Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 08, 2010

கோலார் தங்கச்சுரங்கம் மீண்டும் திறக்கப்படுகிறது.

2001ஆம் ஆண்டு மூடப்பட்ட்ட கர்நாடகா மாநிலத்தின் கோலார் தங்கச்சுரங்கம் மீண்டும் திறக்கப்படுகிறது.

கர்நாடக மாநிலம் கோலாரில் 121 ஆண்டுகளாக தங்க சுரங்கம் செயல்பட்டு வந்தது. தங்கம் உற்பத்தி குறைவாக இருந்ததால் நஷ்டத்தில் செயல்பட்டு வந்ததையடுத்து 2001-ம் ஆண்டு மூடப்பட்டது.

இதை எதிர்த்து சுரங்க தொழிலாளர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சுரங்கத்தை மீண்டும் திறக்க முடியுமா? என்று ஆய்வு செய்யும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு குழுக்களை அமைத்து ஆய்வு செய்தது. சுமார் 30 லட்சம் டன் தங்கம் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் கோலார் தங்க சுரங்கத்தை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...