Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 20, 2010

இஸ்லாமியோ போபியா:மேற்குலகிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை தேவை, முஸ்லீம் நாடுகள் ஐ.நா கூட்டத்தில் வலியுறுத்தல்

வாஷிங்டன்:மேற்குலக நாடுகளும் அவற்றின் பல ஊடகங்களும் உமிழ்ந்து வரும் இஸ்லாமிய வெறுப்புணர்வினையும், விரோத போக்கினையும் ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக துடைத்தெறிய உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென முஸ்லீம் நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

ஐ.நா சபையின் மனித உரிமைக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான், எகிப்து உட்பட பல்வேறு முஸ்லீம் நாடுகளின் பிரதிநிதிகள் இதில் பங்கு பெற்றனர்.

அதில் மேற்குலக நாடுகள் முஸ்லீம்களை நடத்தும் விதம், முஸ்லீம்களை தெளிவான ஓர் இன ஒதுக்கலுக்கும், இன வேற்றுமைக்கும் உள்ளாக்குவதை வெளிப்படுத்துகின்றது என்று கூறியுள்ளனர்.


"அரபு வம்சாவழியினர் புதிய இன வேற்றுமை, இன ஒதுக்கல், கலாசார பாகுபாடு, மற்றும் இது தொடர்பான தொல்லைகளையும் எதிர் கொண்டு வருகின்றனர். மேலும் தனிமைப்படுத்துதல் மற்றும் ஒதுக்கப்படுதலுக்கும் உள்ளாகி வருகின்றனர்" என எகிப்து பிரதிநிதி கூட்டத்தில் குறிப்பிட்டார்.

57 இஸ்லாமிய நாடுகளை உள்ளடக்கிய இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC) சார்பாக பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி "ஐ.நா வின் மனித உரிமை குழு ஓர் சிறப்பு விசாரணை குழுவினை பல்வேறு நாடுகளின் மத சுதந்திரத்தை ஆராயவும், உறுதி செய்யவும் நியமிக்கப்பட வேண்டும்" எனவும், மேலும் இது தொடர்பான தீர்மானத்தையும் முன் மொழிந்தார்.


மேலும் பல்வேறு நாடுகளின் கலாச்சார வேற்றுமையையும், மத பாகுபாட்டை போக்கி ஓர் சகிப்பு தன்மையுள்ள சூழலினை உருவாக்ககூடியதாக இருக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார். OICயும், ரஷ்யா, சீனா, கியூபா உட்பட அதன் 47 கூட்டணி நாடுகளும் முஸ்லீம்களை தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்துவதையும், இஸ்லாமிய விரோத போக்கினையும் கடுமையாக கூட்டத்தில் சாடியுள்ளனர்.

இந்த விசாரணைக்குழு ஐ.நாவின் மனித உரிமை குழுமத்திற்கு அதன் உறுப்பு நாடுகளின் மத சுதந்திரத்தை பாதுகாக்க, பலப்படுத்த தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.


OIC உட்பட பல்வேறு நாடுகள் ஏற்கனவே இதற்கான முயற்சியில் இணைந்து செயல்பட துவங்கியுள்ளன. பெரும்பாலான நாடுகள், வளர்ந்து வரும் இந்தியா, பிரேசில் போன்றவை இதில் இணைந்துள்ளன.மேற்கொண்டு ஈரான், இலங்கை உட்பட பிற நாடுகளை இதில் இணைய செய்வது மிக அவசியம்.

பெரும்பாலான நாடுகள் ஹமாஸின் நிர்வாகத்தில் உள்ள ஃபலஸ்தீனின் காஸ்ஸா பகுதியில் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் மனித உரிமை மீறல்களையும், ஆக்கிரமிப்பையும் கடுமையாக கண்டித்தன.


செவ்வாய் கிழமை நடந்த கூட்டத்தில் நார்வே ஈரானின் அணு உலை செறிவாக்க நடவடிக்கையை ஐ.நாவின் பிரிவு 56 கீழ் கண்டித்தது. இருந்த பொழுதும் ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் எலின் சம்பர்லின் ஈரானுக்கு எதிரான ஐ.நாவின் தீர்மானத்தை குறை கூறினர்.

ஈரானுக்கு எதிரான ஐ.நாவின் தீர்மானம் நிறைவேற்றிய போதும், ஈரானின் வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகவே இது பார்க்கப்படுகின்றது.
14 நாடுகள் மட்டுமே உள்ள பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு மாற்றாக OIC உட்பட மனித உரிமைகளை காக்க பாடுபடும் நாடுகள் செயல்படுவது மனித உரிமை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.


மேலும் ஐ.நா வால் அங்கிகரிக்கப்பட்ட மனித உரிமை இயக்கங்கள் ஐ.நா வின் ஈரானுக்கு எதிரான தீர்மானம் "அமெரிக்காவின் திட்ட அறிக்கை" என கடிந்துள்ளன.

சர்வதேச மனித உரிமை மற்றும் நன்னெறி கூட்டமைப்பின் நீண்ட கால தலைவராக இருந்த ராய் பிரவுன் ஐ.நா சபையில் மேற்குலக நாடுகளின் இது போன்ற தீர்மானங்களை இதற்கு முன் பார்க்கவில்லை என இஸ்லாமியோ போபியா விற்கு எதிரான தீர்மானம் பற்றி கூறியுள்ளார்.


ஐ.நாவில் உள்ள பல ஓட்டைகள் மேற்குலகால் பயன்படுத்தப்பட்டது. இனி அது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் 2006 இல் தொடங்கப்பட்ட மனித உரிமை முயற்சி இப்பொழுது பயனளிக்க தொடங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...