துபாயில் இருந்து புனே வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென 7,000 அடி கீழே தாவி, எதிரே வந்த விமானத்துடன் மோத இருந்த விபத்து மாபெரும் தவி்ர்க்கப்பட்டுள்ளது.கடந்த 26ம் தேதி, மங்களூர் விமான விபத்து நடந்த 4 நாட்களில், மஸ்கட் வான் வெளியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
துபாயிலிருந்து புனே வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை 'ஆட்டோ பைலட்' கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு, விமானி அனுபம் திவாரி சிறுநீர் கழிக்கச் சென்றார். காக்பிட்டில் துணை விமானி இருந்தார்.அப்போது அந்த விமானம் மஸ்கட் மீது 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இந் நிலையில் வானில் வெற்றிடத்தில் (air pocket) நுழைந்த விமானம், கட்டுப்பாட்டை இழந்தது. விமானத்தை ஆட்டோ பைலட் சிஸ்டமும் தனது கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்துவிட்டது.இதையடுத்து அந்த விமானம் 5,000 அடி கீழே குதித்தது. விமானத்தை துணை விமானி கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்.இதையடுத்து டாய்லெட்டில் இருந்து ஓடிவந்த பைலட், பாஸ்வேர்டைப் போட்டு காக்பிட்டின் கதவைத் திறக்கவே 2 நிமிடங்களாகியுள்ளது. அதற்குள் விமானம் நிலைதடுமாற ஆரம்பித்துள்ளது.ஒரு வழியாக கதவைத் திறந்து தனது சீட்டுக்குத் தாவிய விமானி, விமானத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். அதற்குள் 3 நிமிடங்கள் ஆகிவிட்டன.
இந்த நேரத்துக்குள் விமானம் மேலும் 2,000 அடி கீழே பாய்ந்துள்ளது.அது போயிங் 737 ரக விமானமாகும். அதில் 118 பேர் இருந்தனர். இந்த சம்பவத்தால் யாரும் காயமடையவி்ல்லை.இந்த விமானம் தான் பறக்க வேண்டிய உயரத்திலிருந்து கீழே இறங்கியதால், எதிரே வந்த ஒரு விமானத்துடன் மோதும் அபாயம் ஏற்பட்டது. பின்னர் இரு விமானங்களின் விமானிகளும் அதைத் தவிர்த்துள்ளனர்.இந்த சம்பவத்தையடுத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் பைலட்டும், துணை பைலட்டும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.ஆட்டோ பைலட் சரியாக செயல்படவில்லை என்று இரு விமானிகளும் குற்றம் சாட்டியுள்ளதாகத் தெரிகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...