சிதம்பரத்தில் தொலைந்து போன ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.74 ஆயிரம் பணத்தை எடுத்த மர்ம ஆசாமிகளை போலீஸôர் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
சிதம்பரம் எஸ்.ஆர்.நகரைச் சேர்ந்தவர் ஜெயபாலன் (72). ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரியான இவரது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம் கார்டு தொலைந்து போனது. இந்த கார்டினல் ரகசிய குறியீட்டு நம்பரை எழுதி வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில் திங்கள்கிழமை வங்கிக்கு சென்று தனது கணக்கு குறித்து மாதாந்திர பட்டியலை பெற்ற போது கடந்த 13-ம் தேதி முதல் குறிஞ்சிப்பாடியில் உள்ள ஒரு வங்கியின் ஏடிஎம் மையத்திலிருந்து 9 முறை ரூ.74 ஆயிரம் ரொக்கம் எடுக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றார்.
பின்னர் இதுகுறித்து ஜெயபாலன் சிதம்பரம் நகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸôர் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...