சிதம்பரம் நகரில் அனைத்து சாலைகளும் இருவழிப் பாதையாக மாற்றப்பட்டதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு தினந்தோறும் விபத்துகள் நடக்கின்றன.÷குறிப்பாக மேலரத வீதி, தெற்குரத வீதி, சபாநாயகர் தெரு, போல்நாராயணன் தெரு ஆகியவை ஒருவழிப் பாதையாக இருந்தன. தற்போது நகர காவல் துறையினர் அவற்றை இருவழிப் பாதையாக மாற்றியதால் இருபுறமும் வாகனங்கள் செல்வதால் தினந்தோறும் விபத்து நடக்கிறது.
மேலரதவீதி இருபுறமும் நடைபாதை வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் நிறுத்தப்படும் வாகனங்களை தாண்டி போக்குவரத்துக்கு குறுகிய சாலையே உள்ளது. இந்நிலையில் அச்சாலை இருவழிப் பாதையாக மாற்றப்பட்டதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வடக்குரத வீதியில் நிறுத்தப்படும் லாரிகளாலும், கீழரத வீதியில் நிறுத்தப்படும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களாலும் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
சிதம்பரம் மற்றும் அண்ணாமலை நகரில் ஆட்டோக்களின் எண்ணிக்கை மிக அதிகம். இவற்றில் பாதிக்கும் மேலான ஆட்டோக்கள் பர்மிட், லைசென்ஸ், காப்பீடு இல்லாமல் இயக்கப்படுகின்றன.÷அளவுக்கு அதிகமாக இயங்கும் மினிடோர் லாரிகள், ஆட்டோக்களினால்தான் சிதம்பரம் நகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. ÷மேலரத வீதி, தெற்குரத வீதி, பஸ் நிலையம் பகுதியில் ஆட்டோக்கள் சவாரியை தேடி எதிரும், புதிருமாக செல்வதால் பாதசாரிகளும், இருசக்கர வாகனங்கள் ஓட்டுவோரும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.÷அரசு மருத்துவமனை, அண்ணாமலைப் பல்கலை மற்றும் சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் முக்கியத் தெருவான போல்நாராயணன் தெருவில் உள்ள ஹோட்டலுக்கு வரும் வாகனங்கள் முழுவதும் சாலையிலேயே நிறுத்தப்படுவதால் அத்தெருவில் அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பித்து பொதுமக்கள் பெரும் அவதிகுள்ளாகின்றனர்.
ஹோட்டலுக்கு பார்க்கிங் வசதி இல்லாததால் அனைத்து வாகனங்களும் சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன. காவலர்கள் பற்றாக்குறை: சிதம்பரத்தில் போக்குவரத்து காவல் நிலையம் தொடங்கப்பட்டும் போதிய இடம், போதிய காவலர்கள் இல்லாததால் அவர்களால் போக்குவரத்து நெருக்கடியை போக்க முடியவில்லை. சிதம்பரம் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 16 போலீஸôர் இருக்க வேண்டும். ஆனால் தற்போது ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 6 போலீஸôர்தான் பணியாற்றுகின்றனர். எனவே கூடுதலாக போலீஸôர் நியமிக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள், முதியோர் இந்த போக்குவரத்து நெருக்கடியினால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே கடலூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் சிதம்பரம் நகரின் போக்குவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிதம்பரம் நகரவாசிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...