Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 09, 2010

இந்தியாவில் 65 கோடி பேரிடம் செல்போன்: ஒரே மாதத்தில் 1.7 கோடி அதிகரிப்பு

இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. ஜூலை மாதம் இறுதி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 65 கோடியே 24 லட்சம் பேரிடம் செல்போன் இருக்கிறது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டுமே 1 கோடியே 70 லட்சம் பேர் புதிதாக செல்போன் இணைப்பு பெற்று உள்ளனர்.

நாட்டில் உள்ள தரை வழி போனையும் சேர்த்து மொத்தம் 68 கோடியே 80 லட்சம் போன் இணைப்புகள் உள்ளன.

ஒட்டுமொத்த கணக்கின் படி 100 பேருக்கு 58.17 பேரிடம் போன் இருக்கிறது.

நாட்டிலேயே ஏர்டெல் நிறுவனம்தான் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்த நிறுவனம் 13 கோடியே 90 லட்சம் இணைப்புகள் வழங்கி உள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தில் 11 கோடியே 30 லட்சம் வாடிக்கையாளர்களும் வோடா போன் நிறுவனத்தில் 11 கோடியே 10 லட்சம் வாடிக்கையாளர்களும் உள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...