Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 24, 2010

காஸ்ஸாவுக்கு உதவ எகிப்திடம் வழியை எதிர்நோக்கும் ஈரான்

மனிதநேய மற்றும் மருத்துவ உதவிகள் கொண்ட ஒரு கப்பலை காஸ்ஸாவிற்காக தயார்செய்து வைத்திருப்பதாகவும், வழிக்காக எகிப்தின் பதிலை எதிர்ப்பார்த்திருப்பதாகவும் ஈரான் கூறியிருக்கிறது.


இதுக்குறித்து ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரமின் மெஹ்மன்பரஸ்ட் செய்தியாளர்களிடம் பேசுகையில்,"காஸ்ஸாவில் வறுமையில் வாடும் மக்களுக்கு கப்பலில் பொருட்களை அனுப்பும் ஏற்பாடுகள் குறித்து எகிப்திய அரசிடம் தொடர்பு கொண்டிருப்பதாகவும், வழிதிறக்க எகிப்து ஏதும் முயன்றால் எல்லா நாடுகளாலும் பாராட்டப்படும். காஸா மக்களுக்கு எகிப்து வழிதிறக்குமாயின் வரலாற்று சிறப்பு பெறும் என்று கூறியுள்ளார்.


சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் அதிகாரிகளுக்கு அனுமதி மறுத்த டெஹ்ரானின் முடிவு குறித்து ஈரானிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.


அணுசக்தி அதிகாரிகள் அவர்களுடைய விதிகளை மீறினால் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் வேறு அதிகாரிகளை கோரவும் உறுப்பினர் நாடுகளுக்கு உரிமை உள்ளதாக கூறியுள்ளார்.


ஈரானுக்கு எதிராக வாக்களித்த 12 ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் நாடுகளுக்கும் அதிருப்தி கடிதம் அனுப்ப திட்டமிட்டிருப்பதையும் உறுதி செய்தார்.


ஈரான்-பாகிஸ்தானிடையே குழாய் வழியாக எரிவாயு அனுப்பும் திட்டத்தை அமெரிக்க அதிகாரிகள் பிரச்சாரம் செய்து தடுப்பதாகவும் தெரிவித்தார்.


நாடுகளுக்கிடையே இருக்கவேண்டிய ஒற்றுமையை வலியுறுத்தி, ஈரான் இந்த பிரச்சாரத்தை தாண்டி வெற்றியடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


மெக்சிகோ வளைகுடாவில் ஏற்பட்ட எண்ணைக்கசிவுக்கு உதவ ஈரான் தயாராக இருப்பதாக கூறிய அவர், இந்தநெருக்கடி நிலையில் சரியான நடவடிக்கை எடுக்காதது அமெரிக்காவின் இயலாமையையே காட்டுகிறது. அபாயம் மனிதாபிமானம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்ததாக இருப்பதால் அனைத்து நாடுகளின் பங்கீடும் இதில் அவசியம் என்றார்.
presstv

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...