கடலூர் மாவட்டத்தில் இன்று துவங்கும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் 5 ஆயிரத்து 187 ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். நாட்டின் 2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த பணி தமிழகத்தில் இன்று முதல் வரும் 15ம் தேதிவரை நடக்கிறது.
இந்த கணக்கெடுப்பில் வழக்கம் போலின்றி, தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான தகவல்களும் சேகரிக்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் எளிதாக செய்திட 4 ஆயிரத்து 121 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இப்பணியை ஏழு தாசில்தார்கள், ஐந்து நகராட்சி கமிஷனர்கள், நெய்வேலி துணை பொது மேலாளர் (கல்வி) ஆகியோர் தலைமையில் 4 ஆயிரத்து 36 ஊழியர்களும், 751 கண்காணிப்பாளர்களும் ஈடுபடுகின்றனர். இவர்கள் தினசரி 100 முதல் 150 வீடுகளுக்கு நேரடியாக சென்று குடும்ப தலைவர், குடும்ப உறுப்பினர்கள், உறவுமுறை, பாலினம், வயது, தொழில், ஆண்டு வருமானம், கல்வித் தகுதி, நிரந்தர முகவரி, தற்போதைய முகவரி போன்ற விவரங்களை சேகரிக்க உள்ளனர். தேசிய மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி மாவட்டத்தில் முழுமையாக செய்து முடித்திட, கணக்கெடுக்க வரும் ஊழியர்கள் கேட்கும் விபரங்களை வீட்டில் உள்ளவர்கள் தெரிவிக்குமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் எவர் பெயரும் விடுபடாத வகையில் முழு கவனம் செலுத்தி அப் பணியாளர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய தகவல்களை கொடுத்து பதிவு செய்யப்பட்டதற்கான ரசீதையும் பெற்று பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.
இந்தியாவில் உள்ள ஒவ் வொருவருக்கும் அடையாள அட்டையான பயோ - மெட்ரிக் கார்டு வழங்கப்பட உள்ளது. இந்த அடை யாள அட்டைதான் இனி அனைத்து அரசு காரியங்களுக்கும் பயன்படும். முஸ்லிம் பெயர்களில் குளறுபடி வராமல் இருப்பதற்கு பெயர்களை தெளிவாக நாமே எழுதிக் கொடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...