Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 30, 2010

வீராணம் கரைகளில் முள் செடிகள் அகற்றம்

காட்டுமன்னார்கோவில் : வீராணம் ஏரிக் கரையில் முள் செடிகள் அகற்றும் பணிகள் அசுர வேகத்தில் நடந்து வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரியின் கீழ் கரையில் முள் செடிகள் வளர்ந்து கரைகள் பலவீனமாகும் சூழல் உருவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து சிதம்பரம் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் செல்வராஜ் உத்தரவின் பேரில் நேற்று காலை முதல் தடுப்பு சுவர்களில் உள்ள முள் செடிகள் அகற் றும் பணி துவங்கியது. சிதம்பரம், லால் பேட்டை, புவனகிரி, சேத் தியாத்தோப்பு, அணைக் கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் பாசன உதவியாளர்கள் மற் றும் 100க்கும் மேற்பட்ட பொதுப்பணித் துறை பணியாளர்கள் முட்புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வீராணம் உதவி பொறியாளர் சரவணன் கூறுகையில், "வீராணம் கரைகளில் அமைந்துள்ள லால் பேட்டையில் இருந்து சேத்தியாத்தோப்பு வரை உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களான லால் பேட்டை, திருச்சன்னபுரம், கொள்ளுமேடு, கந்தகுமாரன், கலியமலை, பரிபூரணநத்தம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இப்பணிகள் நடைபெறும். 14 கி.மீ., தூரம் முழுவதும் 15 நாட்களுக்குள் அகற்றப்படும். இன்று முதல் புல்டோசர் உதவியுடன் பணிகள் நடைபெறும்' என்றார். இதுபோன்ற பணிகளை அவ்வப்போது செய்து வந்தால் கரைகளை பாதுகாப்பது மட்டுமில்லாமல் குறைவான ஆட்களைக் கொண்டு பணியாற்ற முடியும்.

மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் பேட்டி



கடலூர் :அயோத்தி பிரச்னை குறித்து தீர்ப்பு வர இருப்பதையொட்டி கடலூர் மாவட்டத்தில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எஸ்.பி.,அஷ்வின் கோட்னீஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அயோத்தி வழக்கின் தீர்ப்பையொட்டி கடலூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்காக எனது தலைமையில் ஒரு ஏ.டி.எஸ்.பி., 7 டி.எஸ்.பி., 30 இன்ஸ்பெக்டர்கள், 100 எஸ்.ஐ., க்கள், 300 சிறப்பு எஸ்.ஐ.,க்கள், 800 தலைமைக் காவலர்கள், காவலர்கள், 150 ஆயுதப்படை போலீசார், 100 பயிற்சி போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
வழிபாட்டுத்தலங்கள், பஸ் நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், முக்கிய சாலைகள் என 80 இடங்கள் அடையா ளம் காணப்பட்டுள்ளன. உட் கோட்டம் தோறும் சிறப்பு வாகன ரோந்து பணிக்கு மொத்தம் 20 வாகனங்கள் இயக்கப்பட உள்ளன. இவ்வாகன ரோந்து நெடுஞ்சாலைகள், மாநில சாலைகள், இதர சாலைகளில் மேற்கொள்ளப்படும்.

ரயில்பாதை, ரயில் நிலையங் களை கூடுதல் போலீசார் கண்காணிப் பார்கள். 10 சிறப்பு அதிரடிப்படை வாகனங்கள் இயக்கப்படவுள்ளது. ஒவ்வொரு சிறப்பு அதிரடிப்படையிலும் சப் இன்ஸ் பெக்டர் தலைமையில் 10 போலீசார் இருப்பார்கள். இதுமட்டுமல்லாமல் எல்லைப் பகுதியில் நெடுஞ் சாலைகளில் மொத் தம் 27இடங்களில் வாகன சோதனைச்சாவடி செயல்படும்.

இரவு முதல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.மாவட்டத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு, செயலிழப்பு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே போலீஸ், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு பெரும் சமுதாய அமைப்புகளான இந்து மற்றும் முஸ்லிம் முக்கிய தலைவர்களை அழைத்து கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதில் இரு தரப்பினரும் தீர்ப்பு எப்படி இருப்பினும் அமைதி காப்பதென உறுதி கூறியுள்ளனர். எனவே யாரும் வெற்றி கொண்டாடுவதாக இனிப்பு வழங்குவதோ, அவதூறு பரப்புவதோ, எஸ். எம்.எஸ்., அனுப்புவதோ கூடாது. இவ்வாறு எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறினார்.

அயோத்தி இடம் பிரச்னை தொடர் பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப் பட உள்ளதையொட்டி மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான கடலூரில் டி.எஸ்.பி., கிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பிரசன்னகுமார், கோபால், ஏழுமலை, ஆரோக்கியராஜ் மற்றும் ஆயுதம் தாங்கிய போலீசார் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையத்திலிருந்து மஞ்சக்குப்பம், நெல்லிக்குப்பம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தினர். பரங்கிப்பேட்டை: டி.எஸ்.பி., சிவனேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் கொடி அணி வகுப்பு நடத்தினர்.

காட்டுமன்னார்கோவில்: சேத்தியாத் தோப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பிரபாகரன், 17 சப் இன்ஸ்பெக்டர் உட்பட 65 போலீசார் லால்பேட்டை கைகாட்டியில் இருந்து கொடி அணிவகுப்பு நடத்தினர்.
நமதூரில் போலிஸ் பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது.

ஐ.நா இரட்டைவேடம் போடுவதை நிறுத்தவேண்டும்: சவூதி அரேபியா

நியூயார்க்,செப்.30:பிரகடனங்களை நிறைவேற்றுவதில் இரட்டைவேடம் போடுவதை ஐ.நா நிறுத்த வேண்டும் என சவூதிஅரேபியா கோரியுள்ளது.

பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதை தடுப்பதில்தான் சில நிரந்தர உறுப்பினர்கள் அவர்களுடைய வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவதாக ஐ.நாவின் 65-வது மாநாட்டில் சவூதி வெளியுறவுத்துறை அமைச்சர் சவூத் அல் ஃபஸல் குற்றஞ்சாட்டினார்.

மேலும் அவர் கூறியதாவது: "அரபு-இஸ்ரேல் உறவு அமைதியாக மாற்றுவதற்கு, 1967-இல் இஸ்ரேல் ஆக்கிரமித்த அரபு பிரதேசங்களிலிருந்து யூதர்கள் வெளியேறவேண்டும் என்ற ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

சர்வதேச சட்டங்களையும், ஐ.நாவின் தீர்மானங்களையும், ஃபலஸ்தீனர்களின் உரிமைகளையும் இஸ்ரேல் மதித்து நடக்கவேண்டும்.

எல்லா குடியேற்றங்களிலிருந்தும் அவர்கள் வாபஸ்பெற வேண்டும். குடியேற்றங்கள் தொடர்ந்தால் தற்பொழுது நடைபெறும் பேச்சுவார்த்தை பயனற்றதாகும். நம்பிக்கையை நிலைநாட்டும் விதமான நடவடிக்கைகளை ஐ.நா மேற்கொள்ளவேண்டும். தேவையில்லாமல் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தும் உறுப்பு நாடுகளை ஐ.நா தடுக்கவேண்டும்.

ஐ.நாவின் பொருளாதார-சமூக கவுன்சிலை வலுப்படுத்த வேண்டும். உலக அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது இஸ்ரேல்-ஃபலஸ்தீன் பிரச்சனை.

காலனியாதிக்கத்திற்கு சமமானது இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு. அப்பகுதியின் சமாதான நடவடிக்கைகளுக்கு அரபு நாடுகளின் பரிபூரண ஆதரவு உண்டு.

அணுசக்தி திட்டங்கள் மீதான சந்தேகங்களை போக்க ஈரான் பயன்தரத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அணுஆயுத பரவல் தடைச்சட்டத்தில் கையெழுத்திடாத இஸ்ரேலின் நிலைப்பாடு எங்களை நிம்மதியிழக்கச் செய்கிறது." இவ்வாறு அவர் உரை நிகழ்த்தினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்&பாலைவனத் தூது

செப்டம்பர் 29, 2010

மனைகளாக மா‌‌றி வரு‌ம் ‌விளை‌நில‌ங்க‌‌ள்!



த‌மிழக‌த்‌தி‌ல் த‌‌ற்போது பு‌த்து‌யி‌ர் பெ‌ற்று‌ வரு‌ம் ஒரே தொ‌ழி‌ல் ‌ரிய‌ல் எ‌ஸ்‌டே‌ட் தொ‌ழி‌ல். இ‌ந்த தொ‌ழி‌லி‌ல் ஈடுபவ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌‌க்கை நாளு‌க்கு நா‌ள் அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது. பெரு‌ம் பண‌ம் கொ‌ண்ட முதலைக‌ள் இ‌ந்த தொ‌ழி‌லி‌ல் கொடி க‌ட்டி பற‌ந்து வரு‌கி‌ன்றன‌ர்.

இ‌தி‌ல் கொடுமை எ‌ன்னவெ‌ன்றா‌ல் ‌வடநா‌ட்டினரு‌ம், பெரு‌ம் பண முதலைகளு‌ம் ‌விளை‌நில‌ங்களை அ‌ழி‌த்து ‌மனைகளாக மா‌‌ற்‌றி வரு‌‌கி‌ன்றன‌ர். இதனா‌ல் ‌விவசாய‌த்தை ந‌ம்‌பியு‌ள்ள ‌கிராம‌த்‌தின‌‌ரி‌ன் ‌நிலை கே‌ள்‌வி‌க்கு‌றியாக உ‌ள்ளது.

செ‌ன்னை முத‌ல் கும‌ரி வரை ‌விளை‌நி‌ல‌ங்களை மனைகளாக ஆ‌க்‌கி வரு‌ம் இ‌ந்த‌ப் பண முதலைக‌ள், ஏ‌ழ்மை‌யி‌ல் இரு‌ப்பவ‌ர்களை கு‌றிவை‌த்து அவ‌ர்க‌ளிட‌ம் பண ஆசை கா‌ட்டி குறை‌ந்த ‌விலை‌‌யி‌ல் ‌‌விளை‌நில‌ங்களை பெ‌ற்று‌ம் வ‌ரு‌கி‌ன்றன‌ர்.

த‌மிழ‌க‌த்‌தி‌ல் தொ‌‌‌ழி‌ல் தொட‌ங்க வரு‌ம் அய‌ல்நா‌ட்டு ‌நிறுவன‌ங்‌க‌ளு‌க்கு அரசு கு‌றி‌ப்‌பி‌‌ட்ட இ‌ட‌ங்க‌ளி‌ல் ‌நில‌ங்களை ஒது‌க்‌கி கொடு‌க்‌கிறது. இது ‌விளை‌நில‌ங்க‌ள் எ‌ன்று கூ‌றி எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள் போரா‌ட்ட‌ம் நட‌த்து‌கி‌ன்றன. இதனா‌ல் அ‌ந்த ‌நில‌ங்களை ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட ‌நிறுவன‌ங்களு‌க்கு ஒது‌க்குவ‌தி‌ல் த‌மிழக அரசு ‌பி‌ன்வா‌‌ங்‌கி ‌விடு‌கிறது.

த‌ற்போது செ‌ன்னை‌யி‌ல் ‌‌விமான ‌நிலைய ‌‌வி‌‌ரிவா‌க்க‌த்த‌ி‌ல் ‌நில‌ங்க‌ளை கையக‌ப்படு‌த்த எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌‌வி‌த்து பொதும‌க்க‌ள் ‌மிக‌ப்பெ‌ரிய போரா‌ட்டமே நட‌‌த்‌தின‌ர். இதனா‌ல் அ‌ந்த ‌நில‌ங்களை கையக‌ப்படு‌த்துவ‌தி‌ல் இரு‌ந்து அரசு ‌பி‌ன்வா‌ங்‌கியது. த‌ற்போது த‌மிழக‌த்‌தி‌ல் அய‌ல்நா‌ட்டு சு‌ற்றுலா‌ப் பய‌ணிகளை பெ‌ரிது‌ம் கவரு‌ம் கொடை‌க்கான‌‌லிலு‌ம் இதே ‌நிலை தொட‌ர்‌ந்து வரு‌கிறது.

மலைக‌ளி‌ன் இளவர‌சி எ‌ன்று வ‌ர்‌ணி‌க்க‌ப்படு‌ம் கொடை‌க்கான‌ல் ச‌ர்வதேச சு‌ற்றுலா தல‌ங்க‌ளி‌ல் ஒ‌ன்றாகு‌ம். இய‌ற்கை எ‌‌ழி‌ல் கொ‌ஞ்சு‌ம் கொடை‌க்கான‌லு‌க்கு வரு‌ம் சு‌ற்றுலா‌ப் ப‌ய‌ணிகளை ம‌‌ட்டும‌ல்ல ‌ரிய‌ல் எ‌‌ஸ்ட‌ே‌ட் சுயதொ‌‌‌ழி‌லி‌ல் ஈடுபடுவோரையு‌ம் பெ‌‌ரிது‌ம் க‌வ‌‌ர்‌ந்து‌ள்ளது எ‌ன்றா‌ல் அது ‌மிகையாகாது.

பெரு‌ம் பண‌ம் முதலைகளு‌ம், வடநா‌ட்டினரு‌ம், ‌ரிய‌ல் எ‌ஸ்டே‌ட் துறை‌யினரு‌ம் கொடை‌க்கான‌லி‌ல் உ‌ள்ள ‌விளை‌‌நில‌ங்களை வா‌ங்‌கி ‌பிளா‌ட்டுகளாக ‌மா‌ற்‌றி வருவதா‌ல் விவசா‌யிக‌ள் அ‌தி‌‌ர்‌ச்‌சி அடை‌ந்து‌ள்ளன‌ர்.

''கட‌ந்த 10 ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு இ‌‌ந்த இட‌ங்க‌ளி‌ல் ந‌‌ன்றாக ‌விவசா‌ய‌ம் நட‌ந்து வ‌ந்து‌க் கொ‌‌ண்டிரு‌ந்தது. த‌ற்போது அ‌ந்த இட‌ங்களை ‌பிளா‌ட் போ‌ட்டு ‌வி‌ற்பனை செ‌ய்து ‌வி‌ட்டதா‌ல் ‌விவசாய‌ம் செ‌ய்வத‌ற்கே இட‌ம் இ‌ல்லை'' எ‌ன்று ‌விவசா‌யிக‌ள் புல‌ம்பு‌ம் ‌நிலை‌க்கு த‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

பூ‌ண்டு, கேர‌ட், உருளை‌கிழ‌ங்கு போ‌ன்ற ‌ப‌யி‌ர்க‌ளி‌ன் ‌‌விவசாய‌ம் ந‌லிவடை‌ந்து வருவதாக கவலை தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ள ‌விவசா‌யிக‌ள், அதே ‌நிலை ‌நீ‌டி‌த்தா‌ல் இ‌ன்னு‌ம் ‌சில ஆ‌ண்டுக‌ளி‌ல் ‌‌ப‌யி‌ர் செ‌ய்ய ‌நிலமே இ‌ல்லாத ‌நிலை ஏ‌ற்ப‌ட்டு ‌விடு‌ம் எ‌ன்று வேதனையுட‌ன் கூறு‌கி‌ன்றன‌ர்.

ந‌ல்ல ‌விளை‌‌நில‌ங்க‌ள் ‌விவசாய‌த்‌தி‌ற்கு உக‌ந்தது அ‌ல்ல எ‌ன்று போ‌லியாக சா‌ன்று பெ‌ற்று ‌நில‌‌ங்க‌ளை கைய‌ப்படு‌த்த‌ப்படுவதாகவு‌ம், ப‌ச்சைபசே‌ல் எ‌ன்று காண‌ப்படு‌ம் ‌நில‌ங்க‌ள் எ‌ல்லா‌ம் ‌வீ‌ட்டு மனைகளாகவு‌ம், குடி‌யிரு‌ப்பு க‌ட்டிட‌ங்களாகவு‌ம் மா‌‌றி வருவது கவலை அ‌ளி‌ப்பதாக சமூக ஆ‌ர்வல‌ர்க‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர்.

பண பல‌த்தா‌ல் ‌வி‌திமுறைகளை ‌மீ‌றி ‌விளை ‌நில‌ங்களையு‌ம், வள‌ங்களையு‌ம் ஆ‌க்‌கிர‌மி‌க்கு‌ம் கு‌ம்ப‌ல் ‌மீது அரசு உடனடியாக நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பது ஒ‌ட்டுமொ‌த்த ‌விவசா‌‌யிக‌ளி‌ன் கோ‌ரி‌க்கையாகு‌ம்.

வீராணம் பாசன பகுதிகளில் சம்பா நடவு பணி துவங்கியது

காட்டுமன்னார்கோவில் :காட்டுமன்னார்கோவில் வடவாறு மற்றும் வீராணம் பாசன பகுதிகளில் சம்பா நெல் நடவு பணி துவங்கியது.காவிரி கடைமடையான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகள் மேட்டூர் தண்ணீரை நம்பியே பயிர் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த ஆண்டு மேட் டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் குறைந்த அளவே தண்ணீர் வந்தது.எப்போதும் 8 அடி நிரம்பும் கீழணை 5 அடி மட்டுமே நிரம்பியது. விவசாயிகளின் தேவை கருதி ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி கீழணையில் இருந்து வீராணத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

ஆரம்பத்தில் குறைவாக திறக்கப்பட்ட தண்ணீர் வடவாறு விவசாயிகளுக்கே போதாத நிலையில் வீராணம் வந்து சேர்வதில் சிக்கல் ஏற்பட்டது.அடுத்த சில நாட்களில் பெய்த மழையால் வடவாற்றின் வழியாக விராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அதற்குள்ளாகவே மோட்டார் வசதி உள்ள வடவாற்றங் கரை, வீராணம் பாசன விவசாயிகள் உழவு ஓட்டி தயார் நிலையில் இருந்தனர். வீராணம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்தவுடன் 3ம் தேதி பாசனத் திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற் போதைய நிலையில் 669 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக வழங்கப் பட்டு வருகிறது.அதனைத்தொடர்ந்து வடவாறு மற்றும் வீராணம் பாசன விவசாயிகள் சம்பா நடவு பணியில் தீவிரம் காட்டி வந்தனர். உழவு பணிகள் முடிந்த நிலையில் தற்போது நாற்று நடும் பணியை துவங்கியுள்ளனர்.

குறிப்பாக வடவாற்றங்கரை பகுதிகளான கஞ்சங்கொல்லை, ஷண் டன், ஈச்சம்பூண்டி, சிறுகாட்டூர், பூவிழந்தநல்லூர், ரங்கநாதபுரம், கண்டமங்கலம் உள்ளிட்ட 20க்கும் மேற் பட்ட கிராமங்களிலும், வீராணம் பாசன பகுதிகளான குமராட்சி, திருநாரையூர், சிறகிழந்தநல்லூர், மேலபருத்திக்குடி, கீழப்பருத்திக்குடி, மெய்யத்தூர், புத்தூர், உத்தமசோழகன்,கொள்ளுமேடு,லால்பேட்டை, உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய பணிகள் நடந்து வருகிறது.

செப்டம்பர் 28, 2010

காமன்வெல்த் போட்டிக்கு ரூ.71 ஆயிரம் கோடி செலவு!!


காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி டெல்லியில் அக்டோபர் 3-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடக்கிறது. இந்தப்போட்டி குறித்து பல்வேறு சர்ச்சைகள் கிளப்பபட்டது.

அனைத்து பணியிலும் ஊழல், ஸ்டேடியத்தின் மேற்கூரை இடிந்தது, ஸ்டேடியத்துக்குள் நுழையும் நடை மேம்பாலம் இடிந்தது, விளையாட்டு கிராமத்தில் வசதியின்மை உள்பட பல் வேறு குளறுபடி கள் இருந்தது.

தற்போது சில பணிகளை தவிர பெரும்பாலான பணிகள் முடிந்து காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு டெல்லி தயாராகி விட்டது. போட்டி தொடங்க இன்னும் 7 தினங்கள் இருக்கிறது. காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான மொத்த செலவு ரூ.71 ஆயிரம் கோடி என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

2002-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தப்போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றது. அப்போது அந்தப் போட்டிக்கான பட்ஜெட் ரூ.655 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ.71 ஆயிரம் கோடி செலவழிக்கப்பட்டது. தொடக்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட செலவு தொகையைவிட இது 109 மடங்கு அதிகமாகும். ஒவ்வொரு பணியிலும் நிர்ணயித்த தொகையைவிட பல மடங்கு அதிகமாகி உள்ளது. துப்பாக்கி சூடும் ஸ்டேடியத்தை புதுப்பிக்க ரூ.13 கோடி ஒதுக்கப்பட்டது.

ஆனால் 13 மடங்கு அதிகமாகி ரூ.169 கோடி செலவானது. தொடக்க விழா, நிறைவு விழா மற்றும் தடகள போட்டிகள் நடைபெறும் நேரு ஸ்டேடியத்தை புதுப்பிக்க ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் அதற்கு ரூ.961 கோடி செலவானது. வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு ரூ.71 ஆயிரம் கோடி செலவழிக்கப்பட்டது. தேவைதானா என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

முதன் முறையாக வெற்றிலைக்கு அரசு மானியம்



தேனி, செப்.27 வெங்காயம், திராட்சை, வெற்றிலை, பாக்கு விளைவிக்க முதன்முறையாக அரசு மானிய உதவி வழங்கப்படுகிறது.

தோட்டக்கலைத்துறை சார்பில், பல்வேறு பயிர்களை விளைவிக்க மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன. நடப்பு ஆண்டு முதன் முறையாக வெங்காயம், திராட்சை, வெற்றிலை, பாக்கு விளைவிக்க மானிய உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திராட்சை விவசாயிகளுக்கு மொத்தம் 100 ஹெக்டேர் நிலத்திற்கு மானிய உதவிகள் வழங்கப்பட உள்ளது. இந்த 100 ஹெக்டேருக்கான ஒதுக்கீடும் தேனி மாவட்ட விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இத்திட்டத்தின் படி புதிதாக திராட்சை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு எக்டேருக்கு 50 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

இந்த மானியத் தொகை மூன்று ஆண்டுகளுக்கு பிரித்து வழங்கப்படும். வெங்காயம், வெற்றிலை, பாக்கு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 7,500 ரூபாய்க்கு இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளன.

கடலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

கடலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கால்நடை பராமரிப்புத் துறை மூலம், மத்திய அரசின் காப்பீட்டுப் பிரீமியத்தில் 50 சதவீத மானியத்துடன், கடலூர் மாவட்டத்தில் பசுக்கள் மற்றும் எருமை மாடுகளுக்கு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே கால்நடைகளை வளர்போர், தங்களிடம் உள்ள கிடேரிகள், கறவை மாடுகள், கருவுற்ற மாடுகள், பால் வற்றிய மாடுகள் அனைத்தையும் காப்பீடு செய்து கொள்ளலாம்.

கடலூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் மாடுகளுக்கு காப்பீடு செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மத்திய அரசின் 4 பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் காப்பீடு செய்யப்படும். இறக்கும் மாடுகள், நிரந்தரமாகக் கருத்தரிக்க வாய்ப்பு இல்லாத மாடுகள், விபத்தில் சிக்கும் மாடுகள் ஆகியவற்றுக்கு இத்திட்டத்தில் இழப்பீடு கிடைக்கும். மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள், தரம் உயர்த்தப்பட்ட கால்நடை கிளை நிலையங்கள் ஆகியவற்றில் உள்ள, கால்நடை மருத்துவர்களைத் தொடர்பு கொண்டு, மாடுகளுக்குக் காப்பீடு செய்து கொள்ளலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

செப்டம்பர் 27, 2010

பெட்ரோல் விலை உயர்வில் புதைந்துள்ள மர்மங்கள்..!

பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது. அந்த விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய்யின் விலை உயர்வையே காரணமாக அரசு காட்டுகிறது. ஆனால் முழுமையான காரணம் அதுவல்ல.

பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை விலையில், அரசு விதித்த வரிகளே பாதிக்கும் அதிகமாகும். வரி வசூல் மூலம் நிதி திரட்ட உகந்த ஒன்றாக பெட்ரோலை மத்திய மாநில அரசுகள் பயன்படுத்துகின்றன.

எல்லா நாடுகளும் பெட்ரோலியப் பொருட்களின் மீது வரி விதிக்கின்றன. ஜெர்மன், இந்தியா, பிரிட்டன் போன்ற நாடுகள் அதிக வரி விதிக்கும் நாடுகளாக இருக்கின்றன. ஆனால், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் நாடுகளே காரணம் என்று இவை கூறுகின்றன. ஆனால் உண்மை அதுவல்ல என்கின்றன எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடுகள்.

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஓபெக் 2004-2008 வரையிலான ஆண்டுகளில் தான் விற்பனை செய்த கச்சா எண்ணெயின் மதிப்பு 3,346 பில்லியன் அமெரிக்க டாலர். அதே காலக்கட்டத்தில் ஜி-7 என்னும் ஏழு நாடுகளின் அமைப்பில் அடங்கிய நாடுகள் பெட்ரோலியப் பொருட்கள் மீது விதித்த வரிகளின் மூலம் பெற்ற வருவாய் 3,418 பில்லியன் டாலர்கள் என்கிறது. அதாவது எண்ணெய் ஏற்றுமதி செய்த நாடுகளுக்குக் கிடைத்ததைவிட அந்த எண்ணெயின் மூலம் ஜி-7 நாடுகள் திரட்டிய வரி வருவாய் அதிகம்.

இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு நாம் கொடுக்கும் விலையில் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமாக வரிகளுக்கே செல்கிறது. கச்சா எண்ணெய்க்கு நுழைவு வரி, மாநிலங்கள் வசூலிக்கும் சுங்கம், துறைமுகக் கட்டணம், மாநிலங்கள் விதிக்கும் விற்பனை வரி(தமிழ்நாட்டில் இது 30 சதவிகிதம்) கல்வி வரி, மத்திய அரசின் விற்பனை வரி என்று பல வரிகளின் மூலமே பெட்ரோலின் விலை பூதாகாரமாக உயர்கிறது.

அரசு தனது சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்த வரி விதிப்பின் மூலம்தான் வருவாய் திரட்ட முடியும் என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. என்ன நோக்கங்களுக்காக வரி விதிப்பின் மூலம் வருவாய் திரட்டப்படுகிறதோ அந்த நோக்கம் நிறைவேற்றப்படுகின்றனவா?

உதாரணத்திற்கு, 1991-92ம் ஆண்டில் இருந்து எண்ணெய்த் தொழில் வாரியத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு விற்பனை வரியாக 84,337 கோடி ரூபாயைத் திரட்டியிருக்கிறது. ஆனால் எண்ணெய்த் தொழில் வளர்ச்சி வாரியத்திற்கு 902 கோடி ரூபாயை மட்டுமே தந்திருக்கிறது.

பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை மானிய விலையில் தந்து கொண்டிருப்பதாகவும், அதனால் எண்ணெய் நிறுவனங்களும், அரசும் நிதிச் சுமையைத் தாங்க நேரிடுவதாகவும் அடிக்கடி கூறப்படுகிறது. இதில் கொஞ்சமும் உண்மையில்லை. 2009-2010-ம் ஆண்டில் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலியத் துறையின் மூலம் வரிகள் மற்றும் சுங்கத் தீர்வைகள் வாயிலாக தங்களது கஜானாவிற்குக் கொண்டு சென்ற தொகை 1,83,861 கோடி ரூபாய்.

அதே 2009-2010-ல் பெட்ரோலிய நிறுவனங்களான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன்(ONGC) ரூ.16,767 கோடியும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ரூ.10,220 கோடியும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ரூ.1301 கோடியும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ரூ.1,837 கோடியும், ஆயில் இந்தியா நிறுவனம் ரூ.2,610 கோடியும் லாபம் ஈட்டியுள்ளன. இந்த நிறுவனங்களின் ஒட்டு மொத்த லாபம் ரூ.32,735 கோடி ரூபாய். இது இறுதியில் அறிவிக்கப்பட்ட லாபம். ஆனால் உண்மையான லாபம் இதைப் போல ஐந்து மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதே உண்மை. அந்தத் தொகை எங்கே போயிற்று..?

எண்ணெய் நிறுவனங்கள் மிகவும் ஆடம்பரமான செலவுகளைச் செய்கின்றன. அத்துடன் இந்த நிறுவன ஊழியர்களின் சம்பளம் வேறு எந்தத் துறையிலும் கற்பனை செய்ய முடியாதது.

உதாரணத்திற்கு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 15 வருட அனுபவம் பெற்ற சாதாரணத் தொழிலாளியின் வருடச் சம்பளம் 8,39,757 ரூபாய். எம்.காம். பட்டம் பெற்ற டிரைவர்களின் சம்பளம் வருடத்திற்கு 22 லட்சம் ரூபாய். கெஸ்ட் ஹவுஸ் பராமரிப்பாளர்(படித்தது 5-ம் வகுப்பு) பெறும் வருடச் சம்பளம் 8,56,731 ரூபாய். 8-ம் வகுப்பு மட்டுமே படித்து 1976-ல் வேலையில் சேர்ந்த அட்டெண்டரின் தற்போதைய சம்பளம் ஆண்டிற்கு 45,99,234 ரூபாய்.

எண்ணெய் நிறுவனங்களின் உண்மையான லாபம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இவை ஒரு எடுத்துக்காட்டு.

மக்களுக்கு மான்ய விலையில் தந்து கொண்டிருக்கிறோம் என்கிறார்கள். அதனால் நிறுவனங்களுக்கு நஷ்டம் என்கிறார்கள். அரசுக்கு நிதிச் சுமை என்கிறார்கள். கச்சா எண்ணெய்க்காக, எண்ணெய்ப் படுகைகளில் துரப்பணமிடும்போது, அதை எரிபொருளாகப் பயன்படுத்துகிறோம். அதற்குப் பிறகு கச்சா எண்ணெய் கிடைக்கிறது.

அந்தக் கச்சா எண்ணெயில் இருந்து சமையல் எரிவாயு, பெட்ரோல், நாப்தா, கெரசின், விமான எரிபொருளான வெள்ளை பெட்ரோல், டீசல் வகைகள், ஆயில் வகைகள், தார், மெழுகுகள் என பிரித்து எடுக்கப்படுகின்றன. இந்தப் பொருட்களின் மீது சுத்திகரிப்புச்செலவு, அவற்றின் மதிப்புக்குரிய வகையில் பிரித்து, மதிப்புக் கூட்டப்படுகிறதா..?
எத்ரேஆலியப் பொருட்களுக்காக அரசின் பட்ஜெட்டில் இருந்து மானியம் என்ற பெயரில் எந்த நிதியும் ஒதுக்கப்படுவதில்லை. ஆனால், மானியம் அளிக்கப்படுவதாக கணக்குக் காட்டப்படுகிறது. இது மானியம் அளிக்காமலேயே அளிக்கப்படுகிறது என்று காட்டும் மாயையை உண்டாக்கும் போக்கு அல்லவா..?

பெட்ரோலியப் பொருட்களுக்காக அரசின் பட்ஜெட்டில் இருந்து மானியம் என்ற பெயரில் எந்த நிதியும் ஒதுக்கப்படுவதில்லை. ஆனால், மானியம் அளிக்கப்படுவதாக கணக்குக் காட்டப்படுகிறது. இது மானியம் அளிக்காமலேயே அளிக்கப்படுகிறது என்று காட்டும் மாயையை உண்டாக்கும் போக்கு அல்லவா..!?

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷனின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா, ஏப்ரல்-ஜூன் வரையிலான காலாண்டில் எண்ணெய் நிறுவனங்களுக்கு 5,515 கோடி ரூபாயை மான்யமாகத் தந்திருப்பதாக அறிவிக்கிறார்.

எண்ணெய் விநியோக நிறுவனங்கள் 3,661 கோடி ரூபாயை லாபம் ஈட்டியுள்ள காலாண்டில் எதற்காக மான்யம் தரப்பட வேண்டும்..? கூடுதலான விலையில் விற்றிருக்கும் எண்ணெயை குறைந்த விலையில் அந்த நிறுவனங்கள் விற்றனவாம். அதனால் அந்த இழப்பை ஈடுகட்ட ONGC மான்யம் தருகிறதாம்.

விற்றிருக்க வேண்டிய விலை என்று ஒரு தொகையை இவர்களாக நிர்ணயித்து விற்ற விலையுடன் ஒப்பிட்டு இழப்பு ஏற்பட்டதாகச் சொல்லி மான்யம் அளிக்கிறார்கள். ஆக விலை குறைத்து விற்ற நிலையிலேயே அந்த நிறுவனங்கள் 3661 கோடி லாபம் ஈட்டியிருக்கின்றனவே. நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு நாங்கள் மான்யம் தந்து நஷ்டப்படுகிறோம் என்ற மாயையை மக்களிடம் ஏற்படுத்தும் யுக்தியா இது..?

மான்யம் என்பது என்ன..? அதிக விலைக்கு ஒரு பொருளை கொள்முதல் செய்து, அதைக் குறைந்த விலைக்கு மக்களுக்கு விநியோகம் செய்யும்போது ஏற்படும் நஷ்டத்தை அரசே ஏற்றுக் கொள்வதுதானே மான்யம்..

உதாரணத்திற்கு, மத்திய அரசு நெல்லை கொள்முதல் செய்து அரிசியாக்கும்போது ஒரு கிலோ அரிசியின் விலை சுமார் 13 ரூபாய் ஆகிறது. அதை மத்திய அரசு, மாநில அரசுக்கு மூன்று ரூபாய்க்குத் தருகிறது. மாநில அரசு அதை மக்களுக்கு ஒரு ரூபாய்க்குத் தருகிறது. ஆக, மக்கள் ஒரு ரூபாய் விலையில் பெறும் ஒரு கிலோ அரிசியில் மத்திய, மாநில அரசுகள் 12 ரூபாயை இழக்கின்றன. இந்த இழப்பை மக்களுக்கு அளித்த மான்யமாக ஏற்றுக் கொள்கின்றன.

இப்படிப்பட்ட தெளிவான முறை பெட்ரோலியப் பொருட்களின் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. காரணம், இவ்விஷயத்தில் மான்யம் என்று எதையும் அரசு தரவில்லை. மாறாக, வரிகள் என்ற பெயரால் லாபம் மட்டுமே அடைகிறது. அதனால் பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயத்தில், உண்மை நிலை என்ன என்பதை நிபுணர்கள் ஆராய்வது அவசியம்.

பெட்ரோல் விலை மீதான விலைக்கட்டுப்பாட்டை இப்போது அரசு நீக்கிவிட்டது. அதனால் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்ப இனி பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படும் என்கிறது அரசு. கச்சா எண்ணெய் விலை ஏறினால், பெட்ரோல் விலை உயரும். கச்சா எண்ணெய் விலை குறைந்தால் பெட்ரோல் விலை குறையும் என்று இதற்கு அர்த்தம்.

ஆனால் கச்சா எண்ணெய்யுடன் விதவிதமான வரிகளும் சேர்ந்தே பெட்ரோலியப் பொருட்களின் விலையாக உள்ள நிலையில், இனி எந்த நிலையிலும் பெட்ரோல் விலை பெரிதாகக் குறைவதற்கான வாய்ப்பு மிக, மிகக் குறைவுதான்.

நன்றி : துக்ளக் இதழ்

கடலூரில் மழையில் ஒழுகிய அரசு பஸ்,பயணிக்கு ரூ.2 ஆயிரம் வழங்க கோர்ட் உத்தரவு

மழையில் அரசு பஸ் ஒழுகியதால், அதில் பயணம் செய்து பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற அரசு அலுவலருக்கு, 2 ஆயிரம் இழப்பீடு வழங்க கடலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடலூர் மஞ்சக்குப்பத்தில் வசிப்பவர் ராமமூர்த்தி. மாவட்ட நீதிமன்றத்தில் சிரஸ்தாராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 30-11-2008 அன்று ராமமூர்த்தி, கடலூரில் இருந்து புதுவைக்கு, அரசு போக்குவரத்துக் கழக பஸ்ஸில் பயணம் செய்தார். அப்போது மழை பெய்தது.

பஸ்ஸின் ஷட்டர் மற்றும் கூரை சேதம் அடைந்து இருந்ததால், மழை நீரில் ராமமூர்த்தி நனைய நேரிட்டது. இதுபற்றி புகார் செய்தபோது நடத்துநர் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் ராமமூர்த்தியின் உடல் நிலை பாதிக்கப்பட்டதுடன், மனரீதியாகவும் பாதிக்கப் பட்டார்.÷எனவே இதுகுறித்து விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக, நிர்வாக இயக்குநர் மற்றும் கடலூர் கிளை மேலாளருக்கு புகார் மனு அனுப்பியும், அவர்கள் அளித்த பதில் திருப்தியாக இல்லை. எனவே கடலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புப் பேரவை மூலமாக வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் ராமமூர்த்தி சார்பில் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புப் பேரவை பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் ஆஜராகி வாதாடினார்.

வழக்கை மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி கணேசன், உறுப்பினர்கள் கலையரசி ராமதாஸ், பாண்டியன் ஆகியோர் விசாரித்து அண்மையில் தீர்ப்பு கூறினர். அரசு போக்குவரத்துக் கழகமும், பஸ் நடத்துநரும் அளித்த வாக்குமூலங்கள் முரண்பாடாக உள்ளதால், அரசு பஸ்ஸில் சேவைக் குறைபாடு உள்ளது. எனவே அரசு போக்குவரத்துக் கழகத்தின் பச 32 ச 2256 என்ற பதிவு எண் கொண்ட அந்த பஸ்சை , கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆய்வு செய்து சான்றளிக்க வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகம் உடனடியாக அந்த பஸ்ûஸ சரிசெய்து, அனைத்து இருக்கைகளும் பயணம் செய்யத் தகுதியானவைகளாக மாற்ற வேண்டும்.

ராமமூர்த்திக்கு சேவைக் குறைபாட்டுக்காகவும் மன உளைச்சலுக்காகவும் நஷ்டஈடாக 1000 மற்றும் வழக்கு செலவுத் தொகையாக 1000, விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம், 2 மாதங்களில் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

பஹ்ரைனை தொடர்ந்து குவைத்திலும் ஸ்பான்சர் முறை ரத்து

குவைத்,செப்.27:வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஸ்பான்சர் செய்யும் சர்ச்சைக்குரிய நடைமுறையை ரத்துச்செய்ய குவைத் முடிவு செய்துள்ளது.
வருகிற பிப்ரவரி மாதம் 'கஃபீல்' என்றழைக்கப்படும் ஸ்பான்சர் நடைமுறையை ரத்துச்செய்ய குவைத் அரசு தீர்மானித்துள்ளது.

பஹ்ரைன் ஏற்கனவே இந்த நடைமுறையை ரத்துச் செய்திருந்தது. ஈராக்கிடமிருந்து குவைத் விடுதலைப் பெற்ற நினைவு ஆண்டு பரிசு இது என குவைத் நாட்டின் தொழில் சமூக விவகாரத்துறை அமைச்சர் அல் அஃபாஸி தெரிவித்துள்ளார்.

மனித உரிமை அமைப்புகள் 'கஃபீல்' நடைமுறை அடிமைத்தனம் என குற்றஞ்சாட்டியிருந்தன. குவைத்தில் இந்தியர்கள் உட்பட 23 லட்சம் வெளிநாட்டு தொழிலாளிகள் பணிபுரிந்து வருகின்றனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்&பாலைவனத் தூது

செப்டம்பர் 26, 2010

உலகின் முதலாவது தலைகீழான வீடு


ஜேர்மன் நாட்டில் மக்களை கவரும் நோக்கில் ஒரு கண்காட்சி நிறுவனம் இந்த தலைகீழான வீட்டை வடிவமைத்துள்ளனர். இந்த வீட்டினுள் இருக்கும் அனைத்து பொருட்களும் தலை கீழாக இருக்கும் வண்ணமே அவர்கள் இந்த வீட்டை வடிவமைத்துள்ளனர்.

இந்த வீட்டை வடிவமைக்க அவர்களுக்கு ஆறு மாதங்கள் பிடித்ததாகவும், இது மிகவும் கடினமானதாக இருந்ததாகவும் ஆனால் அவர்களது ஊழியர்கள் அதனை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறார்கள் என அந் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்

இரு வாரங்களுக்கு முன் மக்கள் பார்வைக்காக இந்த வீடு திறந்து வைக்கப்பட்டுள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த வீட்டை வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். இந்த வீட்டை பார்வையிடும் மக்கள் தமக்கு வீட்டினுள் நிற்க தலை சுற்றுவது போல் உணர்வதாக கருத்து தெரிவிக்கின்றனர்.

வருகிறது ஆதார் கார்டு: அடித்தட்டு மக்களுக்களான பான் கார்டு


வருமானவரி கட்டுவோருக்கு அளிக்கப்பட்டிருக்கும் பான் கார்டு அளிக்கப்பட்டிருப்பதை போல ஏழை எளிய மக்களுக்கும் அடையாள அட்டை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி அரசின் நலத்திட்டங்களை கொண்டு போய் சேர்க்கவும், இந்த திட்டங்கள் அவர்களை ஒழுங்காக போய் சேருகிறதா என்பதை கண்காணிக்கவும் இந்த அடையாள அட்டை வழி வகுக்கும். இந்த அடையாள அட்டை வழங்கும் திட்டத்திற்கான சட்ட மசோதா விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பயன் பெறுவர். நாடு முழுவதும் வருமான வரி செலுத்துவோருக்கு பான் கார்டு அளிக்கப்பட்டுள்ளது. இந்த எண் என்பது குறிப்பிட்ட நபரை மட்டுமே குறிப்பிடுவதாக அமைந்துள்ளது. அதை போலவே அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு நலத்திட்டங்கள் மூலம் பயன் பெறும் அடித்தட்டு மக்களுக்கும் அடையாள எண் அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மொத்தம் 12 இலக்கங்களை கொண்டிருக்கும் இந்த எண்ணுக்கு "ஆதார் எண்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆதார் எண்ணை வழங்குவதற்கும் இதுகுறித்த பணிகளை மேற்கொள்வதற்கும் ஒரு அதிகார அமைப்பு நிறுவப்படவுள்ளது. தேசிய "அடையாள எண் அதிகார அமைப்பு' என்ற பெயரில் இந்த அமைப்பு இயங்கும். ஏழை மக்களுக்கு அடையாள அட்டை வழங்குவது குறித்தும், அந்த எண்களை நிர்ணயிப்பது குறித்தும் இந்த திட்டத்தை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்தும் இந்த அதிகார அமைப்பு முடிவு செய்யும். இந்த திட்டத்தை நிறைவேற்ற வகை செய்யும் சட்ட மசோதாவை எதிர்வரும் குளிர்கால பார்லிமென்ட் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்தது.
இந்த திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் விதமாக முதல் ஆதார் எண்ணை காங்கிரஸ் தலைவர் சோனியா அறிமுகம் செய்து வைக்கிறார். மகாராஷ்டிராவில் உள்ள நந்தூர் பார் என்ற இடத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முதல் ஆதார் எண்ணை சோனியா வழங்கவுள்ளார்

இன்று இருதய தினம்


ஒவ்வொரு 20 நொடிகளிலும் ஒரு இருதய அட்டாக் ஏற்படுகிறது. இருதய அட்டாக் மூலம் ஒவ்வொரு நிமிடத்திலும் ஒரு மரணம் ஏற்படுகிறது.

மிகவும் குறைந்த வயதிலும் இருதய நோய்க்கான அறிகுறிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயங்கரமான சூழலில் நாம் வசித்து வருகிறோம்.

நவீன தொழில்நுட்ப புரட்சி ஏற்படுத்திய பாதிப்பால் மாறிவரும் வாழ்க்கைமுறை, கொழுப்பு சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது, முறையான உடற்பயிற்சி இல்லாமை, மது அருந்துதல்,
புகைபிடித்தல், நீரழிவு நோய் உள்ளிட்டவை மனித உடலில் ஒட்டு மொத்த செயல்பாட்டையும் கட்டுப்பாடின்றி கொண்டு செல்கின்றன.

வாழ்வை அழிக்கும் இத்தகைய அறிகுறிகளை முன்கூட்டியே அறிந்து அத்தகையதொரு சூழலை மாற்றி முறையான சிகிட்சைகளை மேற்கொண்டு வாழ்க்கையை பயனுள்ளதாக மாற்றுவோம்.

இதயத்தை காக்கும் சில அடிப்படை விஷயங்கள்

1.உணவு பழக்கமுறை - குறைந்த எண்ணெய், குறைந்த கார்போ ஹைட்ரேட், அதிகமான புரோட்டீன்

2.உடற்பயிற்சி - இரண்டரை மணிநேரம் நடை பயிற்சி வாரத்திற்கு 5 நாட்கள்.

3.புகை பிடிப்பதை அறவே நிறுத்திவிடுங்கள்

4.உடல் எடையை கட்டுக்குள் வைத்திடுங்கள்

5.இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திடுங்கள்

6.மது அருந்துவதை முற்றிலும் ஒழித்துவிடுங்கள்

7.கோபத்தைக் கட்டுப்படுத்தி டென்சன் இல்லாத வாழ்க்கையை பழக்கிக் கொள்ளுங்கள்.

இதய நோயாளிகளால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பு ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின்(WHO) 2007-ஆம் ஆண்டிற்கான ஆய்வு தெரிவிக்கிறது.

இதய நோயாளிகளின் எண்ணிக்கைய கட்டுப்படுத்தாவிட்டால், இந்தியாவுக்கு 9 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என அந்த ஆய்வு எச்சரிக்கை விடுக்கிறது.

இருதய நோய் அற்ற உலகத்தை உருவாக்கிட கடுமையாக முயல்வோம்!

source:பாலைவனத் தூது

செப்டம்பர் 23, 2010

வஃபத் செய்தி!!

கொள்ளுமேடு மேலத் தெருவில் இருக்கும் நஸ்ருல்லாஹ் அவர்களின் தந்தை முஹம்மது இக்பால் அவர்கள் இன்று (23.09.2010) வியாழன் கிழமை சௌதியில் மாரடைப்பால் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.அன்னாரின் நல்லடக்கம் சௌதியில் நடைப்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்னாரின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் பிரார்த்திப்போம்..

காட்டுமன்னார்கோவிலில் ரூ.50 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் ஒன்றிய பகுதிகளில் 50 லட்சம் ரூபாய் மதிப் பீட்டில் பல்வேறு வளர்ச் சிப் பணிகள் மேற் கொள்ள முடிவு செய்யப் பட்டுள்ளது.
காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம் சேர்மன் ஜெயச்சந்திரன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சின்னப்பா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேவதி, விஜயன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், பல்வேறு ஊராட்சிகளில் நடைபெறும் பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும் பேசப்பட்டது. தார் சாலை, சிமென்ட் சாலை, சிறு பாலங்கள் அமைப் பது உள்ளிட்ட பணிகளுக்காக 50 லட்சம் ரூபாய் செலவில் திட்டப் பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொலைபேசி இல்லாத வீராணம் பொதுப்பணித்துறை அலுவலகம்

காட்டுமன்னார்கோவில் : வீராணம் பொதுப்பணி துறை அலுவலகத்தில் மழைக்காலம் நெருங்கும் நிலையில் தொலைபேசி வசதி இல்லாமல் அதிகாரிகள் அவதியடைந்து வருகின்றனர். மொபைல்போன் ஆதிக்கம் அதிகரித்து விட்ட நிலையிலும் அரசு அலுவலங்களில் முக்கிய தகவல்கள் பரிமாற்றத் திற்கு "லேண்ட் லைன்' தொலைபேசி சேவை அவசியமாக கருதப்படுகிறது. குறிப்பாக கடலூர் மாவட் டத்தின் கடைகோடி பகுதியான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் பகுதிகளில் மழை, வெள்ள காலங்களில் "லேண்ட் லைன்' மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

வீராணம் ஏரியின் நீர் நிலை குறித்து உடனுக்குடன் சென்னை, பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் வீராணம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் "லேண்ட் லைன்' வசதி இல்லாததால் மொபைல்போனையே நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. மெபைல்போன் டவர் வேலை செய்யாத நேரங்களில் அதிகாரிகள் டெலிபோன் பூத்திலிருந்து போன் செய்து உயர் அதிகாரிகளுக்கு புள்ளி விவரங் களை கொடுக்க கூடிய நிலை உள்ளது. அதே நேரத்தில் பொதுமக்கள் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு விவரங்களை பெற முடியாமல் போகிறது. எனவே அவசிய, அவசரம் கருதி "லேண்ட் லைன்' தொலைபேசி வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு!


அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுவதால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக‌த்‌தில் 70 ஆயிரம் காவல‌ர்க‌ள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் நாளை ‌தீ‌ர்‌ப்பு வழ‌ங்க‌ப்படுவதையொட்டி, அசம்பாவித ‌நிக‌ழ்வுகள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளையும், மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு படையினரும், காவல‌ர்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தமட்டில் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி முடிவு செய்ய சென்னை கோட்டையில் நே‌ற்று மாலை அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

தலைமை செயலர் எஸ்.மாலதி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் உள்துறை முதன்மை செயலர் ஞானதேசிகன், பொதுத்துறை செயலாளர் கருத்தையா பாண்டியன், காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் லத்திகா சரண், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன், சென்னை காவ‌ல்துறை ஆணைய‌ர் ராஜேந்திரன், உளவுப்பிரிவு ஐ.ஜி. ஜாபர் சேட், சென்னை புறநகர் காவ‌ல்துறை ஆணைய‌ர் எஸ்.ஆர்.ஜாங்கிட் மற்றும் அனைத்து மண்டல ஐ.ஜி.க்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் பாதுகாப்பு தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

அவை விவரம் வருமாறு: நாளை காலையில் இருந்து தமிழகம் முழுவதும் 70 ஆயிரம் காவல‌‌ர்க‌ள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். காவ‌ல்துறை அதிகாரிகள், காவல‌ர்க‌ள் யாரும் நாளை விடுமுறையில் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. விடுமுறையில் சென்றவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

அனைத்து தரப்பினரும் அமைதியை நிலைநாட்ட ஒத்துழைப்பு தரவேண்டும் என்று முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் அனைத்து மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர்களும், மாவட்ட காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர்களும், மதத்தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். காவல‌ர்களோடு, வருவாய்த்துறை ஊழியர்களும் இணைந்து அமைதியை நிலைநாட்டும் பணியில் ஈடுபட வேண்டும்.

கோவை, திருப்பூர், நாகப்பட்டினம், திருச்சி, தஞ்சை, மதுரை, நெல்லை, வேலூர் போன்ற பதற்றமான பகுதிகளில் அதிகளவில் காவல‌ர்க‌ள் குவிக்கப்பட வேண்டும். இந்த பகுதிகளில் முக்கியமான இடங்களில் உயர் அதிகாரிகள் அதிரடிப்படையினரோடு எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு சமாளிப்பதற்காக தயார் நிலையில் இருக்க வேண்டும். முக்கியமான நெடுஞ்சாலைகளில் காவல‌ர்க‌ள் ரோந்து சுற்றி வரவேண்டும்.

மக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகங்கள், பேரு‌ந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், சினிமா தியேட்டர்கள், மத வழிபாட்டு தலங்கள், முக்கிய அரசு அலுவலகங்கள் போன்றவற்றுக்கு பலத்த பாதுகாப்பு போடவேண்டும்.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சந்தேகத்துக்கிடமான அமைப்புகளின் நடவடிக்கைகளை உளவுப்பிரிவு ரகசியமாக கண்காணித்து தகவல்கள் சேகரிக்க வேண்டும். அனைத்து நகரங்களிலும் சந்தேகத்துக்கிடமான சுவரொட்டிகள் ஒட்டப்படுகிறதா? அவ்வாறு ஒட்டப்படும் சுவரொட்டிகளில் வன்முறையை தூண்டும் வாசகங்கள் உள்ளனவா? என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

சந்தேகத்துக்கிடமான ரகசிய ஆலோசனை கூட்டங்கள் நடக்கிறதா? நபர்கள் யாராவது தங்கியிருக்கிறார்களா? என்பதையும் கண்காணிக்க வேண்டும். அனைத்து முக்கியமான ரோடு சந்திப்புகளிலும் வாகன சோதனை நடத்த வேண்டும் என்பன போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. லத்திகா சரண், கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.

சென்னை நகரில் மண்ணடி, புளியந்தோப்பு, செம்பியம், ஓட்டேரி, புதுப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஐஸ் அவுஸ், ராயப்பேட்டை போன்ற பகுதிகளில் அதிகளவில் பாதுகாப்பு பணிகளை செய்ய முடிவு செய்யப்பட்டது. சென்னையில் உள்ள மத வழிபாட்டு தலங்களிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்படுகிறது.

சென்னையை பொறுத்தமட்டில் பிரச்சனைக்குரிய பல்வேறு அமைப்புகளின் தலைவர்களையும், நிர்வாகிகளையும் அழைத்து பேசிவிட்டதாகவும், அவர்கள் அனைவரும் அமைதி நிலவ முழு ஒத்துழைப்பு தருவோம் என்று உறுதி கொடுத்துள்ளதாகவும், எனவே சென்னையில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாது என்றும் ஆணைய‌ர் ராஜேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.
பாபர் மஸ்ஜித் தீர்ப்பின் போது அமைதி காப்போம்! TNTJ வெளியிட்டுள்ள அறிக்கை!

பாபரி மஸ்ஜித் நிலம் உரிமை குறித்து வருகின்ற 24.09.2010(வெள்ளி) அன்று தீர்ப்பு வெளிவரவிருப்பது அறிந்ததே. இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிம் சமுதாயத்திற்கும், தனது கட்டுப்பாட்டில் உள்ள 600 பள்ளிவாசல்களுக்கும் பின் வரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கடந்த 1949ஆம் ஆண்டு வரை பாபர் மஸ்ஜிதில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்தனர். அதாவது உரிமை மற்றும் அனுபவம் ஆகிய இரு அடிப்படைகளில் அந்த இடம் முஸ்லிம்களுக்குத்தான் சொந்தம் என்று உறுதியாகிறது.
இந்திய நீதி மன்றங்களில் சிவில் வழக்குகளில் இவ்விரண்டையும் அடிப்படையாகக் கொண்டுதான் தீர்ப்புகள் அளிக்கப்படுகின்றன. இதன்படி அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் முஸ்லிம்களுக்கு அனுகூலமாகவே அமைய உள்ளது.
அவ்வாறு தீர்ப்பு அநுகூலமாக அமையும் பட்சத்தில் முஸ்லிம்கள் தங்கள் மகிழ்ச்சியை பகிரங்கமாக வெளிப்படுத்தாமல் அடக்கமும் அமைதியும் காத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அயோத்தி தீர்ப்பு அமைதி காக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ.அஹமது வேண்டுகோள்
அயோத்தியில் ராம ஜென்ம பூமி மற்றும் பாபரி மஸ்ஜித் வளாகம் யாருக்கு உரிமைபட்டது என்பது குறித்து லக்னோ உயர் நீதிமன்ற கிளை வருகிற 24-ந்தேதி தீர்ப்பு வழங்க விருக்கிறது. அந்தத் தீர்ப்பை மதித்து அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், மத்திய ரயில்வே துறை இணையமைச்சருமான இ.அஹமது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் இஸ்லாமியர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் அனைத்து சமுதாய ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை

பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் வருகிற செப்.24 ஆம் தேதி தீர்ப்பு வரவிருக்கும் வேளையில் அனைத்து மதப் பிரிவினரும் அமைதியும், நல்லிணக்கவும் பேண பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியத்தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் அழைப்பு விடுத்துள்ளார்.

நீங்கள் சொந்தமாக சிறுதொழில் செய்ய விரும்புகிறீர்களா?

ஆம் எனில்,பின்வரும் பொருட்களைத் தயாரிப்பதற்கும்,அதற்குத் தேவையான மூலப்பொருட்கள்,தயாரிப்புப் பயிற்சியும்,தொழில்நுட்ப விபரங்களையும் தர சென்னையைச் சேர்ந்த அஸ்ட்ரோ ட்ரேட் பிரைவேட் லிமிடெட் தரத் தயாராக இருக்கிறது.


இந்த நிறுவனம் பாரிமுனையில் தம்புச்செட்டித்தெருவில் காளிகாம்பாள் கோவில் அருகில் எண்:232 இல் செயல்பட்டுவருகிறது.தொலைபேசி:044 – 43412222 செல் எண்கள்: 98845 13369,96770 56804.


சலவை சோப்,குளிக்கும்போது பயன்படுத்தும் ஷாம்பு,தரையை சுத்தப்படுத்தும் க்ளீனிங் திரவங்கள்,பற்பசை,தலைக்குத் தேய்க்கும் எண்ணெய்,முகப்பூச்சு க்ரீம்,குங்குமம்,ஊதுபத்தி,சூடக்கட்டி,ப்ளீச்சிங் பவுடர்,அழுக்கு நீக்கியான ஹைட்ரோகுளோரிக் ஆசிட்,சலவைப் பவுடர்,கழிப்பிடத்தை சுத்தப்படுத்தும் சாதனங்கள்,பல் தேய்க்கும் ப்ரஷ்,குளியல் சோப்,முகப்பூச்சு பவுடர்,பாத்திரம் துலக்கும் பவுடர்,சோப்பு,கம்யூட்டர் சாம்பிராணி, தரை

துடைப்பான்,பினாயில்,சானிடரி நாப்கின்.


இந்தியா வல்லரசாகிட,நாம் சுயச்சார்பான நாடாக மாற வேண்டும்.அதற்கு பக்கபலமாக இருப்பது சிறுதொழில்கள்தான்.
நன்றி:சுதேசிச்

செப்டம்பர் 22, 2010

இஸ்ரேலில் பாஸிசம்: யூத பேரினவாத சட்டம்


"இஸ்ரேலை யூத இனத்தவருக்கான நாடாக ஏற்றுக் கொண்டு விசுவாச சத்தியப் பிரமாணம் எடுக்க வேண்டும்", என்ற சட்ட மசோதா தற்போது இஸ்ரேல் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுகின்றது. தீவிர வலதுசாரிக் கட்சியான Yisrael Beiteinu வின் நாடாளுமன்ற உறுப்பினர் David Rotem இந்த பிரேரணையைக் கொண்டு வந்துள்ளார். இந்த சட்டம் அமுலுக்கு பட்சத்தில், இஸ்ரேலில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் "விசுவாச சத்தியப் பிரமாணம்" எடுக்க வேண்டும். அல்லாவிட்டால் அவர்களது குடியுரிமை பறிக்கப்படும் அபாயம் உள்ளது.

இஸ்ரேலின் மொத்த சனத்தொகையில் இருபது வீதமானோர் பாலஸ்தீன பிரஜைகள். அவர்களின் மீது அழுத்தம் பிரயோகிக்கும் முகமாகவே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பாலஸ்தீன-அரபு சிறுபான்மை இன மக்கள், இஸ்ரேலின் யூத பேரினவாதத்தின் கீழ் அடிபணிவதாக சத்தியம் செய்ய வேண்டும். ஏற்றுக் கொள்ளாதவர்கள் சட்டப்படி குடியுரிமைகளை இழப்பார்கள். (பார்க்க:Palestinians may soon have to swear loyalty to 'Jewish' state)

ஒவ்வொரு பிரஜையும் பின்வருமாறு சத்தியப் பிரமாணம் எடுக்க வேண்டும்:
"நான் ஹாஷேம் (யூத கடவுள்) பெயரால் உறுதிமொழி எடுக்கிறேன். யூத தேசமான இஸ்ரேலுக்கும், அதனது தலைவர்களுக்கும், தளபதிகளுக்கும், இராணுவத்திற்கும் எனது நிபந்தனையற்ற விசுவாசத்தை வழங்குகிறேன். யூத தேசத்தின் விசுவாசியாக எந்த நேரத்திலும் எனது வாழ்க்கையை அர்ப்பணிக்க தயாராக இருக்கிறேன்."

நாஜி ஜெர்மனியில் ஒவ்வொரு பிரஜையும், ஜெர்மன் தேசத்திற்கு விசுவாசமாக உறுதிமொழி எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். அமெரிக்காவில் கம்யூனிஸ்ட்களை வேட்டையாடிய மக்கார்த்தி சட்டம், ஒவ்வொரு பிரஜையும் அரச விரோத செயல்களில் ஈடுபடவில்லை என்று உறுதிமொழி எடுக்க நிர்ப்பந்தித்தது குறிப்பிடத்தக்கது.

சவூதியில் பொதுமன்னிப்பு

ரியாத்,செப்.22:இதர வளைகுடா நாடுகளை பின்பற்றி சவூதி அரேபியாவும் சட்டத்திற்கு புறம்பாக நாட்டில் வசிக்கும் வெளி நாட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி வெளியேற உத்தரவிட்டுள்ளது.

வருகிற செப்.25 முதல் 2011 ஆம் ஆண்டு மார் 23 வரையிலான 6 மாத கால அவகாசம் இதற்காக வழங்கப்பட்டுள்ளது. இக்காலக்கட்டத்தில் உம்ரா விசா, ஹஜ் விசா, சுற்றுலா விசா ஆகியவற்றில் சவூதி அரேபியாவிற்கு வருகை தந்து விசா காலாவதியான பிறகும் சவூதியில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் சரணடைந்து நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

விசா காலாவதியாகிவிட்டால் 10 ஆயிரம் ரியால் அபராதமாக செலுத்தவேண்டும் என்பது சட்டம். ஆனால் பொதுமன்னிப்புக் காலக்கட்டத்தில் போதிய ஆவணங்கள் இல்லாமல் சவூதியில் சிக்கியவர்கள் அபராதம் கட்டாமல் நாட்டை விட்டு வெளியேறலாம். லட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள் சவூதி அரேபியாவில் சட்டத்திற்கு புறம்பாக வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ் &பாலைவனத் தூது

செப்டம்பர் 21, 2010

இரண்டு ஆண்டுகளில் மோசமான சூரியப்புயல் வருகிறது ?



2012 ம் ஆண்டு டிசம்பர் 21&ம் தேதி படுபயங்கர பாதிப்புகள் ஏற்படப்போவது நிச்சயம்’ என்கின்றனர் கொடைக்கானல் இந்திய வான்ஆராய்ச்சிக் கழக வல்லுனர்கள். ‘‘2012 டிசம்பர் 12&ம் தேதி இயல்புக்கு மாறாக பயங்கர சூரியப் புயல் ஏற்பட உள்ளது. இதை தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும், தவறினால் உலகம் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். அதிக உஷ்ணக் கதிர்கள் மற்றும் மின்காந்த அலைகளைத் தாங்கி உருவாகி வரப்போகும் சூரியப் புயல் பூமியை நெருங்கும் போது பயங்கரமான பாதிப்புகள் ஏற்படும். சூரியனில் இருந்து வெளியேறும் உஷ்ணக் காற்று பூமியை தகிக்கும். உலகம் முழுவதும் மின்சாரம், விண்கலங்கள், செயற்கைக்கோள், தொலைதொடர்பு, செல்போன் ஆகியவை அனைத்தும் ஸ்தம்பிக்கும்’’ என்று அந்த நிறுவனத்தின் விஞ்ஞானி சுந்தரராமன் கூறினார்.

கனடாவின் க்யூபெக் மாகாணத்தை இதேபோன்ற பயங்கர சூரியப் புயல் 1989&ம் ஆண்டு தாக்கியது. தொடர்ச்சியாக 9 நாட்கள் கனடாவே ஸ்தம்பித்துவிட்டது. 2012&ல் வரப்போகும் சூரியப் புயல் மொத்த பூமியையும் தாக்கப்போகிறது என்றும் கூறியுள்ளார். இதை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர் மவுஸ்மி திக்பதியும் உறுதிப்படுத்தி உள்ளார்.

செப்டம்பர் 20, 2010

ஆன்லைனில் ஓட்டுநர், பழகுநர் உரிமம்: போக்குவரத்துத் துறை புதிய ஏற்பாடு


ஆன்லைன் மூலம் ஓட்டுநர் மற்றும் பழகுநர் உரிமங்களுக்கு விண்ணப்பிக்கும் வசதியை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை தொடங்கி வைத்த போக்குவரத்துத் துறை அமைச்சர கே.என்.நேரு


ஓட்டுநர் மற்றும் பழகுநர் உரிமம் பெற வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் காத்திருக்க வேண்டாம். இணையதளம் மூலம் ஆன்லைன் http://www.transport.nic​ இன் வழியே விண்ணப்பிக்கலாம். இந்தப் புதிய வசதியை போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

போக்குவரத்துத் துறையின் இணையதளத்தைத் திறந்தால் அப்போது சேவை முன்பதிவு என்ற பிரிவு வரும். அதை கிளிக் செய்ய வேண்டும். அந்தப் படிவத்தில் விண்ணப்பதாரர் பெயர், தந்தை பெயர், முகவரி, பிறந்த தேதி, அங்க அடையாளம், ரத்த வகை ஆகியன கேட்கப்பட்டு இருக்கும். அவற்றை விண்ணப்பத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தவுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வந்து விடும். அதிலுள்ள எண்ணைக் குறித்துக் கொண்டு மறுநாளே சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு நேரில் சென்று கட்டணத்தைச் செலுத்த வேண்டும். கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெற்றால் உடனடியாக உரிமங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது போல...
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்குச் செல்லும் நாள் மற்றும் நேரத்தை இணையதளம் மூலம் நாமே தீர்மானித்துக் கொள்ளலாம். அதுபோன்று, விண்ணப்பதாரர் வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும் தேதியையும், நேரத்தையும் அவரே தீர்மானிக்கலாம். இதனால், விண்ணப்பதாரர்கள் காத்திருக்க வேண்டிய நேர விரயம் தவிர்க்கப்படும்.
புதிய ஏற்பாட்டை அறிமுகம் செய்த பின் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டி:

சென்னை நகரில் மினி பஸ்கள் விடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, மூன்று மாதத்துக்குள் நகரில் 100 பஸ்கள் விடப்படும். போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மினி பஸ்களை மக்கள் அதிகம் பயன்படுத்தும் போது அவர்களுக்கான சொந்த வாகனங்களின் பயன்பாடு குறைய வாய்ப்பு ஏற்படும். இதன்மூலம், போக்குவரத்து நெரிசல் குறையும்.

30 லட்சம் பேர் பஸ்களை பயன்படுத்தி வந்தனர். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 40 லட்சம் பேர் பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர்.15 ஆயிரம் செலுத்தி தேசிய அளவிலான பெர்மிட்டை பெற்றுக் கொள்ளும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதை நடைமுறைக்குக் கொண்டு வந்த முதல் மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெற்றுள்ளது என்றார் அமைச்சர் கே.என்.நேரு.

வைரத்தாலான கிரகம். அதிர்ச்சிதகவல்!


பூமியில் வைரக் கற்கள் பெரும் விலைக்கு விற்க்கப்படும் ஒரு பொருள். சிறிய குண்டூசியளவு வைரக் கல் கூட பல லட்சம் விலை பெறுமதியானது. அத்தோடு இதுவரை காலமும் உலகில் தோண்டி எடுக்கப்பட்ட வைரக் கற்களில் மிகப்பெரியது என்று கருதப்படுவது கோகினூர் வைரம் என்றழைக்கப்படும். அதன் அளவு ஒரு தேசிக்காயின் அளவை ஓத்தது. அது பல மில்லியன் டாலர் பெறுமதி, ஆனால் அண்டவெளியில் உள்ள ஒரு கிரகம் வைரத்தால் ஆனது என தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 4,000 கிலோ மீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட இக் கிரகம் முழுக்க முழுக்க வைரக் கல் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சாதாரணமாக காபன் என்னும் மூலப்பொருள் இறுக்கமடைந்து பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் வைரக் கல்லாக மாறுகிறது. தங்கத்தை கரட் கொண்டு, 24 கரட் அல்லது 18 அல்லது 9 கரட் என்பது போல வைரத்தை அதன் அடர்த்தியை வைத்தே மதிப்பிடுவார்கள். சுமாரான வைரக் கற்கள், 0.05 கரட் ஆக இருக்கும். 1 கரட் வைரக் கற்கள் மிகுந்த விலையானவை. அதிலும் 2 கரட் என்றால் அதி உச்ச விலை மதிப்பானவை. ஆனால் அண்ட வெளியில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வைர கிரகத்தில் உள்ள வைரத்தின் அடர்த்தி என்ன என்றுகேட்டால் பூமியில் உள்ளவர்கள் தலைசுற்றி விழுவது நிச்சயம்.

அந்த வைரத்தின் அடர்த்தி சுமார் 1 மில்லியன் கரட் ஆகும். அக் கிரகத்தில் இருந்து எடுக்கப்படும் ஒரு சிறு அணுத்துகள் கூட பூமியில் பல மில்லியன் பெறுமதியாக இருக்கும். ஒரு காலத்தில் எமது சூரியக் குடும்பத்தில் உள்ள சூரியனைப்போல ஒளிர்விட்டு எரிந்த இச் சிறுகிரகம், தற்போது அணைந்து, மிகவும் குளிர்ந்து இறுகி வைரக் கட்டியாக மாறியுள்ளதாம். அது பூமியில் இருந்து 50 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கிறது. அக்கிரகத்திற்கு எந்த நாடு முதலில் தனது செய்மதியை அனுப்பப்போகிறதோ தெரியவில்லை. அப்படி ஒரு நாடு அனுப்பினால் அந்நாடே உலகில் செல்வம் மிக்க நாடாகத் திகழும்.

ஆனால் 50 ஒளியாண்டுகள் என்றால் என்ன என்று தெரியுமா?
ஒளி சுமார் 1லட்சத்தி 87,000 மைல் தூரம் செல்லும் 1 செக்கனுக்கு. அப்படியானால் 1,87,000 ஐ 60 ஆல் பெருக்கி, அதை 24 ஆல் பெருக்கி வரும் விடையை 365 ஆல் பெருக்கினால் வரும் தூரமே 1 ஒளியாண்டு ஆகும். அப்படி என்றால் 50 ஒளியாண்டுகள் என்றால் எவ்வளவு தூரம்...????

நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்: முஸ்லிம் தனியார் சட்டவாரியம்

ஹைதராபாத்,செப்,20:பாப்ரி மஸ்ஜித் நிலைக்கொண்டிருந்த நிலம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு வரவிருக்கும் வேளையில் முஸ்லிம்கள் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அரசியல் சட்டத்திற்கு உள்பட்டு முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என சட்டவாரியத்தின் செயல் பொதுச் செயலாளர் ரஹீம் குரைஷி தெரிவித்தார்.

நீதிமன்றத் தீர்ப்பு எதிராக வந்தாலும் அதனை எதிர்க்கத் தேவையில்லை.சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடுச் செய்ய வழி உண்டு. சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாக்க வேண்டும்.

நீதிமன்றத் தீர்ப்பு வெளிவரும் நாளில் வன்முறையிலிருந்து விடுபட்டு நிற்கவேண்டும்." இவ்வாறு குரைஷி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையே பாப்ரி மஸ்ஜித் தொடர்பான வழக்குகளை கையாளும் முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் சிறப்பு கமிட்டி நேற்று டெல்லியில் கூடி அயோத்தியா பிரச்சனையை விவாதித்தது.

எல்லா முஸ்லிம் அமைப்புகளின் மூலமாக விரிவான வேண்டுகோளை தனியார் சட்டவாரியம் இன்று வெளியிடும் என கமிட்டியின் கண்வீனர் எஸ்.க்யூ.ஆர். இலியாஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

செப்டம்பர் 19, 2010

குண்டும், குழியுமான மானியம்ஆடுர் சாலை

சிதம்பரம், செப். 18: காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

3 கி.மீ. நீள இச் சாலை கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி நடந்துகூட செல்ல முடியாத நிலையில் மிக மோசமாக உள்ளது. இச்சாலை வழியே தினமும் ஒரு மினி பஸ் மட்டும் வந்து செல்கிறது.

இக்கிராமங்களில் வசிக்கும் மாணவ, மாணவிகள் லால்பேட்டை மேல்நிலைப் பள்ளிக்கு சைக்கிளில் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் சாலை மிக மோசமாக உள்ளதால் பள்ளி செல்லும் மாணவர்கள் மிகவும் அவதியுற நேரிடுகிறது. இதனால் அவர்கள் பள்ளிக்கு செல்வதை தவிர்க்கும் நிலை உள்ளது.

மழைக் காலத்துக்கு முன்னதாக இச் சாலையை சீரமைக்க, கடலூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source:dinamani

அயோத்தி தீர்ப்பு: தொ.கா. நிறுவனங்களுக்கு வழிகாட்டல்!

அயோத்தி நில உரிமை வழக்கின் தீர்ப்பு நாள் நெருங்குவதைத் தொடர்ந்து, மின் ஊடகங்களுக்கான வழிகாட்டுதல்களை செய்தி ஒளபரப்புவோர் கூட்டமைப்பு (NBA) வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு குறித்து ஊகமான தகவல்களை வெளியிட வேண்டாம் என்றும் 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதைக் காண்பிக்க வேண்டாம் என்றும் அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

அயோத்தி தொடர்பான செய்திகளைத் தரும்போது கூடுதல் கவனம் தேவை. இச்செய்தி தொடர்பாகத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும்போது உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் ஒளிபரப்பக் கூடாது என்று அந்த வழிகாட்டல்களில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அனைத்து செய்திகளையும் ஒளிபரப்பும்போது, சமூக ஒற்றுமை பேணக்கூடிய வகையில் பொது நலனுடன் ஒளிபரப்ப வேண்டும். நமது நாட்டில் வாழும் பல்வேறு சமூகங்களுக்கிடையே மதச்சார்பின்மையைக் காப்பாற்றக் கூடிய அளவில் செய்திகள் ஒளிபரப்பப்பட வேண்டும் என்றும் வழிகாட்டல்களில் கூறப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டில் விண்வெளிக்கு சுற்றுலா போயிங் தயாராகிறது

நியூயார்க்: அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில் உள்ள போயிங் விமான நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பத்துடன் விமானங்களை தயாரித்து பல நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது


அமெரிக்காவின் நாசாவில் இருந்து விண்வெளிக்கு அரிய கண்டுபிடிப்புக்காக மட்டுமே இதுவரை விண்வெளி ஓடம் அனுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் விண்வெளிக்கு வணிக நோக்கத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்ல போயிங் நிறுவனம் ஸ்பேஸ் அட்வென்ஞ்சர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. நாசாவின் உதவியுடன் விண்வெளிக்கு சுற்றுலா பயணிகளை அனுப்ப சிஎஸ்டி-100 ரக விமானத்தை அது தயாரிக்கிறது.
இந்த விமானம் 7 பேர் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கும். இந்த பயணத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை பயணிகள் பார்க்க முடியும். நாசா விண்வெளி வீரர்களின் உதவியுடன் விண்வெளி பயணத்தை மேற்கொள்ள போயிங் நிறுவனம் பேச்சு நடத்துகிறது.
2015ம் ஆண்டு வாக்கில் தொடங்கவுள்ள விண்வெளி பயணத்துக்கு, இப்போதே முன்பதிவு செய்ய சிலர் தயாராகி விட்டனர். இதற்குமுன் விண்வெளி சுற்றுலாவுக்கு ரஷ்யாவில் இருந்து பயணிகள் சென்று வந்தனர்

செப்டம்பர் 16, 2010

உலகில் உணவின்றி 100 கோடி மக்கள் அவலம்


உலகில் மனிதன் வாழ்வதற்குத் தேவையான உணவின்றி 100 கோடி மக்கள் பட்டினியால் வாடுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்று விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.பல நாடுகள் தன் பொருளாதார மட்டத்தில் வளர்ச்சியடைந்தாலும் கூட அந்நாடுகளில் வாழ்கின்ற மக்கள் தான் அதிகமாக தற்போதும் பட்டினியில் வாடிவருகின்றனர். உதாரணமாக சீனா, இந்தியா போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம்.

இறுதியாக சில ஆண்டுகளுக்கு முன் கணிக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி உலகில் பட்டினியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை 1.02 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது 92.5 கோடி எட்டியுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதில் ஆசியா, ஆபிரிக்கா போன்ற நாடுகளை சேர்ந்தவர்களே அதிகமாக காணப்படுகின்றனர்.

உணவுத் தேவை பூர்த்தி செய்யப்படாமல் இந்தியா, சீனாவை சேர்ந்தவர்களில் 40 சதவீதம் பேர் காணப்படுகின்றனர். மேலும் பங்களாதேஷ், இந்தோனேசியா, பாகிஸ்தான், கொங்கோ, எத்தியோப்பியா ஆகிய நாடுகளிலும் அதிகமானோர் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் 20 வீமானோர் உணவுத் தேவையினைப் பூர்த்தி முடியாமல் உள்ளார்கள். இதனை நாம் 2015இல் 10 வீதமாகக் குறைக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். இதனை அபிவிருத்தியடைந்த நாடுகளின் உதவியோடு முன்னெடுக்கவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பின் காரணமாக, ஏழை மக்கள் துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஆகவே இம்மாதம் 24ஆம் திகதி இது பற்றி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்று விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 15, 2010

கொள்ளுமேடு TNTJ ஃபித்ரா விநியோகம் ரூபாய் 36500


இந்த ஆண்டு கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாத் கிளையின் சார்பாக ரூபாய் முப்பத்தி ஆராயிரத்தி ஐநூறு(ரூ36500) மதிப்பிற்கு 100 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
வழங்கப்பட்ட பொருட்கள்:
உயிர் கோழி,எண்ணை மற்றும் மளிகை சாமான்கள்
கிளையின் தலைவர் யாசின் அவர்களின் தலைமையில் சென்ற நிர்வாகிகள் ரஜ்வீ, கிளை துணைத்தலைவர் ரபீக், செயலாளர் இத்ரீஸ் மற்றும் அபூ பக்கர், ஜாவித், ஆசிக் ,சலீம் ஆகியோர் சிறப்பான முறையில் ஃபித்ரா விநியோகம் செய்து அனைவரின் பாராட்டுதலையும் பெற்றனர்.
செய்தி :அபுல் மல்ஹர் அமீரக தலைவர் (KTJ)

சவூதியுடன் அமெரிக்கா 600 கோடி டாலர் ஆயுத ஒப்பந்தம்

வாஷிங்டன்:சவூதி அரேபியாவுடன் 600 கோடி டாலர் ஆயுத ஒப்பந்த திட்டத்திற்கு தயாராகிறது அமெரிக்கா.

ஏறத்தாழ 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் இத்திட்டத்தால் தளர்ந்து போயிருக்கும் அமெரிக்க பொருளாதாரத்திற்கு புத்துணர்வு அளிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது அமெரிக்க அரசு.

நவீன தொழில்நுட்பம் கொண்ட போர் விமானங்களும், ஏவுகணை எதிர்ப்பு கருவிகளையும் அமெரிக்கா சவூதிக்கு விற்கும். இந்த ஒப்பந்தைத் தொடர்ந்து ஈரானிடமிருந்து அச்சுறுத்தல் ஏற்படும் என்ற பெயரில் சவூதியின் பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு கட்டமைப்பை முன்னேற்றம் அடையச் செய்வதும் இத்திட்டத்தில் உள்ளது.

வால்ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிகை இச்செய்தியை வெளியிட்டுள்ளது. ஆயுத ஒப்பந்தத்தின் மூலம் ஈரானுக்கெதிரான அரபு சமூகத்தின் ஆதரவை அதிகரிப்பது அமெரிக்காவின் லட்சியமாகும் என அச்செய்திக் கூறுகிறது. இவ்விவகாரத்தில் அமெரிக்க காங்கிரஸ் சில வாரங்களுக்குள் அனுமதி அளிக்கும் எனவும் அப்பத்திரிகைச் செய்திக் கூறுகிறது.

அதேவேளையில், இவ்வொப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஆதரவு எம்.பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்த பொழுதிலும் போர் விமானங்களில் நீண்டதூர தாக்குதல்களுக்குரிய வசதிகள் இல்லாததால் எதிர்ப்புகள் அடங்கிப்போயின.

84-எஃப் 15 போர் விமானங்கள், இதன் அப்க்ரேட் செய்யப்பட்ட விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவைகளை அமெரிக்கா சவூதிக்கு விற்கும். ஏற்கனவே, இஸ்ரேல் நவீன தொழில்நுட்பங்கொண்ட எஃப்-35 என்ற விமானங்களுக்காக அமெரிக்காவுடன் இஸ்ரேல் ஒப்பந்தம் செய்துள்ளது.

ரேடார்களின் கண்ணில் படாமல் தாக்குதல் நடத்தும் தன்மைக் கொண்ட எஃப்-35 போர் விமானம், பெரும்பாலும் ஈரானின் அணு சக்தி செயல்பாடுகளை கண்காணிக்கவேண்டிதான் இஸ்ரேல் வாங்குகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

தலிபான்களுக்கு போர்ப்பயிற்சி அளிக்கும் அமெரிக்க படைவீரர்



ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் முகா மிட்டுள்ளன. அவர்கள் தலிபான் போராளிகளுக்கு எதிரான போரில் ஈடுபட் டுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தென் மேற்கு ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க முகாமில் பெர்க்க தாஹி (24) என்ற வீரரை திடீரென ஆனவில்லை.

மாயமான அவரை தலிபான் போராளிகள் பிடித்து சென்று சிறை வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அவருக்கு திடீரென மன மாற்றம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து அவர் தலிபான் போராளிகளுக்கு உதவி செய்ய தொடங்கினார். இதாகோ பகுதியில் உள்ள சன் பள்ளத்தாக்கில் அவர்களுக்கு போர் பயிற்சி அளித்தார்.

மேலும் அவர்களுக்கு வெடி குண்டுகள் தயாரிப் பது, மற்றும் வாகன அணி வகுப்புகளை குண்டு வைத்து தகர்ப்பது, செல்போன்களை ரோட்டோரம் குண்டுகளை வெடிக்க செய்யும் ரிமோட் கண்ட்ரோல்களாக மாற்றுவது குறித்து பயிற்சி கொடுத்துள்ளார்.
இந்த தகவலை பக்திகா மாகாண தலிபான் துணை கமாண்டர் ஹாஜி நதீம் தெரிவித்துள்ளார். இதை ஆப்கானிஸ்தானின் உளவுத் துறையும் உறுதி செய்துள்ளது.
அமெரிக்க வீரர் பெர்க்தாகி குறித்த தகவல்களை தெரிவித்த 2 உளவாளிகளை தலிபான்கள் கொன்றதும் தெரியவந்துள்ளது. எனவே, அவரை மீட்கும் முயற்சியில் அமெரிக்க ராணுவம் தீவிரமாக உள்ளது. மலைப் பகுதியில் உள்ள தலிபான்களின் முகாம்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

நடைபாதை கோவில்கள் தமிழகத்தில் அதிகம்: சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி : நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகளவில் நடைபாதை கோவில்கள் உள்ளன. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வழிபாட்டு தலங்களை அகற்றும்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதன்படி பல மாநிலங்களில் நடைபாதை கோவில்கள், சர்ச்சுகள், மற்ற வழிபாட்டு சின்னங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இன்னும் பல மாநிலங்களில் இந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை என, பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இது பற்றி சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியும், அம்மாநிலத்தின் சார்பில் உரிய பதில் அளிக்கப்படவில்லை.

இது குறித்து நீதிபதி தல்வீர் பண்டாரி தலைமையிலான சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் குறிப்பிடுகையில், "நடைபாதை அல்லது போக்குவரத்துக்கு இடைஞ்சலாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் உள்ள வழிபாட்டு தலங்களை அகற்ற வேண்டும். அகற்றவில்லையெனில் அது குறித்த காரணத்தை சம்பந்தப்பட்ட மாநிலத்தின் தலைமை செயலர் சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் இது குறித்த நடவடிக்கை பற்றிய முழு விவரமும் தேவை' என, உத்தரவிட்டுள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகளவில் போக்குவரத்துக்கு இடையூறாக வழிபாட்டு தலங்கள் உள்ளன. அதாவது 77 ஆயிரத்து 450 வழிபாட்டு தலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் 58 ஆயிரத்து 253 இடங்களிலும், குஜராத்தில் 15 ஆயிரம் இடங்களிலும் வழிபாட்டு தலங்கள் போக்குவரத்து இடையூறாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ளன. அருணாச்சல பிரதேசத்தில் மட்டும் எந்த ஒரு வழிபாட்டு தலமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்படவில்லை என, அந்த மாநிலத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.