டர்பன்:தென்னாப்பிரிக்கா தலைநகர் டர்பனில் உலகக் கோப்பை கால்பந்தாட்டத்திற்கெதிராக சுமார் 3000 தென்னாப்பிரிக்கர்கள் போராட்டம் நடத்தினர்.அரசின் ஆர்ப்பாட்ட, ஆடம்பரச் செலவுகளுக்கெதிராக அவர்களின் போராட்டம் அமைந்தது.
நிறவெறிக்கெதிராக நடந்த சொவிடோ எழுச்சியின் 34 வது ஆண்டு நினைவு நேற்று(16 ஜூன்) நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி நடந்த பேரணியில் FIFA உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளுக்காக அரசு ஆடம்பரமாகச் செலவு செய்வதைக் கண்டித்து ஆக்ரோசமாகக் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இலட்சக்கணக்கான மக்கள் ஏழ்மையில் ஏங்கிக் கொண்டிருக்கும் பொழுது இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த பேரணியை ஒருங்கமைத்த ஆலன் மர்ஃபி கூறுகையில், "மிகப்பெரும் பொருட்செலவில் கால்பந்து மைதானங்களை புனரமைக்கவும், வாங்கவும் செய்தால், இங்கு இலட்சக்கணக்கானோர் வீடுகளின்றி இருக்கக் கூடாது" என்று தனது ஆதங்கத்தை அரசுக்கு வெளிப்படுத்தினார்.
பேரணியின் போது "FIFA கொள்ளைக் கும்பலே வெளியேறு" என்ற கோஷம் விண்ணை முட்டியது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...