Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 06, 2010

கூடுதல் ஹஜ் பயணிகளுக்கு அனுமதி


கூடுதல் ஹஜ் பயணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற முதல் அமைச்சர் கருணாநிதியின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது.
முஸ்லிம் மக்கள், ஆண்டு தோறும் மெக்கா, மதீனாவுக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள்.இந்த பயணத்தை தங்கள் வாழ்நாள் கடமையாகக் கொண்டுள்ளதால்,ஆண்டுக்கு ஆண்டு பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.


இந்த ஆண்டுக்கு, தமிழ் நாட்டில் இருந்து புனித ஹஜ் பயணத்துக்கு 2994 பேருக்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது.இந்த நிலையில், ``தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும், ஏராளமானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும், எனவே, ஹஜ் பயணத்துக்கு, கூடுதல் இடம் ஒதுக்கவேண்டும்'' என்று,மத்திய அரசுக்கு,முதல்-அமைச்சர் கருணாநிதி கோரிக்கை வைத்தார்.

அவருடைய கோரிக்கையை மத்திய அரசு ஏற்று,கடந்த 31-ந் தேதி கூடுதலாக 399 பேருக்கு அனுமதி அளித்தது. இதற்கிடையே, மேலும் கூடுதலாக 74 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு, மத்திய அரசு நேற்று அனுமதி அளித்து உள்ளதாக, இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத்தலைவர் `பிரசிடெண்ட்' அபூபக்கர் தெரிவித்தார்.

புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு கூடுதல் இடம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்த தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும், மத்திய அரசு மற்றும் சவூதி அரசுக்கும், `பிரசிடெண்ட்' அபூபக்கர் நன்றி தெரிவித்து உள்ளார்.

Source: தினத்தந்தி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...