Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 30, 2010

மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் பேட்டி



கடலூர் :அயோத்தி பிரச்னை குறித்து தீர்ப்பு வர இருப்பதையொட்டி கடலூர் மாவட்டத்தில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எஸ்.பி.,அஷ்வின் கோட்னீஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அயோத்தி வழக்கின் தீர்ப்பையொட்டி கடலூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்காக எனது தலைமையில் ஒரு ஏ.டி.எஸ்.பி., 7 டி.எஸ்.பி., 30 இன்ஸ்பெக்டர்கள், 100 எஸ்.ஐ., க்கள், 300 சிறப்பு எஸ்.ஐ.,க்கள், 800 தலைமைக் காவலர்கள், காவலர்கள், 150 ஆயுதப்படை போலீசார், 100 பயிற்சி போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
வழிபாட்டுத்தலங்கள், பஸ் நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், முக்கிய சாலைகள் என 80 இடங்கள் அடையா ளம் காணப்பட்டுள்ளன. உட் கோட்டம் தோறும் சிறப்பு வாகன ரோந்து பணிக்கு மொத்தம் 20 வாகனங்கள் இயக்கப்பட உள்ளன. இவ்வாகன ரோந்து நெடுஞ்சாலைகள், மாநில சாலைகள், இதர சாலைகளில் மேற்கொள்ளப்படும்.

ரயில்பாதை, ரயில் நிலையங் களை கூடுதல் போலீசார் கண்காணிப் பார்கள். 10 சிறப்பு அதிரடிப்படை வாகனங்கள் இயக்கப்படவுள்ளது. ஒவ்வொரு சிறப்பு அதிரடிப்படையிலும் சப் இன்ஸ் பெக்டர் தலைமையில் 10 போலீசார் இருப்பார்கள். இதுமட்டுமல்லாமல் எல்லைப் பகுதியில் நெடுஞ் சாலைகளில் மொத் தம் 27இடங்களில் வாகன சோதனைச்சாவடி செயல்படும்.

இரவு முதல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.மாவட்டத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு, செயலிழப்பு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே போலீஸ், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு பெரும் சமுதாய அமைப்புகளான இந்து மற்றும் முஸ்லிம் முக்கிய தலைவர்களை அழைத்து கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதில் இரு தரப்பினரும் தீர்ப்பு எப்படி இருப்பினும் அமைதி காப்பதென உறுதி கூறியுள்ளனர். எனவே யாரும் வெற்றி கொண்டாடுவதாக இனிப்பு வழங்குவதோ, அவதூறு பரப்புவதோ, எஸ். எம்.எஸ்., அனுப்புவதோ கூடாது. இவ்வாறு எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறினார்.

அயோத்தி இடம் பிரச்னை தொடர் பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப் பட உள்ளதையொட்டி மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான கடலூரில் டி.எஸ்.பி., கிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பிரசன்னகுமார், கோபால், ஏழுமலை, ஆரோக்கியராஜ் மற்றும் ஆயுதம் தாங்கிய போலீசார் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையத்திலிருந்து மஞ்சக்குப்பம், நெல்லிக்குப்பம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தினர். பரங்கிப்பேட்டை: டி.எஸ்.பி., சிவனேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் கொடி அணி வகுப்பு நடத்தினர்.

காட்டுமன்னார்கோவில்: சேத்தியாத் தோப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பிரபாகரன், 17 சப் இன்ஸ்பெக்டர் உட்பட 65 போலீசார் லால்பேட்டை கைகாட்டியில் இருந்து கொடி அணிவகுப்பு நடத்தினர்.
நமதூரில் போலிஸ் பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...