ப்ரிஸ்டினி:முஸ்லிம்கள் அணியும் தலை முக்காடை (headscarves) பள்ளி கூடங்களில் அணிவதைத் தடைச் செய்யும் அரசின் முடிவை எதிர்த்து பொது மக்கள் கடந்த வெள்ளிக்கிழமை கொசோவோ தலைநகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொசோவோ மக்கள் தொகையில் 90 சதவீதம் மக்கள் முஸ்லிம்கள். 2008-ம் ஆண்டு செர்பியாவிடம் இருந்து விடுதலை அடைந்து தனி சுதந்திர நாடானது.
இப்போராட்டத்தில் நாட்டில் பல பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டு அரசின் இம்முடிவை திரும்பப் பெற வேண்டும் மேலும் முஸ்லிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
"எங்கள் பெண் குழைந்தைகள் தலை முக்காடு அணிந்து பள்ளிக்கு செல்ல அனுமதிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்" என்று போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஹலீல் கஸ்ட்ரடி தெரிவித்தார்.
'எங்கள் நாட்டை எங்களுக்கு எதிராக பயன்படுத்தாதே' 'கம்யூனிசம் முடிந்து விட்டது' என்ற வாசகங்களை கொண்ட தட்டிகளுடன் தலை முக்காடு அணிவதை தடை செய்ய அனுமதி அளித்த கல்வி அமைச்சகத்தின் முன் போராட்டம் செய்தனர்.
"தலை முக்காடு அணிவது சீருடையல்ல, ஆனால் இது எங்கள் மத கோட்பாடு நாங்கள் எங்கள் மார்க்கத்தை மதிக்கிறோம், எங்கள் மதத்தின் படி வாழ வேண்டும்" என ஃபிதோர் அபாஸி என்ற மாணவி கூறினார்.
இதுவரை ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க மற்றும் சில முஸ்லிம் நாடுகள் உட்பட 69 நாடுகள் கொசோவோவை அங்கீகரித்துள்ளன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...