறகிழந்தநல்லூர், மேலபருத்திக்குடி, கீழப்பருத்திக்குடி, மெய்யத்தூர், புத்தூர், உத்தமசோழகன்,கொள்ளுமேடு,லால்பேட்டை, உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய பணிகள் நடந்து வருகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...